என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஓலைச்சுவடி"
- கிரந்த எழுத்து வடிவில் 12 பனையோலை சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
- திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பதும் தெரியவந்தது.
நெல்லை:
இந்து சமய அறநிலையத்துறையின் ஓலைச்சுவடிகள் நூலாக்க திட்டப்பணி குழுவினர் அறநிலையத்துறைக்கு உட்பட்ட சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள பழங்கால ஓலைச்சுவடிகளை சேகரித்து வருகின்றனர்.
அதன்படி கடந்த 4 நாட்களாக பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன சுவடியியல் துறை பேராசிரியர் தாமரை பாண்டியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
அவருடன் சுவடியியலாளர்கள் சண்முகம், சந்தியா, நீலகண்டன், பாலசுப்பிரமணியன் அடங்கிய குழுவினர் நெல்லையப்பர் கோவில் நூலகத்தில் உள்ள சுவடிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கோவில் நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த 10 செப்பு பட்டயங்களை ஆய்வு செய்தனர். மேலும் கிரந்த எழுத்து வடிவில் வேணுவன நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம் உள்ளிட்டவை குறித்த 12 பனையோலை சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் திருஞான சம்பந்தரின் தேவாரப்பாடல் அடங்கிய ஓலைச்சுவடிகள் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து திட்டப்பணியின் ஒருங்கிணைப்பாளர் தாமரைப்பாண்டியன் கூறுகையில், பழமை வாய்ந்த சிறிய சிறிய அறைகள் அமைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 2 அரிய தாள் சுவடிகள் கிடைத்துள்ளது. அதில் திருஞானசம்பந்தரின் 3 திருமுறைகள் அடங்கிய தேவார பாடல்கள் இருந்தன. அதன் தொடக்க பக்கத்தில் தோடுடைய செவியன் எனும் பாடல் இடம் பெற்றுள்ளது.
இந்த பிரதிகள் செய்தவரின் குறிப்புகள் இல்லை. இவை 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இங்கு கண்டறியப்பட்ட பட்ட யங்களை ஆராயும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.
தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பனையோலை சுவடிகளில் 281 ஓலைச்சுவடிகள் நல்ல நிலையில் உள்ளது என்றார்.
- ஆழ்வாதிருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் 19 சுவடிக்கட்டுகள் கண்டறியப்பட்டன.
- சுவடியில் உரை சற்று சிதைந்த நிலையில் முழுமையற்று காணப்படுகிறது.
தூத்துக்குடி:
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளை திரட்டி பாதுகாப்பதோடு நூலாக்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்ட பணிக்குழு ஒருங்கிணைப்பாளராக சென்னை உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது தலைமையில் 12 சுவடியியல் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் உள்ள 199 கோவில்களில் கள ஆய்வு செய்து ஓலைச்சுவடிகளை கண்டறிந்து பாதுகாத்து வருகின்றனர்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சுவடி களஆய்வாளர் ம.பாலசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு அரிய ஓலைச்சுவடிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து சுவடியியல் ஆய்வாளர் க.தமிழ்ச்சந்தியா தலைமையிலான குழுவினர் சுவடிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது:-
ஆழ்வாதிருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் 19 சுவடிக்கட்டுகள் கண்டறியப்பட்டன. இந்த சுவடிக்கட்டுகளில் ஒரு கட்டு நம்மாழ்வார் இயற்றிய தமிழ் வேதம் என்று போற்றப்படும் திருவாய்மொழி எனும் நூலின் இரண்டாம் பத்துக்கும், மூன்றாம் பத்துக்கும் உரை மட்டும் உள்ள ஓலைச்சுவடி ஆகும். இந்த சுவடியில் உரை சற்று சிதைந்த நிலையில் முழுமையற்று காணப்படுகிறது. எனினும் இந்த சுவடி ஆய்வுக்குரிய அரியச் சுவடி ஆகும்.
