search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமாட்சி அம்மன்"

    • வெற்றியை விரும்புவோர் காமாட்சியை விரும்பி வழிபடுவார்கள்.
    • மகப்பேறு, தொழில், அபிவிருத்தி, கல்வியில் தேர்ச்சி மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.

    பொதுவாகவே ஆண்களை விட பெண்கள் தான் அம்மனை அதிகம் வழிபடுகிறார்கள்.

    அதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கு இயற்கையாகவே அம்மன் மீது இருக்கும் ஈர்ப்பும், ஈடுபாடும் தான் காரணமாகும்.

    பெண்கள் இந்த ஆடி மாதத்தில் எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து

    காமாட்சி அம்மனுக்கு அணிவித்து வேண்டுதல் செய்தால் உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    துன்பங்கள் நீங்க காமாட்சியை வழிபடுவது நல்லது.

    எல்லாத் தீமைகளையும் அழித்து எல்லாத் தடைகளையும் போக்கி நல்வாழ்க்கையைத் தருபவள் காமாட்சியே ஆவாள்.

    வெற்றியை விரும்புவோர் காமாட்சியை விரும்பி வழிபடுவார்கள்.

    சிவன், விஷ்ணு, பிரம்மன், யமன், இந்திரன், முதலான தேவர்களின் மகாசக்திகளின் ஒட்டு மொத்த வடிவமாக காமாட்சி விளங்குவதால் அவள் பல ரூபங்களை கொண்டவள்.

    அவளை நினைத்தாலும் அவளுடைய மகாமந்திரங்களை ஜபித்தாலும் நமக்கு ஏற்படக்கூடிய மரண பயம், இகலோக பயம், பரலோக பயம், அரவு பயம், சுருதி பயம், வேதனா பயங்கள்உள்ளிட்ட அனைத்து பயங்களும் ஓடி ஒளிகின்றன.

    ஆடி மாதம் முழுவதும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் காமாட்சியை வழிபடுவது சாலச்சிறந்தது.

    ஒருவருடைய ஜாதகத்தில் கிரக தோஷத்தால் திருமணத் தடைகள் ஏற்பட்டிருக்கலாம்.

    இதிலிருந்து நிவர்த்தி பெற காமாட்சிக்கு புடவை சார்த்தி எலுமிச்சம்பழ மாலை, செவ்வரளி மாலை அணிவித்து

    பசு நெய் அல்லது நல்லெண்ணையால் தன் வயது எண்ணிக்கையுள்ள தீபம் ஏற்றி குங்குமத்தால்

    அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள் நீங்கும்.

    மகப்பேறு, தொழில், அபிவிருத்தி, கல்வியில் தேர்ச்சி மற்றும் சகல செல்வங்களும் பெருகும்.

    அம்பாளுக்கு எலுமிச்சை பழம் மாலை சார்த்தும் போது 18, 27, 54, 108, 1008 எண்ணிக்கை உள்ள

    எலுமிச்சம் பழ மாலையைச் சாற்றுவதால் நமக்கு உண்டாகும் உக்கிரமமான நோய்கள், வயிற்று உபாதைகள் தணிகின்றன.

    தீராத துன்பங்கள் நீங்குகின்றன.

    காமாட்சி மற்றும் துர்க்கை அம்மனுக்கு மாலையாக அணிவிக்கப்படும் சிறப்புடையது எலுமிச்சம்பழம்,

    இதனை குறுக்குவாட்டில் இரண்டாக நறுக்கி சாற்றை பிழிந்துவிட்டு மூடியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் விளக்கேற்றி வந்தால் அம்மனின் அருள் எளிதில் கிடைக்கும்.

    கன்னிப்பெண்கள் இவ்வாறு விளக்கேற்றி வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

    எலுமிச்சம் பழங்களை மாலையாகத் தொடுத்து காமாட்சி அம்மனுக்கு அணியும் வழக்கமும் உள்ளது.

    இவ்வாறு செய்வதால் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும்.

