search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சலவை தொழிலாளி"

    • சலவை தொழிலாளியான தீபாளியின் தந்தை, வீட்டில் படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார்.
    • இந்தியாவில் இருந்து இதற்கு தேர்வான 30 மாணவர்களில், தீபாளியும் ஒருவர்.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி தீபாளி கனோஜ்யா அமெரிக்க வெளியுறவுத் துறை நிதியுதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பை படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆகஸ்ட் 19 அன்று தீபாளி அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார்.

    சலவை தொழிலாளியான தீபாளியின் தந்தை, அவரது கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார். தனது தந்தை படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் வீட்டில் ட்யூஷன் நடத்தி தீபாளி தாய்க்கு உதவி வந்துள்ளார்.

    ஒதுக்கப்பட்ட சமூகம் மற்றும் நலிந்த பொருளாதார பின்னணியை சேர்ந்த பெண்களுக்கு கல்வி வழங்கும் ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளையின் ஒரு பிரிவான பிரேர்னா பெண்கள் பள்ளியில் தீபாலி சேர்ந்து படித்து வந்தார்.

    இது தொடர்பாக பேசிய தீபாளி, "இந்தியாவில் இருந்து இதற்கு தேர்வான 30 மாணவர்களில், நானும் ஒருவர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆசிரியர்களிடமிருந்து அமெரிக்காவை பற்றி நான் தெரிந்து கொண்டேன். ஆனால் நான் எனது படிப்புக்காக அமெரிக்கா செல்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இது எனக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு" என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய தீபாளியின் தாயார், "என் மக்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு சற்று பதட்டமாக இருந்தாலும், நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.
    • தனது பணிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்க முயலுவேன் என தெரிவித்தார்.

    காஞ்சிபுரத்தில் சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.

    காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவில் வசிக்கும் சலவை தொழிலாளியான கணேசன் - மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.

    அதன் பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த 11-ம் தேதி வெளியான முடிவுகளின் படி சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றார் பாலாஜி.

    நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்துப் பேசிய பாலாஜி, "நாள்தோறும் 8 மணி நேரம் இத்தேர்விற்காக பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். தனது பணிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்க முயலுவேன்" என தெரிவித்தார்.

    • வீட்டிலிருந்து வெளியில் சென்ற ஆறுமுகன் அதன் பின் வீடு திரும்பவில்லை.
    • மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்துள்ள ராமலிங்க புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (46). சலவைத் தொழிலாளி.

    இவரது மனைவி பாப்பா (41). கடந்த ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் ஆறுமுகத்துக்கு தலையில் அடிப்பட்டது. தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    விபத்துக்கு பின்னர் அவருக்கு மன நல பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடுவார். பின்னர் அவராகவே திரும்பி வந்து விடுவார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. ஆறுமுகத்தின் மனைவி பாப்பா மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் அவர் கொடுமுடி பஸ்சில் சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து கொடுமுடி பகுதியில் அவரை தேடி வந்த போது கொடுமுடி காவிரி ஆற்றங்கரை இரும்பு பாலம் அருகில் மரத்தில் ஆறுமுகம் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×