search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா சீனா எல்லை"

    • 2013-ல் சீனா இந்தியாவின் 640 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது.
    • உடனடியாக இந்தியா மற்றொரு எல்லையில் சீனா இடத்தை ஆக்கிரமித்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

    இந்தியா- சீனா எல்லையில் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டும் திடீரென இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். இந்திய எல்லைக்குள் புகுந்த அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது இருதரப்பு வீரர்களுக்கும் இடையில் கடும் சண்டை நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் அதிக இழப்பு ஏற்பட்டது. அதன்பின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தியது.

    கல்வான் பள்ளத்தாக்கில் பல சதுர கிலோ மீட்டர் வரையிலான இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்ததாக இந்திய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இந்திய பிரதமர் ஒரு அங்குல நிலம் கூட சீன ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    பிரதமர் மோடி தெரிவித்ததை சீன பத்திரிகைள் பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டனர். இந்திய பிரதமர் எந்தவித எதிர்ப்பும் இன்றி இந்திய நிலத்தை தாரைவார்த்ததாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண், எந்தவித போராட்டமின்றி இந்திய நிலத்தை தாரைவார்த்து விட்டடதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் பேசியதாக கேரள மாநில காங்கிரஸ் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு செய்தியில் கூறியிருப்பதாவது:-

    2013-ல் சீனா இந்தியாவின் 640 சதுர கிலோ மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்தது. உடனடி பதிலடியாக எல்லையின் மற்றொரு பகுதியில் நாம் சீனாவின் இடத்தை ஆக்கிரமித்தோம். இதனால் சீனா பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.

    அப்போது இரு தரப்பிலும் தங்களது பழைய இடத்திற்கு திரும்பிச் செல்ல ஒப்புக் கொள்ளப்பட்டது. எந்தவித போராட்டம் இன்றி 4067 சதுர கிலோ மீட்டர் இந்திய நிலத்தைர பிரதமர் மோடி சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டார்.

    இவ்வாறு முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் சியாம் சரண் தெரிவித்துள்ளார்.

    • அருணாச்சல பிரதேசம் எல்லை குறித்து இந்தியா- சீனா இடையே மோதல் இருந்து வருகிறது
    • அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதியை ஆக்கிரமித்து சீனா தங்கள் பகுதி என கூறி வருகிறது
    • இருநாட்டு உறவில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும்.
    • எல்லை பிரச்சினை தொடர்பாக தூதரகம் மற்றும் ராணுவம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    இந்தியா- சீனா எல்லை சூழல் சீராக இருப்பதாக சீன அதிகாரி ஒருவர் சமீபத்தில் கூறியிருந்தார். இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சியிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது இந்த கருத்தை நிராகரித்த அவர், எல்லையில் அதிக எண்ணிக்கையில் படைகளை குவிப்பது அசாதாரணமானது எனக்கூறினார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இந்த விவகாரத்தில் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். வெளியுறவு அமைச்சர் கூட பேசினார். அதாவது, இருநாட்டு உறவில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கு எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் எனவும், இது ஏப்ரல் 2020 முதல் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்' என்றார்.

    மேலும் அவர், 'வெளியுறவு அமைச்சர் கூறியது போல, ஒப்பந்தங்களை மீறி எல்லையில் அதிக எண்ணிக்கையிலான படைகள் குவிப்பது ஒரு அசாதாரணம்' என்றும் கண்டனம் தெரிவித்தார். எல்லை பிரச்சினை தொடர்பாக தூதரகம் மற்றும் ராணுவம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த அரிந்தம் பாக்சி, ஆனால் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை திரும்புவதைக் காணும் வரை, ஒட்டுமொத்த உறவில் இயல்பான நிலையை எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

    ×