search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இப்தார்"

    • இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர்
    • முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை

    நேற்று சென்னையில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

    அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை விமர்சிப்பதோடு டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்தியதாக அதிமுகவை விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் எல்லாம் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது அதிமுக ஆட்சியில் தான்" எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் சந்தித்து பேசினார்.

    அப்போது, "முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை. நாகலாந்து, உத்தரகாண்ட், இமாச்சல், குஜராத் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருட்களை கைப்பற்றுகிறார்கள் என்றால் அதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். முன்னாள் முதலமைச்சர் இப்படி அரைவேக்காடுத்தனமாக பதில் சொல்ல கூடாது.

    தமிழ்நாட்டில் போதை பொருட்கள் விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு இருப்பதை தான் குற்றம் சாட்டுகிறோம். போதை பொருட்களை மத்திய அரசின் துறைகள் பிடித்து நடவடிக்கை எடுக்கிறது. திமுக அரசு மீது குற்றச்சாட்டு வைத்தால், அவர்களுக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

    • நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் நோன்பின் நன்மைகள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது.

    உடன்குடி:

    தமிழ்நாடு நுகர்வோர் பேரவையின் திருச்செந்தூர் வட்டார கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி குலசேகரன்பட்டினத்தில் நடந்தது. தமிழ்நாடு நுகர்வோர் பேரவை மாநில தலைவர் ஏ.வி.பி. மோகனசுந்தரம் தலைமை தாங்கி நோன்பின் நன்மைகள், மகிமைகள், மற்றும் சமத்துவம், சகோதரத்துவம் மனித நேயம் ஆகிய செயல்பாடுகளுடன் ஒவ்வொரு மனிதனும் எப்படி செயல்பட வேண்டும், சகோதர தத்துவத்துடன் எப்படி வாழ வேண்டும் என்று பேசினார்.

    ஆத்தூர் தேர்வுநிலை பேரூராட்சி தலைவர் கமால்தீன் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் வட்டார தலைவர் ரஹ்மத்துல்லா வரவேற்றுப் பேசினார். சிறப்பு விருந்தினராக அரசு வக்கீல் சந்திரசேகர் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் குலசேகரன்பட்டினம் நகரத்தலைவர் ஆறுமுகராஜா, செயலாளர் மரிய இருதயராஜ், உடன்குடி ஒன்றிய ஆலோசகர் பேச்சுமுத்து, ஆத்தூர் கவுன்சிலர் கேசவன் மற்றும் திருமணி உட்பட பலன் கலந்து கொண்டனர். வட்டார தலைவர் ரஹமத்துல்லா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • நோன்பு திறப்பு நிகழ்ச்சியை அஹ்மது ஷா தொடங்கி வைத்தார்.
    • நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    சுரண்டை முகைதீன் ஜும்மா பள்ளிவாசலில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை பேஸ் இமாம் அஹ்மது ஷா 'கிராத்' ஓதி தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பழனிநாடார் எம்.எல்.ஏ., சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளிவாசல் செயலாளர் கமாலுதீன் வரவேற்று பேசினார். பள்ளிவாசல் துணை செயலாளர் சாகுல் ஹமீது பாதுஷா நோன்பின் மாண்பு பற்றி பேசி னார். பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார்.

    நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் நகராட்சி துணைத் தலைவர் சங்கராதேவி முருகேசன், சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா ஆகியோர் உரையாற்றி னார். சுரண்டை எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த தலைவர், செயலாளர், மாவட்ட செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சாகுல் ஹமீது இப்தார் விழாவில் கலந்து கொண்ட அனைத்து சமுதாய தலைவர்கள், அதிகாரிகள், எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகள், ரவி பிரஸ் உரிமையாளர் தனபால் ஆகியோர் சுரண்டை முகைதீன் பள்ளி வாசல் பொறுப்பாளர்களால் கவுரவிக்கப் பட்டார்கள்.

    • மதுரையில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி நடந்தது.
    • மாவட்ட குழு உறுப்பினர் ஷாஜகான் நன்றி கூறினார்.

    மதுரை

    தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மதுரை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி இஸ்மாயில்புரம் 12-வது தெரு வள்ளியம்மை அரங்கத்தில் நடந்தது.

    மாவட்ட குழு உறுப்பினர் சாம்பசிவம் தலைமை தாஙகினார்.மாவட்டத் துணைத் தலைவர் எகியா, மாவட்ட குழு உறுப்பினர் மாயழகு முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் வரவேற்றார்.

    மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மாவட்ட தலைவர் அலா வுதீன், அருட்தந்தையர்கள மரியநாதன், லாரன்ஸ், மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் லியாகத் அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கணேசன், தெற்கு மண்டல தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர்கள் செய்யது அபுதாஹிர், தமிழ்ச்செல்வி காளிமுத்து, குமரவேல்.

    மாவட்ட செயலாளர் கணேச ஒமூர்த்தி, பொரு ளாளர் ஜான்சன், துணை செயலாளர் போனிபேஸ், தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளர் உஸ்மான் அலி, முஸ்லிம் ஜமாத் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சேக் அப்துல்காதர், செயலாளர் முகமது முஸ்தபா, துணைச் செயலாளர் காஜா மைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் இக்பால் பாட்சா, ஆகியோர் பேசினர்.

    மாவட்ட குழு உறுப்பினர்கள் சாந்தாரா, அப்துல் அஜீஸ், பிரபாகரன், அப்துல் குத்தூஸ், கிளை செயலாளர் புலி சேகர், துணை செயலாளர் அமிர்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட குழு உறுப்பினர் ஷாஜகான் நன்றி கூறினார்.

    ×