என் மலர்
நீங்கள் தேடியது "வேண்டுதல்"
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லூர்து அன்னை எழுந்தருளி தேர்பவனி.
- பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
கும்பகோணம்,:
திருப்பனந்தாள் ஒன்றியம், மானம்பாடியில் உள்ள புனித லூர்து அன்னை திருத்தலத்தில் ஆண்டுதோறும், தேர்பவனி, கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு விழா கடந்த 9-ந்தேதி மறைமாவட்ட உதவி பங்கு தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் திருக்கொடி ஏற்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து அருட்தந்தையர்களால் ஜெபமாலை, நவநாள் ஜெபம், கூட்டு திருப்பலி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
முன்னதாக திருப்பலி மற்றும் மறையுரை அருள் செபஸ்தியான் மற்றும் மாலை ஜெபமாலை நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை பங்கு தந்தைகள் நடத்தினர்.
இனைததொடர்ந்து நேற்று வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித லூர்து அன்னை எழுந்தருளி தேர்பவனி சிறப்பாக நடைபெற்றது.
தேர் பவனியின் போது, பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்த நிகழ்வில் ஏராளமானோர் கிறிஸ்த வர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டாமை ஆரோக்கியசாமி யாக்கோப் தலைவர் இஸ்ரேல் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
- 108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று.
- சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வியாபாரம் விருத்தி அடையும்.
நினைத்ததை அருளும் திருமோகூர் காளமேகப் பெருமாள்!
மதுரையில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருமோகூர் தலம் அமைந்துள்ளது.
இவ்வாலயத்தில் காளமேகப் பெருமாள், மோகன வள்ளித் தாயார், சக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண்டாள் சந்நதிகள் இருக்கின்றன.
108 வைணவ தலங்களில் இதுவும் ஒன்று.
தொடர்ந்து பனிரெண்டு வாரம் அர்ச்சனை செய்தால், நினைத்த காரியம் நடக்கும்.
திருமணம் ஆகாத கன்னிப்பெண்களும், ஆண்களும், தொடர்ந்து 12 வெள்ளி, 12 புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து வந்தால் திருமணம் நடைபெறும்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் புதன், வியாழக்கிழமைகளில் 12 வாரம் குழந்தை வேண்டி அர்ச்சனை செய்தால் குழந்தைப்பேறு கிடைக்கும்.
வியாபார விருத்தி அடைய சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால் வியாபாரம் விருத்தி அடையும்.
செய்வினைக் கோளாறு உள்ளவர்கள் 12 செவ்வாய்க்கிழமை தோறும் தொடர்ந்து வழிபட்டால் குறைகள் நிவர்த்தி ஆகும்.
- குழந்தைகள் நலம் பெற எத்தனை கோவில்களுக்கு வேண்டுமானலும் செல்ல தயாராகின்றனர்.
- முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
பெற்றோர் வேண்டுதலை ஏற்று குழந்தைகளுக்கு நலம் அருளும் மாற்றுரைவரதர்!
குடும்பங்களின் எதிர்காலம் குழந்தைகள் கையில்.
அதனால் தான் அவர்களின் நலனில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
கண்ணின் மணிபோல குழந்தைகளை ேபணி வளர்க்கின்றனர்.
குழந்தைகளுக்கு எதாவது நோய்கள், கஷ்டங்கள் வரும்போது பெற்றோர்கள் துடித்து விடுகின்றனர்.
அப்போது அவர்கள் வேண்டாத தெய்வங்களே கிடையாது.
குழந்தைகள் நலம் பெற எத்தனை கோவில்களுக்கு வேண்டுமானலும் செல்ல தயாராகின்றனர்.
பெற்றோரின் வேண்டுதலை கேட்டு குழந்தைகளுக்கு நலம் அருளும் தெய்வம் திருச்சி அருகே உள்ள திருவாசி கிராமத்தில் வீற்றிருக்கிறார்.
இங்குதான் மாற்றுரைவரதீஸ்வரர் கோவில் கொண்டுள்ளார்.
முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
இப்பகுதியை கொல்லி மழவன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான்.
மன்னனின் மகள் தீராத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள்.
மன்னன் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை.
எனவே, அவளை இக்கோவிலில் கிடத்தி விட்டு, அவளது பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சுவாமியிடம் விட்டுவிட்டு சென்று விட்டான்.
அச்சமயத்தில் திருத்தல யாத்திரையாக திருஞான சம்பந்தர் இத்தலம் வந்தார்.
அவர் சுவாமியின் முன்பு கிடந்த பெண்ணைக் கண்டார்.
