search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூதப்பாண்டி பகுதியில் ரூ.1 கோடியே 34 லட்சத்தில் தார்ச்சாலை, அலங்கார கற்கள் பதிக்கும் பணி
    X

    பூதப்பாண்டி பகுதியில் ரூ.1 கோடியே 34 லட்சத்தில் தார்ச்சாலை, அலங்கார கற்கள் பதிக்கும் பணி

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • ரூ.44 லட்சம் செலவில் தெருவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    பூதப்பாண்டி :

    பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட மணத்திட்டையில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் செலவில் தெருவில் அலங்கார கற்கள் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதேபோல் முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சீதப்பால் பாலம் முதல் மண்ணடி வரை 1½ கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.50 லட்சம் செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி மற்றும் அதே திட்டத்தின் கீழ் பேச்சான்குளம் முதல் இறச்சகுளம் வரையில் ரூ.40 லட்சம் செலவில் தார்ச்சாலைகள் அமைக்கும் பணி ேபான்றவையும் நடைபெற்றது. இந்த பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பூதப்பாண்டி பேரூராட்சி தலைவர் ஆலிவர் தாஸ், மாவட்ட தி.மு.க. துணை செயலாாளர்கள் கரோலின் ஆலிவர் தாஸ், பூதலிங்கம், இறச்சகுளம் ஊராட்சி மன்ற தலைவர் நீலகண்டஜெகதீஸ், ஒன்றிய செயலாளர்கள் செல்வன், பிராங்கிளின், மாவட்ட தொழிற்சங்க அமைப்பாளர் இ.என்.சங்கர் மற்றும் பூதப்பாண்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் ஈஸ்வரி, யூனூஸ் பாபு, நபிலா அன்சார் மற்றும் பெனட், இலக்கிய அணி அமைப்பாளர் சுந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×