search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்ப்பிணி உயிரிழப்பு"

    • பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர்.
    • குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள்.

    இந்த நிலையில் காசாவின் ரபா நகரில் நேற்று இரவு இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    இதில் 22 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் கர்ப்பிணி, அவரது கணவர், 3 வயது குழந்தை ஆகியோரும் அடங்குவர். உயிரிழந்த கர்ப்பிணியான சப்ரீன் அல்-சகானி 30 வார கால கர்ப்பமாக இருந்தார். அவரது வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து டாக்டர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தனர். பின்னர் அந்த பெண் குழந்தையை இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

    குழந்தையின் மார்பின் குறுக்கே டேப்பில் தியாகி சப்ரீன் அல்-சகானியின் குழந்தை என்று எழுதப்பட்டிருந்தது. 1.4 கிலோ எடையுள்ள குழந்தை, அவசரகால பிரிவில் பிரசவிக்கப்பட்டு உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. குழந்தை மூன்று முதல் நான்கு வாரங்கள் மருத்துவமனையில் இருக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். சகானியின் மகள் மலக், தனது புதிய சகோதரிக்கு அரபு மொழியில் ரூஹ் என்று பெயரிட விரும்பினாள் என்று அவரது உறவினர் ரமி அல்-ஷேக் தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் 3-வது குழந்தை தேவை இல்லை ரமணா எண்ணினார்.
    • அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் அவரது வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கரைமேட்டு பகுதியை சேர்ந்தவர் வீரமணி. கூலி தொழிலாளி. இவரது மனைவி ரமணா. இவர்களுக்கு தாரணி என்ற மகளும், ஹரிபிரசாத் என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் ரமணா கர்ப்பம் ஆனார். 7 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் 3-வது குழந்தை தேவை இல்லை ரமணா எண்ணினார். இதனால் கர்ப்பத்தை கலைக்க அங்குள்ள ஒரு மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி தின்றதாக கூறப்படுகிறது.

    இதில் ரமணாவுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் ரமணாவை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதை அடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

    அதிகமான மாத்திரைகள் சாப்பிட்டதால் அவரது வயிற்றில் குழந்தை இறந்த நிலையில் காணப்பட்டது. உடனே சிசுவை டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர். இதற்கிடையே ரமணாவுக்கு தொடர்ந்து ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ரமணா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ரமணாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம் விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த ரோஜா பின்னர் வீட்டிற்கு வந்தார்.
    • ரோஜாவின் குடும்பத்தினர் அவரை மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை மண்டலம், தர்சங்க தண்டாவை சேர்ந்தவர் ரிக்யா. இவரது மனைவி ரோஜா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான ரோஜாவை கடந்த 15-ந்தேதி அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.

    ரோஜாவிற்கு சுகப்பிரசவம் ஆவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதையடுத்து டாக்டர் கிருஷ்ணா என்பவர் அறுவை சிகிச்சை செய்து ரோஜா வயிற்றிலிருந்து ஆண் குழந்தையை எடுத்தார். பின்னர் தையல் போடும்போது வயிற்றில் தெரியாமல் பஞ்சை வைத்து தைத்து விட்டார்.

    3 நாட்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்த ரோஜா பின்னர் வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வந்தது முதல் ரோஜாவுக்கு கடும் வயிற்று வலி மற்றும் தையல் போட்ட இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டது.

    இதனை கண்டு பதறிபோன ரோஜாவின் குடும்பத்தினர் அவரை மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு ரோஜாவின் வயிற்றை ஸ்கேன் செய்த பார்த்தபோது வயிற்றில் பஞ்சு இருந்தது தெரியவந்தது.அங்கிருந்த டாக்டர் கிருஷ்ணா ரோஜாவை சிகிச்சைக்காக அவரது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு சிகிச்சை அளித்தும் ரோஜாவுக்கு ரத்தக்கசிவு தொடர்ந்தது.

    இதையடுத்து ரோஜாவை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோஜா பரிதாபமாக இறந்தார்.

    ரோஜாவின் உறவினர்கள் அவரது பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் கர்ப்பிணி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    • இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.
    • இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை செங்கோட்டையை சேர்ந்தவர் ஜெயராமன்(24). இவர் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இந்திராதேவி(20) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கருவுற்றிருந்த இந்திராதேவியை கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    நேற்று மாலை அவருக்கு சிசேரியன் மூலம் ஆண்குழந்தை பிறந்தது. அதன்பிறகு இந்திராதேவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இரவு தனது மகளை பார்ப்பதற்காக இந்திராதேவியின் தாய் சென்றுள்ளார். தனது மகளின் உடலை தொட்டு பார்த்தபோது ஐஸ்கட்டி போல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இன்றுகாலை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முன்பு உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிரசவத்தின்போதே தவறான சிகிச்சையால் இந்திராதேவி இறந்துவிட்டதாகவும், ஆனால் தங்களிடம் இதுபற்றி தெரிவிக்காமல் டாக்டர்கள் மறைத்துவிட்டனர் எனக்கூறி அவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை. இந்திராதேவி இறப்பில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை டாக்டர்கள் தெரிவிக்கும்வரை நாங்கள் உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்தனர்.

    அப்போது போலீசாருக்கும், போராட்டம் நடத்தியவர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே வருமாறு அறிவுறுத்தினர். இதனிடையே இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அங்கேயும் பெண்ணின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பதட்டமான சூழல் உருவானது.

    • 8 மாத கர்ப்பிணி ஆன இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் பிரசவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
    • இளம்பெண்ணில் உடல்நிலை திடீரென மோசமானது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிறைமாத கர்ப்பிணியான நிலையில் பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரித்தபோது அந்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை என்றும், வாலிபர் ஒருவரிடம் பழனியதால் அவர் கர்ப்பம் ஆனதும் தெரியவந்தது.

    8 மாத கர்ப்பிணி ஆன நிலையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவமனையில் பிரசவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.

    அதேநேரம் இளம்பெண்ணில் உடல்நிலை மோசமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் அந்த இளம்பெண்ணை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். வழியிலேயே இளம்பெண் பரிதாபமாக இறந்தார். திருமணம் ஆகாமலேயே குழந்தை பெற்ற இளம்பெண் பிரசவத்தின்போது இறந்த சம்பவம் வாழப்பாடிபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றி வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தை போலீசாருக்கு தெரிவிக்காமல் சிகிச்சை அளித்த டாக்டரிடம் போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

    ×