அந்நேரத்தில் சம்பந்தர் வந்திருப்பதை அறிந்த மன்னன் கோவிலுக்கு வந்தான்.
திருஞானசம்பந்தரிடம் மன்னன், தன் மகளின் நோயைக் கூறி அவள் குணமடைய வழி சொல்லும்படி கேட்டுக்கொண்டான்.
மன்னனின் நிலையை அறிந்த சம்பந்தர் நடராஜரைக் குறித்து பதிகம் பாடினார்.
அவரது பாடல் கேட்ட நடராஜர் ஆனந்த நடனம் ஆடினார்.
மன்னன் மகளை பிடித்திருந்த நோயை அழித்து நாகத்தின் மீது ஆடினார்.
மன்னன் மகள் குணமாகி எழுந்தாள். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள நடராஜர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார்.
இவரை "சர்ப்ப நடராஜர்" என்கின்றனர். நடராஜரின் இந்த தரிசனம் அபூர்வமானதாகும்.
இத்தலத்து அம்பாள் பாலாம்பிகை, கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தாள்.
வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டாள்.
இவள் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில், மேற்கு பார்த்தபடி இருக்கிறாள்.
இவளது சன்னதியில் வித்தியாசமாக துவார பாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர்.
இவர்கள் மூலமாக அம்பாள் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறாள் என்பது நம்பிக்கை.
அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது.
குழந்தை பிறந்தவர்களும், பாலதோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
இவ்வாறு செய்வதால் குழந்தைகள் வாழ்வில் நோய்கள் இன்றி சிறப்பாக வாழ்வர் என்பது நம்பிக்கை.
- அம்மனுக்கு நான்கு திருக்கரங்கள் இருக்கின்றன.
- அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது.
மேல் மலையனூர் அங்காளம்மன்-அம்மன் உருவ விளக்கம்
மேல் மலையனூர் அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.
அம்மனுக்கு நான்கு திருக்கரங்கள் இருக்கின்றன.
வலக்கரங்களில் உடுக்கை, கத்தி, இடக்கையில் கபாலம், திரிசூலம் ஏந்தி இடக்காலை மடித்து, வலக்காலால் பிரம்மனின் தலையை மிதித்தவாறு காட்சி தருகிறார்.
பீடத்தின் கீழே பிரம்மனின் 4 முகங்களும் உள்ளன.
அருகில் சிவபெருமான் சிறிய உருவத்தில் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார்.
அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது. (அம்மன் முதலில் புற்றுருவாக இருந்தார் என்பதற்கு சாட்சியாக இன்றும் உள்ளது)
அம்மன் நாக வடிவில் உள்ளார் என்று இன்றளவும் பக்தர்களாலும், பூசாரிகளாலும் நம்பப்பட்டு வருகிறது.
நம்பியவர்களுக்கு மட்டுமே அம்மன் பாம்பு உருவில் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது.
இந்த புற்றின் வடிவம் அம்மன் காலை நீட்டி உட்காந்திருப்பது போல் உள்ளது.
இந்த இடத்தில் இருந்து எடுக்கும் மண் பக்தர்களுக்கு பிரசாதமாகவும், அத்துடன் மஞ்சள், குங்குமம் வைத்து வழங்கப்படுகின்றன.
- கோவில் புற்றின் இடது புறத்தில் காவல் தெய்வங்கள் உள்ளன.
- வெளியில் நடராஜர், மாரியம்மன் சிலைகள் உள்ளன.
கோவில் அமைப்பு
இக்கோவில் புற்றின் இடது புறத்தில் வீரன், சூரன், உக்கிரன், ரணவீரன், அதிவீரன், வீரபத்திரன், பாவாடை ராயன், சங்கிலி கருப்பன், கருப்பன், முத்து கருப்பன், வேதாளம் போன்ற காவல் தெய்வங்களும்,
வெளியில் நடராஜர், மாரியம்மன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கோவிலின் உட்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர் அன்னபூரணி, கோபால விநாயகர், தலவிருட்சம் (மயில் கொன்றை) ஆகியவைகளும்,
வெளிப்பிரகாரத்தில் பாவாடைராயன், மயானக்காளி, அம்மனின் பாதம், கங்கையம்மன், படுத்த நிலையில் உள்ள பெரியாயி அம்மன் ஆகியவையும் உள்ளன.
- இக்கோவிலின் தல விருட்சமாக வாகை மரம் உள்ளது.
- இங்கு தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் பெறலாம் என நம்பப்படுகிறது.
