search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தார்ச்சாலை"

    • அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர் துர்கா ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்
    • பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் 3-வது வார்டுக்கு உட்பட்ட நவநகர், மூணார்க், ஸ்னோஸ்டவுன் முதல் ஜெம் பார்க் பகுதி வரை, தமிழகஅரசு நகர்ப்புற மேம்பாட்டு சாலை திட்டத்தின்கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை 3-வது வார்டு அ.தி.மு.க நகரமன்ற உறுப்பினர் துர்கா ஜெயலட்சுமி தொடங்கி வைத்தார்.

    ஊட்டி 3-வது வார்டு பகுதியில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட துர்கா ஜெயலட்சுமிக்கு பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    • குன்னூர் நகரமன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம் ராஜா ஆய்வு செய்தார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டரை, முத்தாலம்மன்பேட்டை பகுதியில் தார் சாலை பணிகள் நடந்து வருகிறது.

    அந்த பணிகளை மாநில தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணை தலைவருமான பா.மு.வாசிம் ராஜா ஆய்வு செய்தார்.

    அப்போது மாநில தி.மு.க சிறுபான்மை பிரிவு துனை செயலாளர் ரா அன்வர்கான், மாவட்ட கலை இலக்கிய பேரவை தலைவர் சிக்கந்தர், நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகீர்உசேன், மணிகண்டன், மன்சூர், செல்வி, மாவட்ட மாணவரணி துனை அமைப்பாளர் அபீப் ரகிமான் நந்தகுமார் விவேக் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • ரூ.44 லட்சம் செலவில் தெருவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மணத்திட்டையில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் செலவில் தெருவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சீதப்பால் பாலம் முதல் மண்ணடி வரை 1½ கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.50 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி மற்றும் அதே திட்டத்தின் கீழ் பேச்சான்குளம் முதல் இறச்சகுளம் வரையில் ரூ.40 லட்சம் செலவில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி ேபான்றவையும் நடைபெற்றது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், மாவட்ட தி.மு.க. துணை செயலாாளர்கள் கரோலின் ஆலிவர் தாஸ், பூதலிங்கம், இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்டஜெகதீஸ், ஒன்றிய செயலாளர்கள் செல்வன், பிராங்கிளின், மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி, யூனூஸ் பாபு, நபிலா அன்சார் மற்றும் பெனட், இலக்கிய அணி அமைப்பாளர் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலையின் ஓரமாக போட்டு வைக்கப்பட்டுள்ள புதிய மின்கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அதன் மேல் தார்ச்சாலை போட்டுள்ளனர்.
    • செல்போனில் படம் எடுத்த பொதுமக்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய சாலை ஓரளவுக்கு தரமாக இருந்து வந்தாலும் சாலையை சுற்றி பார்த்த கிராம மக்கள் ஒரு பகுதிக்கு வந்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

    தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதிய மாடலில் சாலை அமைக்கும் திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் புளியங்குடி கிராமத்திலும் இப்படி நடைபெற்றுள்ளதை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.

    அதாவது புளியங்குடி கிராமத்தில் சாலையின் ஓரமாக போட்டு வைக்கப்பட்டுள்ள புதிய மின்கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அதன் மேல் தார்ச்சாலை போட்டுள்ளனர். இதனை செல்போனில் படம் எடுத்த பொதுமக்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை தார் தளம் அமைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு தென்றல் நகர் முதல் அபிராமி கார்டன் வரை மெயின் ரோட்டில் ரூ.57½ லட்சம் மதிப்பில் தார் தளம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பூமி பூஜையில் திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், ஜெயசுதா பூபதி, உதவி ஆணையாளர் வாசுகுமார், வட்ட செயலாளர்கள் வெங்கட்ராஜா, பத்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது.
    • நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட 57-வது வார்டில் உள்ள விக்னேஷ்வராநகர் மெயின் வீதியில் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு திட்டம் 2022-2023ன் கீழ், ரூ.14.89 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை சீரமைத்தல் பணி தொடக்க விழா நடந்தது. இதனை மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலரும், சுகாதார குழு தலைவருமான கவிதா நேதாஜி கண்ணன், உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் முன்னாள் கவுன்சிலர் அன்பு பாலு மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கண்ணன், செல்வராஜ், பாஸ்கர், மேனன், குமார், திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×