search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ முகாம்"

    • ஒரு வாரத்துக்குள் அடுத்த தீவிரவாத தாக்குதல் நேற்று நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
    • துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிக்கும்போது அருகில் இருந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டுள்ளனர்.

    ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டம் தோடா பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டான். தப்பிய மற்றோரு பயங்கரவாதியை தேடும் பணிகள் டிரோன்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

     

    கடந்த ஜூன் 9 ஆம் தேதி காஸ்மீரின் ரைசி பகுதியில் பக்தர்கள் சென்ற பயணிகள் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். ஒரு வாரத்துக்குள் அடுத்த பயங்கரவாத தாக்குதல் நேற்று நடந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து ராணுவம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று முகாம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிக்கும்போது அருகில் இருந்த கிராமத்தில் வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால் சுதாரித்துக்கொண்ட கிராம மக்கள் வீட்டின் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்துகொண்டனர்.

    ராணுவம் பின்னாலயே துரத்தி வரும் நிலையில் விரக்தியிலும் கோபத்திலும் இருந்த அவர்கள் கண்மூடித்தனமாக வானத்தை நோக்கிச் சுட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற கிராமவாசி ஒருவரையும் சுட்டுள்ளனர். அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு.
    • பயங்கரவாதிகளை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில் இரண்டு ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதல் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்றிரவு பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தப்பிய பயங்கரவாதிகளை தேடும் பணிகள் டிரோன்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


    கடந்த மூன்று நாட்களில் மூன்றாவது முறையாக இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கத்துவாவில் பொது மக்கள் மீது பயங்கராவதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர், இதேபோன்ற மற்றொரு சம்பவத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.


    இந்த சம்பவம் குறித்து பேசிய ஜம்முவின் ஏ.டி.ஜி.பி. ஆனந்த் ஜெயின், "நம் நாட்டில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நமது அருகில் உள்ள விரோதிகளின் முயற்சி தான் இது. இந்த தாக்குதல் புதிய ஊடுறுவல் போன்று தெரிகிறது. இந்த சம்பவத்தில் ஒரு பயங்கரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான், மற்றொருவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது," என தெரிவித்தார்.

    • டிரோன் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
    • தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் இப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

    ஹோம்சில்:

    உலக நாடுகளின் போர்க்களமாக சிரியா திகழ்ந்து வருகிறது. அங்குள்ள ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அடிக்கடி தாக்குதல் நடத்துவதால் அப்பாவி பொது மக்கள் பலியாகி வருகின்றனர்.

    இந்நிலையில் ராணுவ பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவின் மத்திய மாகாணமான ஹோம்சில் பகுதியில் ராணுவ பயிற்சி முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுதம் தாங்கிய டிரோன்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 100 பேர் வரை கொல்லப்பட்டதாக சிரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் பலியானவர்கள் உடல்கள் சிதறி கிடந்தன.

    இந்த டிரோன் தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    இந்த தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு தான் இப்பகுதியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் சிரியா நாட்டின் பாதுகாப்பு மந்திரி கலந்து கொண்டார். விழா முடிந்து அவர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அவரது உயிருக்கு குறி வைத்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாதாரண ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் தான் ராணுவத்தில் சேர்ந்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்துள்ளார்.
    • பிளஸ்-2 வரை தேனியில் படித்த யோகேஷ்குமார் அதன் பிறகு உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் படித்து முடித்தார்.

    உத்தமபாளையம்:

    பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் உயிரிழந்த ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார் (வயது 25) என்பது தெரிய வந்துள்ளது.

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ். இவரது மனைவி ரத்தினம். இவர்களுக்கு 2 மகள்களும், யோகேஷ்குமார் என்ற ஒரே மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.

    சாதாரண ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் தான் ராணுவத்தில் சேர்ந்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்துள்ளார். தந்தைக்கு விவசாயத்திற்கு உதவியாக இருந்து விட்டு மாலையில் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்தார். பிளஸ்-2 வரை தேனியில் படித்த யோகேஷ்குமார் அதன் பிறகு உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் படித்து முடித்தார்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்த அவர் தனது கடுமையான உழைப்பினாலும் உயர் அதிகாரிகளுக்கு கீழ்படிந்து பணி செய்ததாலும் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார். இன்னும் திருமணம் ஆகாத யோகேஷ்குமாருக்கு அடுத்த ஆண்டு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் தனது ஒரே மகனை பறிகொடுத்த ஜெயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த பொங்கல் விடுமுறையின் போது ஊருக்கு வந்த யோகேஷ்குமார் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார்.