    எலுமிச்சை ஜீவ கனி மட்டுமல்ல. வெற்றிக் கனியுமாகும்.

    அந்தக் காலத்தில் அரசர்கள் எதிரி நாட்டின் மீது படையெடுத்துச் செல்லும் முன்பாக காவல் தெய்வம்,

    எல்லைத் தெய்வம் சம்கார தெய்வங்களை எலுமிச்சை மாலை அணிவித்து, அந்த தெய்வங்கள் முன்பாக நின்று

    உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்பிறகு தங்களது படைகளை வழி நடத்திச் செல்வார்கள்.

    போரில் வாகை சூடி திரும்பி வந்த பின்பு மீண்டும் எலுமிச்சை மாலை சூடி வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.

    பில்லி, சூனியம், மாந்திரீகம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றைக்கும் காளி அம்மனுக்கு

    எலுமிச்சை மாலை சூடி வணங்கி வழிபடுவதை திருவக்கரை வக்கிர காளியம்மன், பட்டீஸ்வரம் துர்கையம்மன்

    உள்ளிட்ட பல முக்கிய ஆலய வழிபாடுகளில் பிராதானமாக அமைந்துள்ளதைக் காணலாம்.

    பொதுவாக பத்ரகாளி, துர்க்கை, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது

    எலுமிச்சை மாலை சாத்துவார்கள். இந்த மாலையை தயாரிக்கும் போது ஒரே அளவுள்ள

    மஞ்சள் நிறமுள்ள பழங்களை மாலையாக கோர்ப்பது நல்லது.

    பழங்களின் எண்ணிக்கை 108, 54, 45, 18 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

    பழங்கள் காயாக இருக்கக்கூடாது.

    எலுமிச்சை மாலை சாத்தும் போது அத்தெய்வங்களை குளிர்விக்க தயிர்சாதம், பானகம் நிவேதனம் செய்ய வேண்டும்.

    கூழ் வார்த்தும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

    • வெள்ளீசுவரர் திருக்கோயில் புனிதம் மிக்கதாகக் கருதப்பட்டு மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.
    • தேவியின் திருக்கரம் பற்றி அழைத்து வர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார்.

    தேவியின் திருக்கரம் பற்றி அழைத்து வர மாங்காட்டை நோக்கி ஈசனும் புறப்பட்டார்.

    தேவியை நாடி ஓடோடி வந்த சிவனின் திருவடிகள் மாங்காட்டை நெருங்கியதும் அசையாமல் நின்று விட்டன.

    சிவநாமம் உச்சரித்து தவமிருக்கும் மாமுனிவன் குரல் கேட்டு உலகம்மையை நெருங்காமல் உறைந்துபோய் நின்று விட்டார்.

    இடைவிடாமல் சிவமந்திரத்தை உச்சரித்து கடுந்தவமிருக்கும் மாமுனிவர் சுக்கிர முனிவனாவார்.

    திருமால் வாமன அவதாரத்தின்போது மகாபலி சக்கரவர்த்தி தானதர்மங்கள் செய்யும்போது திருமால் வாமன வடிவத்தில் வந்து தானம் கேட்டார்.

    அசுர குருவாகிய சுக்கிராச்சாரியார் தானம் கேட்க வந்திருப்பது சிறுவனல்ல மகாவிஷ்ணுவே என்பதை உணர்ந்து மகாபலி சக்கரவர்த்தியிடம் "தானம் கொடுக்காதே" என்று கூறுகிறார்.

    வாமன வடிவில் வந்த திருமால் மூன்றடி மண் கேட்க, "நீங்கள் கூறும் தானத்தைக் கொடுக்கிறேன்" என்று கூறி கெண்டியிலிருந்து

    நீரை வார்த்துக் கொடுக்க முனைய அந்த கெண்டியின் துளை வழியில் அசுரகுரு சுக்கிராச்சாரியார் கருவண்டு வடிவத்தில் உருமாறித் தடுத்தார்.

