search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர் வெடித்து பலி"

    • கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டையில் மூதாட்டி ஒருவர் இன்று அதிகாலை குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார்.

    நேற்று இரவு கியாஸ் சிலிண்டரை சரியாக மூடாததால் இரவு முழுவதும் கியாஸ் கசிந்து அறையில் பரவி இருந்தது.

    மூதாட்டி கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இதில் சிக்கிய மூதாட்டி மற்றும் அவரது 2 பேத்திகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் சுவர்களில் விரிசல் விழுந்தது.

    கியாஸ் சிலிண்டர் வெடிக்கும் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மூதாட்டியும் அவரது 2 பேத்திகளும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
    • தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் நந்தகோபால். இவரது மனைவி மகாராணி(வயது 65). முன்னாள் கவுன்சிலரான இவர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் வீட்டில் மகாராணி தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தூங்கி கொண்டிருந்த மகாராணி இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தார். மேலும் இந்த சிலிண்டர் வெடிப்பால் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

    இதுதொடர்பாக திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். உடனடியாக நிலைய அலுவலர் ராஜா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். தகவல் அறிந்து வந்த திசையன்விளை போலீசார், மகாராணி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    உயிரிழந்த மகாராணிக்கு கணவர், 4 மகன்கள், 2 மகள்களும் உள்ளனர். இதில் நந்தகோபாலுடன் ஒரு மகன் மற்றும் மகள் சுப்பிரமணியபுரத்தில் வேறு ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

    • கியாஸ் சிலிண்டர் வெடித்தபோது அப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் போல் கேட்டு உள்ளது.
    • வீட்டில் கியாஸ் கசிந்து இருப்பது தெரியாமல் கோபால் தீயை பற்ற வைத்ததால் கியாஸ்சி லிண்டர் வெடித்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    திருநின்றவூர்:

    ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபால் (வயது66). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன்கள் 2 பேர் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கோபால் மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தார். அவரை மகன்கள் அடிக்கடி பார்த்து கவனித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை கோபால் வீட்டில் இருந்த போது பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் வீடு முழுவதும் தீ பரவியது. இதில் கோபால் சிக்கி அலறினார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயில் சிக்கி உடல் கருகிய கோபாலை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கோபால் பரிதாபமாக இறந்தார். கியாஸ் சிலிண்டர் வெடித்தபோது அப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் போல் கேட்டு உள்ளது. இந்த அதிர்வில் கோபாலின் வீட்டில் இருந்த கதவு, ஜன்னல்கள் சேதம் அடைந்தன. மேலும் வீட்டில் இருந்த சிமெண்டு பலகை தூக்கி வீசப்பட்டதில் அருகே நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்றும் சேதம் அடைந்தது.

    சம்பவ இடத்தை ஆவடி உதவி கமிஷனர் புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் கியாஸ் கசிந்து இருப்பது தெரியாமல் கோபால் தீயை பற்ற வைத்ததால் கியாஸ்சி லிண்டர் வெடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×