தொட்டில் கட்டினால் குழந்தை
இக்கோவிலின் தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது.
இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.
திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது.
மேலும், கணவனை பிரிந்திருப்பவர்கள் மற்றும் கணவனின் தொந்தரவுக்கு ஆளாகி இருப்பவர்கள் இங்கு வந்து அங்காளபரமேஸ்வரியை வழிபட்டால் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.
- விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது.
- உடனே அந்தப் பெண் அருள் வந்து கூச்சலிடுவாள்.
தீய சக்திகள் ஓடி விடும்
விசேஷ நாட்களில் குறி சொல்லப்படுகிறது.
பிள்ளைப்பேறு, வேலையின்மை, திருமணப் பிரச்சினை, இப்படிப் பல பிரச்சினைகளுக்கும் குறி பார்ப்பதுண்டு.
அவர்களே அதற்கான பரிகாரமும் கூறுவர்.
பேய் பிடித்த பெண்களைக் கூட்டி வந்து அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்வித்து ஈரப்புடவையுடன் கூட்டி வருகிறார்கள்.
அந்நேரம் பூசாரி ஒருவர் அப்பெண் தலை மீது மந்திரக் கோலை வைத்துத் தடவி கபால ஜலத்தைத் தெளிப்பார்.
உடனே அந்தப் பெண் அருள் வந்து கூச்சலிடுவாள்.
பிறகு மேளம் பம்பை முழங்கும்..
பேய் பிடித்த பெண் ஆவேசமாக கத்தியபடி, தலையை விரித்து ஆடத் தொடங்குவாள்.
இப்படி வெறியாட்டம் ஆடி பூசாரியிடமிருந்து செல்லத் துடிப்பாள்.
உடனே பூசாரிகள் கற்பூரம் ஏற்றி அவளிடம் கொடுப்பார்.
அதை அவள் வாயில் போட்டு விழுங்குவாள் அவளிடம், நீ யார், எதற்காக இவளைப் படித்தாய்? என்று பூசாரி கேட்பார்.
இதன் மூலம் அந்த தீய சக்தி பற்றிய விபரம் தெரியும்.
அந்த தீய சக்தியிடம் பேசி உறுதிமொழி வாங்கிக் கொண்டு அதை அங்காளம்மன் துணையுடன் விரட்டி விடுவார்கள்.
அப்புறம் சிறிது நேரத்தில் அந்த பெண் அமைதிப்படுகிறாள்.
இதன் மூலம் அந்த பெண் தீய சக்தியிடம் இருந்து விடுப்பதை உறுதி செய்கிறார்கள்.
- தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே இதுதான்.
- தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே மேல்மலையனூர் ஆகும்.
மேல்மலையனூர் - முதல் சக்தி பீடம்
ஆதி சதுர்யுகத்தில் கிரேதா யுதத்திற்கு முன்பான மணியுகத்தில் முதல் மூர்த்தியான சிவபெருமானின் பிரமஹத்தி தோசம் நீக்கியும், கலியுக மாந்தர்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டும் அன்னை பராசக்தி சிவ சுயம்பு மண் புற்றுவாக திரு அவதாரம் செய்து ஸ்ரீ அங்காளம்மனாக அருள்பாலிக்கும் புண்ணியத் தலமே மேல்மலையனூர் ஆகும்.
சிவபெருமான் தாட்சாயணி தேவியின் பூத உடலை சுமந்து நர்த்தன தாண்டவம் ஆடியபோது தாட்சாயணி தேவியின் வலதுகையில் புஜம் முதலில் விழுந்த இடமே, தண்டகாரண்யம் என்ற இந்த மேல்மலையனூர் ஆகும்.
போளூர், திருவண்ணாமலை, ஆரணி, செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் போன்ற நகரப் பகுதிகளை உள்ளடக்கிய மிக பரந்த பரப்யையே ஆதியில் தண்டகாருண்யம் என்று அழைத்தனர்.
தண்டகாருண்யத்தின் மையப்பகுதியான இடமே இன்றைய மேல்மலையனூர் ஆகும்.
- தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.
- சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது
புற்று உருவான வரலாறு
மலையனூரின் தேவதையான பூங்காவனத் தாய் ஒரே சிற் சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூரையை இறைக்கும்போது சிவனாரைப் பற்றி இருந்த பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்டது.
அப்போது சிவபெருமான் தாண்டி ஓடி "தாண்டவ ஈஸ்வரனாகவும்" தாண்டிய இடமான மேல்மலையனூரில் "தாண்டேஸ்வரராகவும்" அமர்ந்தார்.
தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.
சிவபெருமானை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்ட பிரம்ம கபாலம் மீண்டும் சிவபெருமானை பற்றிக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானது.
இதைக் கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள்.
இந்நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மன் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைந்துவிட்டார்.
சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது.
அது சிவ சுயம்பு உருவமானது.
அப்புற்றுக்குள் கோயில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றது.
இந்த நிகழ்வுகளை கண்ட பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டிலிருக்கும் மிருக கணங்கள், வனத்திலிருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றன.
ஆனால் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லவில்லை.
இதனால் விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமாக ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுதனர்.
அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லவில்லை.
இந்த காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர்.
அப்போது கலியுகம் பிறந்தது.
கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து போனது.
அந்த புற்றுதான் நாம் இப்போது கோவிலில் காணும் புற்றாகும்.
நாம் எல்லோருக்கும் அருளும் அருள் அம்பிகையான அம் காளம் அம் அன் ஸ்ரீ அங்காளம்மனாக அந்த புற்றில் உறைந்து அமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.
- அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரமஹத்தி விலகிய நாள்.
- ஐந்தாம் நாள் பகல் உற்சவமாக “தீமிதி” திருவிழா கொண்டாடப்படுகிறது.
அங்காளம்மனுக்கு திருவிழா கொண்டாடுவது
கந்தாயத்தின் கடைசி மாதம் மாசி மாதம் அமாவாசையாகும்.
அன்றுதான் சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானுக்கு பிரமஹத்தி விலகிய நாள்.
அன்றுதான் அங்காளி என்ற பூங்காவனத்தாள் அங்காளம்மனாக ஆனாள்.
முந்தைய பதிவில், கலியுகம் பிறந்ததாக அறிந்த வண்ணம் கலியுகத்தில் அந்த பாம்பு படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்ததாகவும் அறிந்த வண்ணம், இந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறவே எழுந்த நிலைகளே திருவிழாக்கள் ஆகும்.
மாசி மாதம் சிவபெருமான் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு வந்து இரவு தங்கியதால், அன்றைய இரவை சிவன் ராத்திரி என்றும்,
அன்று இரவில் கரம் என்ற சக்தி கரக திருவிழாவாகவும்,
மறுநாள் பூரண அமாவாசை தினத்தில் அங்காளி ஆவிகளுக்கும், ஆன்மாக்களுக்கும் பொதுவில் சூரையிடும் நாள், இதையே மயானக்கொள்ளை என்றும்
அன்று தான் அங்காளி அங்காளம்மனாக ஆனாள்.
ஆண்பூத கணங்கள் புற்றை சுற்றி பணிந்தன என்று அறிந்த வண்ணம்,
இரவில் ஆண்பூத வாகனத்தில் அம்மன் பவனி என்னும், மூன்றாம் நாள் பெண் பூதவாகனத்தில் அம்மன் பவனி என்றும்,
நான்காம் நாள், காட்டில் இருக்கும் மிருகத்தின் தலைவன் சிங்க வாகனத்தில் அம்மன் பவனி என்றும்,
ஐந்தாம் நாள் வனத்தில் இருந்த பறவை கணங்கள் தன்னுடைய தலைவனான அன்னத்தை வாகனமாக ஏற்று அன்ன வாகத்தில் அம்மன் பவனி என்றும்,
அன்றைய பகல் திருவிழாவாக கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் என்ற நிலையில் உச்ச கட்டமாக கருதி "தீமிதி" திருவிழாவாகவும் கொண்டாடப் படுகிறது.
ஆறாம் நாள் தேவர் உலகின் ஐராவத்தில் இருந்து தேவர்கள் வந்தனர் என்றும் அவர்களின் வாகனமான ஐராவதத்தில் அம்மன் பவனி என்றும்,
மற்றும் ஏழாம் நாள் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த வகையில் தேவர்களின் உருவமான திருத்தேர் வடிவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர் அதன் நினைவாக ஏழாம் நாள் அம்மன் திருத்தேரில் பவனி என்றும்,
எட்டாம் நாள் கலியுகம் பிறந்ததை நினைவு கூறவே குதிரைவாகனத்தில் அம்மன் பவனி என்றும், ஒன்பதாம் நாள் தான் எடுத்த உருவமான நாகத்தை நினைவு கூறவே 9 தலை நாகவாகனத்தில் அம்மன் பவனி என்றும், பத்தாம் நாள் சத்தாபரணம் அணிந்து அனைவருக்கும் அருள் கொடுக்கும் சத்தாபரணத் திருவிழா என்றும், தெப்பல் திருவிழா என்றும், கொண்டாடப்படுகிறது.