    வாமன அவதாரத்தில் வந்த மகாவிஷ்ணு தன்னிடம் வைத்திருந்த தர்ப்பைப் புல்லினால் துளைப்பகுதியில் குத்தியவுடன் அதில் மறைந்திருந்த சுக்கிராச்சாரியார் வெளிவந்தார்.

    அப்போது சுக்கிராச்சாரியாரின் ஒரு கண் பார்வையை இழந்து விட்டது.

    தானம் கொடுப்பவர்கள் கொடுப்பதை யாரும் தடுக்கக் கூடாது என்பதை இந்நிகழ்ச்சியின் வாயிலாக அறிய முடிகிறது.

    பிறகு திருமாலிடம் சுக்கிரன் மன்னிப்புக் கேட்டு தன்னுடைய பார்வையை திரும்பவும் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு திருமால் "இப்பூவுலகில் மாங்காடு என்னும் தலத்தில் பார்வதிதேவி காமாட்சியாக வடிவெடுத்து பஞ்சாக்னி வளர்த்து தவம் செய்கிறாள்.

    அவளது தவத்தை பூர்த்தி செய்ய இறைவன் பூவுலகம் வருவார்.

    நீ மாங்காடு சென்று தவமிருந்தால் அத்தருணத்தில் உன் விழிக்கு பார்வை கிடைக்கும்" என்று கூறினார்.

    பின்னர் சுக்கிராச்சாரியார் மாங்காட்டுக்கு வந்து சிவலிங்கம் அமைத்து இறைவனுக்கு பூஜை செய்யச் சுக்கிர தீர்த்தக்குளம் ஒன்றை உருவாக்கி சிவனை எண்ணி தவம் செய்தார்.

    இறைவன் கயிலாயத்தில் இருந்து இப்பூவுலகில், கடும் தவம் புரிந்த காமாட்சி அம்மனுக்கு காட்சி தர வந்தார்.

    வரும் வழியிலேயே சுக்கிர முனிவர் சிவனை வழிபடுவது அறியவே, சுக்கிர முனிவரின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான்,

    முனிவரின் முன்தோன்றி அருள்புரிந்து சுக்கிர முனிவருக்கு பார்வை கொடுத்தார்.

    "உன் கடுந்தவம் என்னை மிகவும் ஈர்த்தது" எனக்கூறி ஈசன் தொண்டருள் அடக்கம் என்பதை மெய்ப்பிக்க

    அவருக்கு நல்லருள் புரிந்ததுடன், அவரது விருப்பத்தின் பேரில் அங்கேயே கோயில் கொண்டு அமர்ந்து விட்டார்.

    ஈசன் சுக்கிராச்சாரியாருக்கு கண் பார்வை இத்தலத்தில் கிட்டியதால் ஒரு கண் பார்வை மாறு கண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்

    இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம் என்கிறார்கள்.

    சுக்கிரனுக்கு வெள்ளி என்ற ஒரு பெயர் உண்டு.

    எனவே அவருக்கு அருள் புரிந்ததையட்டி 'வெள்ளீசுவரர்' என்ற திருநாமத்துடன் இன்றும் கோயில் கொண்டிருப்பதைக் காணலாம்.

    அதேபோல வடமொழியில் சுக்கிரனுக்கு பார்கவன் என்ற பெயர் உண்டு.

    அதையொட்டி இந்த வெள்ளீசுவரர் வடமொழியில் 'பார்கவேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.

    எளியோர்க்கும், வறியோர்க்கும் கடுந்தவம் முனைவோர்க்கும் காட்சி தரும் இறைவன் அம்மையை மட்டும் "மீண்டும் தவம் செய்வாய்.

    காஞ்சிபுரத்துக்கு வந்து தவத்தை தொடர்வாய்" என்று கூறி அங்கு அம்மையை மணம் புரிவதாக அசரீரியாய்க் கூறி மறைந்தார்.