    விடுமுறைக்கு எப்போது சொந்த ஊருக்கு வந்தாலும் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். மேலும் சொந்த ஊரிலும் யோகேஷ்குமார் நல்ல முறையில் அறியப்பட்டு அனைவரிடத்திலும் பாசத்துடன் பழகி வந்துள்ளார்.

    சிறு வயது முதலே கஷ்டப்பட்டு ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்ததால் அவரது நண்பர்களையும் ராணுவத்தில் சேர்க்க உதவி வந்துள்ளார். மேலும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    யோகேஷ்குமாரின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரது ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. யோகேஷ்குமாரின் மறைவு மூணாண்டிபட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    • வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கமலேஷ் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    நங்கவள்ளி:

    பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் இறந்தனர். அவர்கள் பெயர்கள் சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) என்று தெரியவந்தது. இதில் பலியான ராணுவ வீரர் கமலேஷ், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்.

    கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும். இவருடைய தந்தை ரவி, நெசவு தொழிலாளி ஆவார். தாய் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு திருமணம் ஆகாத நிலையில், ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.

    சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என விரும்பினார். அதன்படி அவர் தனது தொடர் முயற்சியினால் ராணுவத்தில் சேர்ந்து தனது விருப்பதை நிறைவேற்றினார்.

    கடைசியாக பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை கமலேஷ் சுட்டுக்கொல்லப்பட்டதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் துடிதுடித்தனர். கமலேஷ் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து விட்டு திரும்பி சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமலேசுக்கு சந்தோஷ் (27) என்ற அண்ணன் உள்ளார். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

    துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் கமலேஷ் இறந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமல்லாமல் மசக்காளியூர் பனங்காடு கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது வீட்டில் கமலேஷ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து கதறி அழுதபடி உள்ளனர். கிராம மக்கள், அவரது வீட்டின் முன்பு திரண்டு உள்ளனர். இதனால் ஊரில் எங்கு பார்த்தாலும் சோகமாக காணப்படுகிறது.

    வீரமரணம் அடைந்த கமலேஷ் உடல் நாளை சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    • ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
    • 2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு துப்பாக்கியும் குண்டுகளும் மாயமாகி இருந்தன.

    சண்டிகர்:

    பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா என்ற பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அதிநவீன ஆயுதங்களை கையாளும் அந்த முகாமில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அந்த ராணுவ வீரர்கள் வசிப்பதற்காக ராணுவ முகாம் வளாகத்தில் ஆங்காங்கே குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் அந்த ராணுவ முகாமுக்குள் சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் ராணுவ வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சத்தம் கேட்ட சில நிமிடங்களில் பதிலடி கொடுக்கும் அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

    அந்த ராணுவ முகாம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டது. வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ராணுவ வளாகம் முழுவதையும் சீல் வைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    உள்ளூர் போலீசார் கூட உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. துப்பாக்கி சூடு நடந்த அதிகாரிகள் உணவக பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

    அப்போது குண்டு பாய்ந்து 4 பேர் பலியாகி கிடப்பது தெரியவந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களை சுட்டுக்கொன்றது யார் என்று தெரியவில்லை.

    ராணுவ உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பிறகு துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை தொடங்கியது. அந்த பகுதியில் இருந்த வீரர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.

    பதிண்டா ராணுவ முகாமுக்குள் துப்பாக்கி சூடு நடத்தியது பயங்கரவாதிகள் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்பதில் நீண்ட நேரமாக மர்மம் நீடித்தது.

    ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டவர்கள் 2 பேர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    அவர்கள் இருவரும் சாதாரண உடையில் இருந்தனர். அவர்கள் ராணுவ வீரர்களா? அல்லது வெளியில் இருந்து ஊடுருவியவர்களா? என்று விசாரணை நடந்து வருகிறது.

    2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு துப்பாக்கியும் குண்டுகளும் மாயமாகி இருந்தன. அது பற்றி விசாரணை நடந்து வந்த நிலையில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது.

    எனவே ராணுவ வீரர்களில் 2 பேர் தான் துப்பாக்கி சூடு நடத்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

    ×