ஆதி முதல் இன்று வரையில் இந்த திருவிழாவில் மாற்றம் இல்லாமல் கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
இந்த 10 நாட்களும் திருவிழாவாக கொண்டாடுவது முழுக்க முழுக்க இந்த அம்மனின் வரலாற்றுத் திருவிழாவாகும்.
தற்கால திருவிழாவாக அங்காளம்மன் வார வழிபாட்டு மன்றத்தில் சார்பாக ஐந்தாம் நாள் பகல் உற்சவமாக "தீமிதி" திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
- பக்தர்கள் மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருகின்றனர்.
- மொட்டை அடிப்பது, காது குத்துவது, போன்ற வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன.
அங்காளம்மன்-வேண்டுதல்கள்
மேலும் இந்த விசேஷ திருவிழா நாட்களில் அங்காளம்மன் தான் எடுத்த அலங்கோல உருவத்தை நிறைவு கூறவே,
ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வேண்டுதல் பெயரில், மொட்டை அடிப்பது, காது குத்துவது, ஆடு, கோழி, அறுத்து, பொங்கல் வைத்து, அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்வது சித்தாங்கு, கஞ்சுலி, கபால வேஷம் அணிந்து வருவது,
மஞ்சள் ஆடை, வேப்பஞ்சேலை அணிந்து வருவது போன்ற வேஷத்துடன் மேல்மலையனூருக்கு திருவிழா காலங்களில் வந்து வேண்டுதல் காணிக்கை பிரார்த்தனைகளான,
பொன், வெள்ளி பணம் போன்ற காணிக்கை உருபடிகளை உண்டியலில் செலுத்தி பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பிரார்த்தனையை செய்து கொள்வார்கள்.
அம்மனின் வரலாற்றை தொடர்புபடுத்தி செய்யும் திருவிழா தமிழ் நாட்டில் வேறு எங்கும் கொண்டாடுவதில்லை.
இந்த மேல்மலையனூரில் மட்டுமே அது திருவிழாவாக கொண்டாடப்படுவது தமிழகத்தின் தனி சிறப்பு.
- இங்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால், நினைத்தது நடக்கும்.
- அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை.
மூன்று அமாவாசை வழிபாடு பயன்கள்
மேல்மலையனூர் தலத்துக்கு மூன்று மாத அமாவாசையில் தொடர்ந்து சென்று வழிபட்டால், நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
இதன் பின்னணியில் உள்ள வரலாறு
ஆற்றல் மிக்க அண்ட சக்திகள் மூன்று. அவை சூரியன், சந்திரன், பூமி ஆகும்.
உருவக உருவங்களை உள்ளடக்கிய ஆண் பெண் என்ற இயக்க சக்தியே பிண்ட சக்தியாகும்.
அண்ட சக்திகள் ஒன்று இணையும் நேரம் அமாவாசை.
பிண்ட சக்திகளாக மனிதனை தோற்றுவித்த ஆவி ஆன்மாவான மூதாதையர்களுக்கு வணக்கத்திற்குரியதாக ஏற்றுக் கொள்ளும் நாள் அமாவாசை.
இந்த நாட்களில் தான் அங்காளி என்ற சிற்சக்தி மயானங்கள் தோறும் ஆவி, ஆன்மா என்ற பிண்ட சக்திகளுக்கு மயானங்களில் சூரையிடும் நாள்
அமாவாசை இரவு பன்னிரண்டு மணி நேரம்.
இந்த நேரங்களில் அங்காளம்மன் திருக்கோயிலில் அமர்த்தப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு அருளாசி வழங்கிடும் அருள்மிகு அங்காளம்மனிடம், மக்கள் தங்களின் குறைகளை வேண்டிக் கொண்டால் அதன்படி, வேண்டியது வேண்டியபடி அவர்களின் வேண்டுகோள் படி நிறைவுபெறுகிறது.
ஆற்றல்மிகு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி என்ற ஆற்றல்களான விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவு ஆற்றல், இவைகளின் உருவ சக்திகளான, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்களின் இயக்கமாக கல்வி, செல்வம், வீரம் என்று சொல்லும் மூன்று ஆற்றல்களும் மூன்று அமாவாசை தோறும் தொடர்ந்து வந்தால் அவர்களுக்கு நிறைவாக நிறையும் என்பதாக கருதியே தொடர்ந்து அமாவாசை தோறும் அங்காளம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.