search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிபந்தனை"

    • கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
    • இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கவுதம் கம்பிர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதிவிக்கு ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    விவிஎஸ் லக்ஷ்மண், கௌதம் கம்பீர், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் முதலில் அடிபடத் தொடங்கின. இவர்களுள் கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ  மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

     

    இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடநதபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஐபி எல் போட்டிகளில் பிசியாக உள்ள கவுதம் கம்பிர் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

     

    அதாவது இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு தான் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற உத்தரவாதத்தை பிசிசிஐ அளித்தால் மட்டுமே அதற்கு விண்ணப்பிப்பேன் என்று கவுதம் நிபந்தனை விதித்துள்ளார். இந்த கண்டிஷனை பிசிசிஐ ஏற்றுக்கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. இதற்கிடையில் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் (மே 27) முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.
    • குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போர்ச் கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அஸ்வினி கோஸ்டா சம்பவ இடத்திலேயே இறந்தார். அனிஸ் துதியா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது. அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர்.

    அந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும், பார்ட்டி முடித்து வீடு திரும்பிய போது காரை வேகமாக இயக்கியுள்ளார் என்பதும், ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.

    அவருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளதாக அந்த சிறுவனின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    நிபந்தனையில் கூறியிருப்பதாவது,

    போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    வயது குறைந்த மகனை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

    17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்தச் சிறுவனுகு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    செய்தி வெளியாகி பூதாகரமானதால் சிறாரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், மகனுக்கே ஜாமீன் நிபந்தனை கட்டுரை எழுத வேண்டும் என்றால் சட்டவிரோதம் என தெரிந்தும் தன் மகனுக்கு காரை ஓட்ட கொடுத்த, அவன் குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    சாமானிய, ஏழை மக்களுக்கு வழக்கு, தண்டனை என வழங்கும் இந்த நீதிமன்றங்கள், கோடி கணக்கில் ஊழல் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் என்று பல்வேறு வழக்குகளில் இருக்கும் பண படைத்தவர்களை இந்த சட்டமும், போலீஸூம் கண்டு காணாமல் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    • பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    • முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுவையில் பா.ஜனதா போட்டியிட உள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணி தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமியை சமீபத்தில் பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ரேநில் சந்தித்து பேசினார்.

    அப்போது, பாராளுமன்ற தேர்தலில் புதுவையில் பா.ஜனதா போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். முதலமைச்சர் ரங்கசாமியும், அதற்கு ஒப்புதல் அளித்தார்.

    மேலும் வெற்றி பெறக்கூடிய பிரபலமான, பலமான வேட்பாளரை நிறுத்தும்படி முதலமைச்சர் ரங்கசாமி கேட்டுக்கொண்டார்.

    இதனிடையே புதுவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட கவர்னர் தமிழிசை, காரைக்காலை சேர்ந்த தொழிலதிபர், சுயேட்சை எம்.எல்.ஏ., நியமன எம்.எல்.ஏ., வனத்துறை அதிகாரி ஆகியோர் சீட் கேட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் கவர்னர் தமிழிசை உள்துறை மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அப்போது, புதுவை பாராளுமன்ற தொகுதியில் தான் போட்டியிட வாய்ப்பு தரும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கு மத்திய மந்திரி அமித்ஷா, புதுவை தேசிய ஜனநாயக கூட்டணி தலை வரும், முதலமைச்சருமான ரங்கசாமியின் ஒப்புதலை பெறுங்கள் எனக் கூறியதாக தெரிகிறது.

    இந்த சந்திப்புக்கு பிறகு நேற்று இரவு கவர்னர் தமிழிசை புதுவைக்கு வந்தார். அவர் முதலமைச்சர் ரங்கசாமியை தொடர்புகொண்டு மத்திய மந்திரியுடனான சந்திப்பு குறித்து தெரிவித்தார். தனக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி, தேர்தல் தொடர்பாக நேரில் பேசலாம், காலையில் கவர்னர் மாளிகைக்கு வருவதாக தெரிவித்தார்.

    இதனால் இன்று காலை கவர்னர் தமிழிசை நீண்ட நேரம் கவர்னர் மாளிகையில் காத்திருந்தார். ஆனால் காலை 10.30 மணி வரை முதல்-அமைச்சர் ரங்கசாமி வரவில்லை.

    இதனால் காரைக்காலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக கவர்னர் தமிழிசை புறப்பட்டு சென்றார். காரைக்காலிலிருந்து அவர் திரும்பிய பின் முதலமைச்சரை சந்திக்க கவர்னர் தமிழிசை திட்டமிட்டுள்ளார்.

    • உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கியது.
    • உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    பெங்களூருவில் 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளி கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. இவர் தனது உடல்நலம் பாதித்த தந்தையை பார்ப்பதற்காகவும், கேரளாவில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மதானிக்கு ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு வழங்கி, அவர் கேரளாவில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கடந்த 20-ந்தேதி கேரளாவுக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மீயன்னூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஜூவல்லரி மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை விற்றல், அடமானம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்கில் ஈடுபட்ட 10 பேர் கைது.
    • ஜெரோம், புவனேஸ்வரி ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமின் வழங்கி இருந்தது.

    புதுச்சேரி:

    காரைக்காலில் உள்ள ஜூவல்லரி மற்றும் வங்கிகளில் போலி தங்க நகைகளை விற்றல், அடமானம் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்கில், காரைக்கால் நகர போலீசார், கடந்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட புதுச்சேரி சப்.இன்ஸ்பெக்டர் ஜெரோம், அவரது கள்ளக்காதலி புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ், ரிபாத் காமில் உள்ளிட்ட 10 பேரை, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஜெரோம், புவனேஸ்வரி, சிவக்குமார், தேவதாஸ் ஆகிய 4 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு அளித்திருந்தனர்.

    னேஸ்வரி ஆகியோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன், ஜாமின் வழங்கி இருந்தது. மற்ற 2 பேருக்கு நேற்று ஜாமின் வழங்கியுள்ளது. இந்த 4 பேரும், தினசரி காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் காலை, மாலை என 2 வேளை கையெழுத்து போடவேண்டும் என அந்த நிபந்தனை ஜாமினில் குறிப்பிடபட்டுள்ளது.

    ×