என் மலர்
நீங்கள் தேடியது "தெப்ப உற்சவ விழா"
- நந்தவன தோட்டத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
- சிவன்மலை சுப்பிரமணியசாமி மலைக் கோவிலில் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.
காங்கயம் :
காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழாவையொட்டி பிப்ரவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள நந்தவன தோட்டத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையொட்டி பரிவேட்டை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளியும், தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்தும் தெப்ப உற்சவம் நடைபெற்றது. பின்னா் அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோவிலுக்கு சுப்பிரமணியா் திரும்பினாா். வருகிற 14-ந்தேதி மாலை 3 மணிக்கு சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மலைக் கோவிலில் திருவிழா கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீா்த்துறை சேர்த்தலுடன் சிவன்மலை சுப்பிரமணியசாமி மலைக் கோவிலில் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.
- 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் 150 மிதவைகள் தெப்பம் கட்டமைக்கப்பட்டது.
- மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்ப உற்சவ விழா வெகு நடை பெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடான ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 25 அடி நீளமும் 25 அடி அகலத்துடன் பிரம்மாண்டமான முறையில் 150 மிதவைகள் தெப்பம் கட்டமைக்கப்பட்டது.
தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தெப்ப உற்சவ விழா வெகு விமர்சையாக நடை பெற்றது.
முன்னதாக சிறப்பு மலர் அலங்காரத்தில், ஸ்ரீ முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் படிசட்டத்தில் ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டு பின்னர் தெப்பத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து நாதஸ்வரம், வயலினுடன் மேள தாளங்கள் முழங்க தெப்பம் மூன்று முறை வலம் வந்ததது.
பாதுகாப்பு பணிக்காக தெப்பத்தை பின் தொடர்ந்து காற்று நிரப்பப்பட்ட மிதவை படகுடன் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் மற்றும் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
40 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தெப்ப உற்சவத்தில் நூற்றுகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
- 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
- 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் இங்குள்ள ஆனந்தசஸட குளத்தில் தான் உள்ளார். இந்த குளம் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே திறக்கப்படும்.
இந்த முறை 3 நாட்கள் தெப்ப உற்சவத்திற்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் என மொத்தம் 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தாயாருடன் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
முதல் நாள் என்பதால் மூன்று சுற்றுகள் தெப்பம் சுற்றிவந்தது. 2-வது நாளான இன்று 5 சுற்றுகள், 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.
இதில் திரளான பக்தர்கள் கலந்த கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர்.