என் மலர்
நீங்கள் தேடியது "மகாவீர் ஜெயந்தி"
- அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியது மகாவீரரின் போதனைகள்.
- சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, அமைதி, அகிம்சை, வாழ்க்கை, மனிதநேயம் பற்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய மகாவீரரின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறிக்கொண்டு, சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- யோகா, ஆயுர்வேதம் போன்ற இந்திய பாரம்பரியத்தை எனது அரசாங்கம் ஊக்குவித்தது.
- உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தீர்க்க கூடிய சக்தியாக இந்தியா இருக்கிறது.
புதுடெல்லி:
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தபால்தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தேர்தல் பிரசாரத்தின் போது இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பது ஆறுதல் அளிக்கிறது.
ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கிருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணமும் தொடரும் என்று நாடு நம்புகிறது.
யோகா, ஆயுர்வேதம் போன்ற இந்திய பாரம்பரியத்தை எனது அரசாங்கம் ஊக்குவித்தது.
உலகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் தீர்க்க கூடிய சக்தியாக இந்தியா இருக்கிறது.
நமது கலாச்சார பிம்பம் பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது. உலகின் பழமையான நாகரிகம் மட்டுமல்ல, மனித குலத்துக்கு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.
- நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
- மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் அனைத்துக் குடும்பங்களுக்கும் மகாவீர் ஜெயந்தி வாழ்த்துகள். இந்த நாளில் மகாவீரரின் போதனைகளை நினைவு கூர்வோம். அமைதி, கட்டுப்பாடு மற்றும் நல்லெண்ணம் தொடர்பான இறைவன் மகாவீரின் செய்திகள் வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப நாட்டிற்கு உத்வேகமாக உள்ளன என பதிவிட்டுள்ளார்.
- நகர மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
- ஏராளமாேனார் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் மகாவீர் தெருவில் வசித்து வரும் ஜெயின் சங்கத்தின் சார்பாக ஜமாபந்தி போஜனம் நடைபெற்றது.
இதில் அரக்கோணம் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி மற்றும் துணைத் தலைவர் கலாவதி லாரன்ஸ் கலந்துகொண்டு ஜமாபந்தியை தொடங்கி வைத்தனர்.
அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் திருவிழா போன்று காட்சி அளித்தது. ஜெயின் சங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தினர் அனேகர் கலந்து கொண்டனர்.
- மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி வாழத்துகளை தெரிவித்தனர்.
- மகாவீர் சுவாமிகளின் விழுமியங்களை நாம் அங்கீகரித்து, அமைதி, உண்மை மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ முயற்சிப்போம்.
நாடு முழுவதும் நேற்று மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி வாழத்துகளை தெரிவித்தனர்.
அதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
ஜில் மற்றும் நான் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான மகாவீர் ஜெயந்தி அமைய வாழ்த்துகிறோம்.
இன்று, மகாவீர் சுவாமிகளின் விழுமியங்களை நாம் அங்கீகரித்து, அமைதி, உண்மை மற்றும் நல்லிணக்கத்துடன் வாழ முயற்சிப்போம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- மாநகர பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
- டவுன்- குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு கடையில் கோழி இறைச்சி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது
நெல்லை:
மகாவீர் ஜெயந்தியை யொட்டி நெல்லை மாநகர பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்திருக்கும் இறைச்சி கடைகளை இன்று ஒரு நாள் மட்டும் மூடும்படி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.
இறைச்சி விற்பனை
இதையடுத்து மாநகர பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று திறக்கப்படவில்லை. ஆனாலும் ஒரு சில கடைகளில் முன்பக்க வாசலை மூடிவிட்டு சட்ட விரோதமாக பின்பக்க வாசல் வழியாக இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கமிஷன ருக்கு புகார் சென்றது.
அவரது உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
பினாயில் ஊற்றி அழிப்பு
அப்போது டவுன்- குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் கோழி இறைச்சி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சுகாதார அலுவலர் இளங்கோ பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தார்.
- 2006-ஆம் ஆண்டு 5-வது முறையாக ஆட்சிப்பொறுப் பேற்ற தலைவர் கலைஞர் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தார்.
- இல்லாதோர்க்கு ஈந்து, மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிலைநிறுத்தும் நாளாக மகாவீரர் ஜெயந்தியைப் போற்றுவோம்.
சென்னை:
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
இந்தியத் துணைக்கண்டத்தின் பழம்பெரும் சமயங்களில் ஒன்றான சமணத்தின் 24-வது மற்றும் இறுதித் தீர்த்தங்கரரான மகாவீரர் பிறந்த நன்னாளில் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு சமணத்தைப் பின் பற்றி வாழ்ந்து வரும் மக்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசகுடும்பத்தில் பிறந்தும் செல்வச்செழிப்பைப் புறந்தள்ளி, உண்மை, அகிம்சை, உயிர்களிடத்து இரக்கம் என்ற உயர் நல்லறங்களை உலகுக்குப் போதித்தவர் வர்த்தமான மகாவீரர். அவரது பிறந்த நாளை சமண மக்கள் சிறப் பாகக் கொண்டாட ஏதுவாக, தமிழ்நாட்டில் முதன்முதலில் அரசு விடுமுறை அறிவித்தது முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான கழக அரசு.
2002-ம் ஆண்டு அதனை அ.தி.மு.க அரசு நீக்கினாலும், 2006-ஆம் ஆண்டு 5-வது முறையாக ஆட்சிப்பொறுப் பேற்ற தலைவர் கலைஞர் மீண்டும் விடுமுறை நாளாக அறிவித்தார்.
சமணர்கள் இந்திய அறிவு மரபுக்குப் பெரும் பங்காற்றியவர்கள் என்பது மட்டுமல்ல, தமிழுக்கும் எத்தனையோ இலக்கிய, இலக்கண நூல்களை இயற்றி இணையற்ற பங்களிப்பை நல்கியவர்கள்.
இல்லாதோர்க்கு ஈந்து, மகாவீரரின் போதனைகளை நெஞ்சில் நிலைநிறுத்தும் நாளாக மகாவீரர் ஜெயந்தியைப் போற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் மதுக்கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் மதுக்கடைகள் அனைத்தையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஏப்ரல் 4-ந் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்பு களைச் சார்ந்த பார்கள், ஓட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூட வேண்டும். தவறினால் மதுபான விற்பனை விதிமுறைகளின்படி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.