search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் வழங்கும் விழா"

    • ரூ.11 கோடியே 64 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது
    • 697 பேர் பயணடைந்தனர்

    வேங்கிக்கால்:

    புதுப்பாளையம் மற்றும் கலசபாக்கம் வட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நடராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ ஆகியோர் 161 புதிய உறுப்பினர்களுக்கு வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆயிரத்து 697 பயனாளிகளுக்கு ரூ.11 கோடியே 64 லட்சம் ரூபாய் கடன் உதவிகளை வழங்கினர்.

    மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர் ஜெயம் வரவேற்றார். பொது மேலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.

    • சிப்காட் தொழிற்பேட்டை யில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா இன்று முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப் படும். நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

    கிருஷ்ணகிரி,

    ஓசூரில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் சார்பில் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் விழா இன்று தொடங்கியது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு தமிழ்நாடு அரசு நிதிக்கழகம் ஆகும். 1949-ம் ஆண்டு தொடங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

    இக்கழகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    அதன்படி, ஓசூர் பிளாட் எண்.308, 309 சிப்காட்தொழில் வணிக வளாகம், லால் கம்பெனி எதிரில், எஸ்.பி.ஐ. வங்கி அருகில், சிப்காட் தொழிற்பேட்டையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா இன்று முதல் செப்டம்பர் மாதம் 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த சிறப்பு தொழில் கடன் விழாவில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத் தின் பல்வேறு திட்ட ங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம் 3 சதவீதம்) வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்து விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.75 லட்சம் வரை மற்றும் மாநில முதலீட்டு மானியமாக 25 சதவீதம், எந்திரங்களின் மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வரை இந்த சிறப்பு தொழில் முகாமில் வழங்கப்படும்.

    இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.

    இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் பயன்படுத்தி, தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு 04344-278876, 275596 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும்
    • கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு தொழில் முத லீட்டுக் கழகம், மாநில அரசின் ஆதரவுடன் எண்ணற்ற தொழிற் சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

    இந்தக் கழகம் புதிய தொழிற்சாலைகளை, சேவை நிறுவனங்களை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்து வதற்கும் உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் சிறப்புத் திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.

    நாகர்கோவிலில் உள்ள கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நாளை (21-ந் தேதி) முதல் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவிற்கான தொடக்க விழா மாவட்ட கலெக்டர் தலைமையில் 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ளது.சிறப்பு தொழில் கடன் விழாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய-மாநில அரசு களின் மானி யங்கள் (மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது.

    தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.1.50 லட்சம் வரை வழங்கப்படும். இந்த விழா காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும்.

    இந்த அரிய வாய்ப்பினை புதிய தொழில் முனைவோர் ,தொழிலதிபர்கள் பயன்படுத்தி தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய-மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

    மேலும் தகவல்களுக்கு, 04652- 225774, 9445023493 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • ஆசிரியர், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஆசிரியர்களுக்கு ரூ.1 கோடி 84 லட்சம் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று புதுப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் சுந்தர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு ரூ.1 கோடி 84 லட்சம் கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    இதில் கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் சண்முகம்/ ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனியப்பன், பாரதிதாசன், சாந்தமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×