    சுக்கிரமுனிவர் தாம் தவம் செய்த வெள்ளீஸ்வரராகிய லிங்கத்திற்கு தொடர்ந்து பூஜை செய்து வந்தார்.

    மாங்காட்டின் நடுவே பிலத்தில் கன்னிப்பெண் கடுந்தவம் செய்வதை அறிந்து, அவள் இறைவியே என்பதை உணர்ந்து அம்மையின் அருகில் சென்று வணங்கினார்.

    இறைவன் தனக்கு காட்சி கொடுத்த வரலாற்றையும் தன்பெயர் தாங்கி வீற்றிருப்பதையும் சிவனின் கருணைப் பொழிவையும் எடுத்துரைத்து,

    வெள்ளீஸ்வரரை சென்று தரிசனம் செய்து பின்னர் இறைவன் கட்டளைப்படி காஞ்சி மாநகர் சென்று திருமணம் செய்து கொண்டாள்.

    வெள்ளீசுவரர் திருக்கோயில் புனிதம் மிக்கதாகக் கருதப்பட்டு மக்கள் சென்று வழிபட்டு வருகிறார்கள்.

    • பெண்கள் எப்படி உட்கார வேண்டுமோ அந்த நிலையில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர்.
    • தீபம் காட்டும்பொழுது பெருமாளின் உதடுகள் புன்னகை பூக்கும் நிலையில் இருப்பதை காணலாம்.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு அருகில் உள்ளது.

    19.01.2000 அன்று மகாசம்ப்ரோஷனம் நடந்தேறியது.

    அருள்மிகு வைகுண்டநாதர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருக்கும் கோலம் நம்மைப் பரவசப்படுத்தும்.

    பெருமாளின் கையில் சக்கரம் பிரயோக நிலையில் உள்ளது. இது ஓர் அபூர்வ அமைப்பு.

    மேலும் மற்றொரு கையில் கணையாழி (மோதிரம்) காணப்படுகிறது.

    அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு சீதனமாக கணையாழியைக் கொண்டு வந்ததாக 'கர்ண பரம்பரை' வரலாறு கூறுகிறது.

    பெண்கள் எப்படி உட்கார வேண்டுமோ அந்த நிலையில் ஸ்ரீதேவியும், பூதேவியும் அமர்ந்திருக்கின்றனர்.

    அருகிலேயே ஸ்ரீமார்க்கண்டேய மாமுனியும் காட்சி தருகிறார்.

    கருடாழ்வார் அபூர்வ அமைப்புகளுடன் காட்சி தருகிறார்.

    தீபம் காட்டும்பொழுது பெருமாளின் உதடுகள் புன்னகை பூக்கும் நிலையில் இருப்பதை காணலாம்.

    ஸ்ரீ அனுமனுக்கு தனிச் சந்நிதியும், கனகவல்லித் தயாருக்கு தனிச்சந்நிதியும், ஸ்ரீஆண்டாளுக்கு தனிச்சந்நிதியும் பிரகாரத்துக்குள் அமைந்துள்ளன.

    திருக்கோயிலின் நுழைவு வாயிலின் யாழிகள் இருபுறமும் அழகிய தோற்றத்துடன் அமைந்து காணப்படுகின்றன.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயிலில் 'வைகானச' ஆகம முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

    இத்திருக்கோயிலில் 3 கால பூஜைகள் நித்திய பூஜைகளாக நடைபெற்று வருகின்றன.

    ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி இவ்வாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    • காஞ்சி மாநகரில் திருமணம் செய்து கொள்வதாகவும் அசரீரியாய் அறிவித்தார்.
    • எனவே வைகுண்டப் பெருமாளை ‘சீர்பெருமாள்’ என்றும் ‘தடைநீக்கும் பெருமாள்’ என்றும் அழைக்கிறார்கள்.

