என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
காஞ்சிபுரம்: சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு
- சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.
- தனது பணிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்க முயலுவேன் என தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தில் சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.
காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவில் வசிக்கும் சலவை தொழிலாளியான கணேசன் - மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.
அதன் பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த 11-ம் தேதி வெளியான முடிவுகளின் படி சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றார் பாலாஜி.
நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்துப் பேசிய பாலாஜி, "நாள்தோறும் 8 மணி நேரம் இத்தேர்விற்காக பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். தனது பணிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்க முயலுவேன்" என தெரிவித்தார்.