மேலும் இந்த கோவிலின் வெஞ்சினப் பண்டாரக் குறிப்புகள் அடங்கிய 18 சிறிய ஓலைச்சுவடி கட்டுகளும் கண்டறியப்பட்டு உள்ளன. இந்த சுவடி கட்டுகளில் கோவிலின் பழமை, வரவு-செலவு கணக்கு குறிப்புகள் உள்ளன. இந்த சுவடிகள் பழமையானவை என்பதாலும், சுவடிகள் பூச்சிகள் அரித்து செல்லரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாலும் அவற்றை உடனே பராமரித்துப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்குவப்படுத்தப்பட்ட பனை ஓலைகளில் பல நூல்களை எழுதினர்
- சுற்றுலாபயணிகள், பொது மக்கள் மாணவ-மாணவிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர்.
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட அரசு அருங் காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட் கள் உள்ளன. ஒவ்வொரு பொருட்க ளும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க வை. அத்தனை சிறப்பு மிக்க பொருட்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக மாதம் ஒரு சிறப்பு காட்சி பொருட்கள் கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுஉள்ளது.
ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தில் இருப்பில் உள்ள அரும் பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளைபற்றிய விளக்கமும் வைக்கப்பட்டுஇருக்கும்.
அதன்படி தற்போது பனை ஓலையில் எழுத பயன்படுத்தப்படும் எழுத்தாணி காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது. பண்டைய நாட்களில் காகிதங்கள் வராத நிலையில் பக்குவப்படுத்தப்பட்ட பனை ஓலைகளில் பல நூல்களை எழுதினர். இவை ஓலைச் சுவடிகள் எனப்படுகின்றன.அவ் வாறு எழுத ஓர்எழுது கோல்தேவைப்பட்டது. அதுதான் எழுத்தாணி.எழுத்தாணி பல வகைப் படும்.
அவை அலகெழுத்தாணி, குண்டெழுத்தாணி, கணையெழுத்தாணி, மடிப்பெழுத்தாணி, மடக்கெ ழுத்தாணி, வாரெழுத்தாணி மற்றும் தேரெழுத்தாணி. இவற்றுள் ஒன்றான மடிப்பெழுத்தாணிதான் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
ஒரு கையின் 5 விரல்களாலும் பிடிக்கப்பட கூடிய ஒரு சிறு மரத்துண்டுகை வழுக்காமல்இருக்க அதன்மீது சற்று ஆழமான கீறல்கள் மற்றும் வேலைப் பாடுகள்ஒரு முனையில் பனை ஓலைகளின் மீதுஅழுத்தி எழுதக் கூரிய முனையுள்ள, தேவை யான அளவு நீண்ட ஆணி மறு முனையில் பனை ஓலைகளை எழுதப் பயன்படும் வகை யில் சிறிய தாகச் சீவ ஒரு கத்தி ஆகியவை களைக் கொண்டதே எழுதும் ஆணி அல்லது எழுத்தாணி ஆகும்.இந்த ஆணியையும், கத்தியையும் மடித்து வைக்க ஏதுவாக அந்த மரத்துண்டின் இரு பக்கங்களிலும் ஆழமாக நீளவாக்கில் குடையப்பட்டு இருக்கும்.
இந்த வடிவமைப்புதான் பண்டைய காலத்திலும் சமீபத்திய காலத்தது ஆகும். இந்தஆணிகளைக் கொண்டுபனைஓலைகளி ல் மெய்யெழுத்துக்களின் மீது புள்ளிஇடமாட்டார்கள் உயிர்மெய்எழுத்துக்களாக வே எழுதிவிடுவர்.காரணம் புள்ளிகள் வைப்பதால் ஓலைகள் பாழாகிவிடும். நமது முன்னோர்கள் பயன் படுத்திய இந்த அரும்பொ ருளின் முக்கியத்துவத்தை இன்றையதலைமுறையினர் அனைவருக்கும் தெரி விப்பதே இந்தக்கண் காட்சியின் நோக்கமாகும் என்று இந்த கண்காட்சியை தொடங்கி வைத்த நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார்.
இந்த கண்காட்சியை சுற்றுலாபயணிகள், பொது மக்கள் மாணவ-மாணவி கள் உள்பட பலர் பார்வையிட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்