    பூவுலகில் பார்வதியை மணமுடிக்க பரமன் வருவதை அறிந்த திருமால், பூவுலக முறைப்படி திருமணம் நடைபெறுவதால் தன் குடும்பம் சீராக கணையாழியை வலக்கரத்தில் எடுத்துக்கொண்டு,

    இறைவனின் திருமணத்திற்கு தடையேதும் இருப்பின் அதனை விலக்கிடவே வலக்கரத்தில் அருளாழி என்னும் சக்கரம்,

    உடன் செலுத்தக்கூடிய நிலையில் பிரயோகச் சக்கரமாக தயார் நிலையில் வைத்துக் கொண்டு, புவிமாது திருமாது (பூமிதேவி, ஸ்ரீதேவி)

    புடைசூழ மாங்காட்டை வந்தடைந்தார்.

    இறைவியின் தவத்தால் பூவுலகில் தோன்றிய சிவபெருமான் சுக்கிர முனிவரின் கடுந்தவத்தால் இறைவிக்கு காட்சி கொடுக்காமல் அம்மையிடம் காஞ்சி மாநகர் வந்து தவம் செய்வதை தொடர்வாய் என்றும்,

    காஞ்சி மாநகரில் திருமணம் செய்து கொள்வதாகவும் அசரீரியாய் அறிவித்தார்.

    எனவே திருமாலும் காஞ்சி மாநகருக்கு புறப்பட்டார்.

    அம்மனின் தவம் காஞ்சி மாநகரிலும் தொடரும் என்றும் பின்னர்தான் திருமணம் நிகழ்வதாகவும் எனவே அதுவரையில் இங்கேயே தங்கும்படியும் மார்க்கண்டேய மகரிஷி (இருடி) திருமாலிடம் வேண்டினார்.

    அருள்மிகு வைகுண்டப் பெருமாள் (சீர் பெருமாள்):

    மார்க்கண்டேய மகிரிஷியின் வேண்டுதலுக்கிணங்க திருமால் அருள்மிகு வைகுண்டப் பெருமாளாக எழுந்தருளினார்.

    இறைவன் இறைவி திருமணத்திற்கு இடையூறு நிகழா வண்ணம் பிரயோகச் சக்கரத்துடன் இருக்கும் இவர் தன் தங்கைக்கு சீர்கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழியுடன் (மோதிரம்) காட்சி தருகிறார்.

    எனவே வைகுண்டப் பெருமாளை 'சீர்பெருமாள்' என்றும் 'தடைநீக்கும் பெருமாள்' என்றும் அழைக்கிறார்கள்.

    • குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும்.
    • பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    சித்திரைத் திருவிழா -10 நாட்கள்.

    இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் இத்தலத்தில் கூடுவர்.

    இத்திருவிழா தவிர தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, மாசி மகம், மகாசிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம் ஆகிய நாட்கள் இக்கோயிலில் விஷேச நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    அம்பாள் இத்தலத்தில் தவம் புரிந்து பின்னர் இதன் பயனால் காஞ்சியில் மணந்து கொண்டமையால் கன்னிப் பெண்கள் மஞ்சள் கயிற்றைக் கட்டி வழிபட்டால் மணக்கோலம் பூணுவர்.

    ஆண்களுக்கும் இது பொருந்தும்.

    குழந்தைச் செல்வம் இல்லாதோர் தொட்டில் கட்டி வழிபட்டால் வீட்டிலே மழலை விளையாடும்.

    பணி இல்லாதோரும் ஆறு வாரம் வழிபட்டால் பலன் கிடைக்கும்.

    உத்தியோக உயர்வுக்காவும், உடல் சார்ந்த குறைகள் நீங்கவும் இத்தலத்திற்கு பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

    நேர்த்திகடன்:

    அம்மனுக்கு (ஸ்ரீஅர்த்தமேருஸ்ரீசக்கிரம்) புடவை சாத்துதல், பால் அபிசேகம், அன்னதானம் செய்தல் ஆகியவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்யலாம்.

    • பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது.
    • மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது.

    நிறைமணி தரிசனம்

    பவுர்ணமியன்று மாலையில் இங்கு நவகலச ஹோமம் நடக்கிறது.

