search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் காயம்"

    • ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்த சிறுவனை கட்டி வைத்து 3 பேர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
    • கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்னா:

    பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் 'பீகாரின் லெனின்கிராட்' என்று அழைக்கப்படும் பெகுசராய் பகுதி உள்ளது.

    இப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனை சிலர் அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தில் கட்டி வைத்து கம்பால் தாக்கும் காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவியது.

    அங்குள்ள லக்மினியா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் அந்த சிறுவனை கட்டி வைத்து 3 பேர் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இதுகுறித்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ரோஷன் குமார், ஜெய்ராம் சவுத்ரி, ககுல் குமார் என்ற 3 பேர் சேர்ந்து அந்த சிறுவனை தாக்கியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்துள்ளனர். அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் சில பொருட்களை அந்த சிறுவன் திருடியதாக சந்தேகம் அடைந்து அந்த கும்பல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த புகாரை சிறுவனின் தந்தை மறுத்துள்ளார். பொய்யான குற்றச்சாட்டில் தனது மகனை ரெயில்வே தண்டவாளத்தில் கட்டி வைத்து தாக்கியதாக அவர் கூறினார்.

    கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.
    • சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கோண்டூரில் அரசு கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகின்றது. இன்று காலை கூர்நோக்கு இல்லத்திலிருந்து சங்கராபுரம் பகுதியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு வைத்திருந்த 17 வயது சிறுவன் தலை மற்றும் காலில் அடிபட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் கடந்த 7 ந் தேதி அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வந்த நிலையில், இன்று காலை கூர்நோக்கு இல்லத்தில் 2-வது தளத்தில் துணி காயவைப்பதற்கு சென்று உள்ளார். இவருக்கு பாதுகாப்பாக காவலாளி துரைராஜ் என்பவரும் உடன் இருந்தார்.

    அப்போது திடீரென்று 17 வயது சிறுவன் காவலாளியை தள்ளிவிட்டு 2-வது மாடியில் இருந்து தப்பித்து செல்வதற்காக குதித்துள்ளார். அப்போது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.

    இந்த நிலையில் சிறுவன் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது.
    • கனிஷ் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது. இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கோடைவிடுமுறையை முன்னிட்டு பொருட்காட்சிக்கு வந்தனர். அப்போது கார்த்திக் மகன் கனிஷ் (வயது 7) என்பவர் பொருட்காட்சியில் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் கனிஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஸ்வின் ராஜ் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் படத்தை ஏற்படுகிறது.

    • வெடிக்காமல் கிடந்த ஒரு பட்டாசை தீவைத்து பற்ற வைத்துள்ளார்.
    • சிறுவனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி அருகே நடுப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ரித்திக் (வயது15). இந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டின் அருகே கிடந்த வெடிக்காமல் கிடந்த ஒரு பட்டாசை எடுத்துள்ளார். அதனை தீவைத்து பற்றவைத்துள்ளார். அப்போது சரியாக வெடிக்கவில்லை என்று தவறாக நினைத்து பட்டாசை சிறுவன் கையில் எடுத்தபோது திடீரென்று வெடித்தது. இதில் சிறுவனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 



    • சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
    • சிறுவனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    தருமபுரி:

    தருமபுரி அருகே நடுப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் ரித்திக் (வயது15). இந்த சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.

    நேற்று வீட்டின் அருகே வெடிக்காமல் கிடந்த ஒரு பட்டாசை எடுத்துள்ளார். அதனை தீ வைத்து பற்ற வைத்துள்ளார். அப்போது சரியாக வெடிக்கவில்லை என்று தவறாக நினைத்து பட்டாசை சிறுவன் கையில் எடுத்தபோது திடீரென்று வெடித்தது.

    இதில் சிறுவனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மதிகோண்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூர்யா இருவரும் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது.
    • அவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தில் தாட்கோ நகரில் 75 அரசு தொகுப்பு வீடுகள் உள்ளன. அந்த வீடுகள் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வீட்டின் மேற்கூரைகள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள், சிமெண்டு சிலாப்புகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது.

    இங்குள்ள 75 வீடுகளில் பெரும்பாலான கட்டிடங்கள் முற்றிலும் சிதிலமடைந்து குடியிருக்க தகுதியற்றவையாக மாறியுள்ளது. எனவே இந்த குடியிருப்பு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளையும் சீரமைத்து தரும்படி அங்கு வசிப்பவர்கள் கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்து வந்தனர்.

    இந்தநிலையில் தாட்கோ நகரை சேர்ந்த கூலி தொழிலாளி மோகன்ராஜ் (33), அவரது மனைவி சுபத்ரா (26), மகள் சாதனா (10), மகன்கள் நித்தீஷ்குமார் (8), சூர்யா (6) ஆகியோர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

    இன்று அதிகாலையில் சுபத்ரா தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் நித்தீஷ்குமார், சூர்யா இருவரும் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென்று தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது.

    இதில் வீட்டின் மேல் கூரை சிறுவன் சூர்யா மீது விழுந்து படுகாயம் ஏற்பட்டது. அவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    • நுங்கு பறிக்க முயன்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே பனை மரத்தில் ஏறி நுங்கு பறிக்க முயன்ற சிறுவன் தவறி விழுந்தார்.

    நாட்றம்பள்ளி அடுத்த கள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் இவரது மகன் சுபாஷ் (வயது 10) இவர் நேற்று தனது வீட்டு அருகே உள்ள பனைமரத்தில் ஏறி நுங்கு பறிக்க மரத்தில் ஏறினார்.

    அப்போது தவறி விழந்து மயங்கி கிடந்தார். அங்கிருந்தவர்கள் நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×