search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் தினவிழா"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடந்தது.
    • ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே காவல் துறையை அணுக வேண்டும். மாணவிகள் போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும் என்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி, உள் புகார்கள் குழு, மாணவர்கள் ஆலோசனைக் குழு மற்றும் மகளிர் மேம்பாட்டுப் பிரிவு ஆகிய அமைப்புகள் இணைந்து உலக மகளிர் தின விழாவை நடத்தியது. விருதுநகர் காவல் துணை கண்காணிப்பாளர் அர்ச்சனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் ரூபாதேவி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், இலக்கை அடைவதற்கு தடைகளாக இருப்பவை அதிகம். ஆனால் எதுவுமே தடைகள் இல்லை என்பதை உணர வேண்டும். எண்ணம் இருந்தால் சாதிக்கலாம். இலக்கை கைவிடக்கூடாது. தயக்கத்தைத் தகர்த்தெறிய வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும். பயம் என்பதே இருக்கக் கூடாது. ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனே காவல் துறையை அணுக வேண்டும். மாணவிகள் போட்டித்தேர்வுகளை எழுத வேண்டும் என்றார். கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் மகாலட்சுமி நன்றி கூறினார்.

    • பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.
    • பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, பன்னாள் அரசு உயர்நிலைப்–பள்ளியில் மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளி மேலாண்மை குழு தலைவர் கார்த்திகா அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரத்திடம் படித்த முன்னாள் மாணவிகளான கருப்பம்புலம் அரசு மருத்துவமனை மருத்துவர் நிலவழகி, பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யகலா, வேதாரண்யம் இந்தியன் வங்கி அலுவலர் ஜெயந்தி, ஆயக்காரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி ஏழிலரசி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

    இதில் பள்ளி தலைமையாசிரியர் மோகனசுந்தரம், ஆசிரியர்கள் யூடஸ்சுகிலா, தேன்மொழி ராதிகா, வைதேகி சுப்ரமணியன், தர்மதுரை மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முடிவில் இளநிலை உதவியாளர் பிரதீபா நன்றி கூறினார்.

    • உலக மகளிர் தினவிழா கம்பைநல்லூர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
    • பெண்களுடைய முன்னேற்ற த்தையும் பெண்களுடைய பொறுப்புகளையும், பெண்கள் குடும்பத்திற்கும், கிராமம் மற்றும் நாட்டுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதை குறித்து பாராட்டி பேசினார்.

    கிருஷ்ணாபுரம்,

    சுருதி ரிசோர்ஸ் செனட்டர் தொண்டு நிறுவனம் சார்பில் உலக மகளிர் தினவிழா கம்பைநல்லூர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

    இந்த விழாவில் சுருதி ரிசோர்ஸ் சென்டரின் இயக்குனர் மகாதேவன் தலைமை தாங்கினார்.

    விழாவில் மகாதேவய்யா கூறுகையில், பெண்களுடைய முன்னேற்ற த்தையும் பெண்களுடைய பொறுப்புகளையும், பெண்கள் குடும்பத்திற்கும், கிராமம் மற்றும் நாட்டுக்கு நல்ல வழிகாட்டியாக இருப்பதை குறித்து பாராட்டி பேசினார்.

    இதில் குறிப்பாக சுருதி தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வரும் கிராமங்கள் அவர்களுடைய வளர்ச்சிக்காக வங்கிகளின் பயன்பாடும், தொழில்களின் பயன்பாடும், பயிற்சிகளின் பயன்பாட்டையும் விளக்கி பேசினார்.

    இந்த விழாவிற்கு கிருஷ்ணாபுரம், கம்பை நல்லூர் மற்றும் ஒடசல்பட்டி பகுதியில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், எழுத்தாளர் மற்றும் பிரதிநிதிகள், நிறுவனத்தில் பணிபுரியும் சரஸ்வதி, ராதா, சுமதி, சுருதி ரிசோர்ஸ் சென்டரின் செயற்குழு உறுப்பினர்களாகிய லட்சுமி, எல்லம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் செயற்குழு உறுப்பினர்கள் நன்றி கூறினர்.

    • மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்.
    • உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சீருடையுடன் விழாவை சிறப்பித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பாரத் கல்வி குழுமங்களின் நிறுவன தலைவர் மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும்' என்கிற கோட்பாட்டை அடிகோலிட்டு மகளிர் யாவரும் இவ்வுலகில் அனைத்து துறைகளிலும் விமானம், ராணுவம், மருத்துவம், தொழில்துறை. கல்வித்துறை போன்ற துறைகளில் சாதனை பெற்று வருகின்றனர் என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்கினார். பெண்பால் ஆசிரியர்க ளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மேலும் பள்ளியில் பணிபுரியும் அனைத்து பெண்பால் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோர்களுக்கு நினைவு பரிசாக கேடயம் வழங்கி பாராட்டினார்.

    உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும் ஒரே சீருடையுடன் விழாவை சிறப்பித்தனர்.

    இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கிருஷ்ணவேணி மணி தலைமை தாங்கினார். மேலும் பாரத் கல்வி குழுமங்களின் செயலர் சந்தோஷ் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். மேலும் பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர் பாஷா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். இறுதியில் புனிதா, அனுராதா ஆகியோர் நன்றி கூறினர்.

    • விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    போளூரில் நேற்று சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு வான்முகில் மெட்ரிக் பள்ளி மாணவிகள் பொதுமக்கள் இடையே பெண்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலம் போளூர் ஈஸ்வரன் கோவில் தெருவில் தொடங்கி சிந்தாரப்பேட்டை தெரு வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தை அடைந்தனர்.

    நிகழ்ச்சியில் 75-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கு தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம், பேனா, பென்சில் இலவசமாக வழங்கி வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் தெற்கு ரதவீதி அரசு உயர்நிலைப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் செயல்படும் அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவனத்தின் மகளிர் தின விழா பெருமாநல்லூரில் உள்ள லட்சுமி மகாலில் நடைபெற்றது. மகளிருக்கு கோலப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் பல விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    விழாவில் 50 பெண்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான தையல் எந்திரங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை தொண்டு நிறுவனத்தலைவர் மகாராணி வரவேற்றார். போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு வக்கீல் எம்.நாகராஜன் பரிசுகள் வழங்கினார். அன்னை தெரசா தொண்டு நிறுவனத்துக்கு தாய் அறக்கட்டளை மற்றும் வின்டெக்ஸ் நிறுவன உரிமையாளர் நடராஜன் ரூ. 25 லட்சம் நன்கொடையாக வழங்கினார். விழாவில் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் சார்பில் கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ரூ10. ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது. விழாவில் வேடசந்தூர் சுப்புலட்சுமி, சுபாஷ்சுதாகரன், விவசாயிகள் நலன் மற்றும் முன்னேற்ற கூட்டுறவு சங்க தலைவர் தீபா ராம்குமார், தஞ்சாவூரை சேர்ந்த பேச்சாளர்கள் சாந்தா நாகராஜன், வின்டெக்ஸ் நடராஜன், ஆடிட்டர் எம்.நரசிம்மன், என்.லலிதா ஆகியோர் பெண்களின் பெருமை பற்றியும், பலதுறைகளில் பெண்கள் படைத்த சாதனைகள் பற்றியும் பேசினர். தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மகாராணி கூறுகையில் "அன்னை தெரசா மகளிர் தொண்டு நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கடந்த 14 ஆண்டுகளாக ஏழை-எளியோருக்கு இலவச தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் பல உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. மேலும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு-புத்தகம், பேனா, பென்சில் ஆகிய பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது" என்றார். முடிவில் சரஸ்வதி நன்றி கூறினார்.

    • அ.ம.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் புதுச்சேரியில் உள்ள அனைத்து மகளிர் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    அ.ம.மு.க. மகளிர் அணி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. மார்ச் 8-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறும் அ.ம.மு.க. மகளிர் தின விழாவில் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப மகளிர் பிரிவு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நிலையிலான மகளிர் நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    ×