    ஒன்பது கலசங்களில், ஒன்பது சக்திகளை ஆவாஹனம் செய்து ஹோமமும், ஸ்ரீசக்ரத்திற்கு புஷ்பாஞ்சலியும் செய்கின்றனர்.

    புரட்டாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் நிறைமணி தரிசனத்தில் இனிப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், தானியம் இவற்றால் அர்த்தமண்டபம், தவ மண்டபம் மற்றும் முன் மண்டபத்தை அலங்காரம் செய்கின்றனர்.

    இந்த தரிசனம் கண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    முத்தேவியருடன் தங்கத்தேர்

    தினமும் மாலையில் இக்கோயிலில் தங்கத்தேரில் அம்பிகை, சரசுவதி, இலக்குமி மூவரும் உலா வருகின்றனர்.

    சப்தமாதர்களில் ஒருத்தியான பிராம்மி தேரோட்டியாக முன்புறம் இருக்கிறாள்.

    தேரைச்சுற்றிலும் நவகன்னியரும் இருக்கின்றனர்.

    மகாமண்டபத்திற்கு மத்தியில் அணையா குத்து விளக்கு இருக்கிறது.

    இதற்கு இடதுபுறம் தவ காமாட்சி சன்னிதி உள்ளது.

    • எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார்.
    • இவரை, “சீர் பெருமாள்” என்றும் அழைக்கிறார்கள்.

    சிவன், அம்பாளுக்கு அருள்புரிய இங்கு வந்தபோது, திருமாலும் தன் தங்கைக்குத் திருமணச்சீர் கொண்டு வந்தார்.

    ஆனால், சிவனின் கட்டளைப்படி அம்பாள் காஞ்சிபுரம் செல்லவே திருமாலும் கிளம்பினார்.

    அப்போது மார்க்கண்டேயர் பெருமாளை இங்கேயே தங்கும்படி வேண்டினார்.

    எனவே திருமால், வைகுண்டப்பெருமாளாக இங்கு எழுந்தருளினார்.

    பிரயோக சக்கரத்துடன் இருக்கும் இவர், சீர் கொண்டு வந்ததன் அடையாளமாக கையில் கணையாழி (மோதிரம்) வைத்திருக்கிறார்.

    இவரை, "சீர் பெருமாள்" என்றும் அழைக்கிறார்கள்.

    • அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள்.
    • சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார்.

    திருமால், மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள வாமன அவதாரம் எடுத்து வந்தபோது, சுக்ராச்சாரியார் தடுத்தார்.

    அதைக் கேட்காத மகாபலி, திருமாலிடம் கமண்டல நீரை ஊற்றித் தாரை வார்த்துக்கொடுக்க முயன்றார்.

    அப்போது, சுக்ராச்சாரியார் வண்டு வடிவம் எடுத்து, கமண்டல நீர் வெளியேறும் பகுதியை அடைத்து நின்றார்.

    அப்பகுதியைத் திருமால் ஒரு தர்ப்பைப்புல்லால் குத்தினார்.

    எனவே, ஒரு கண் பார்வையிழந்த சுக்ராச்சாரியார் மீண்டும் பார்வை வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார்.

    அதேசமயம் காமாட்சியம்மனும் இங்கு தவம் புரிந்து கொண்டிருந்தாள்.

    அம்பிகைக்கு காட்சி கொடுக்க வந்த சிவன், முதலில் சுக்ராச்சாரியாருக்கு காட்சி கொடுத்தார்.

    இவ்வாறு, அம்பிகையை விட தன்னை வேண்டிய பக்தனுக்கே அருளினார் சிவன்.

    • இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள்.
    • நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம்.

    கருவறையில் அம்பாளாகப் பாவித்து வணங்கப்படும் ஸ்ரீசக்ரம், அதற்கு பின்புறம் பஞ்சலோகத்தால் ஆன ஆதிகாமாட்சி

    மற்றும் முன் மண்டபத்தில் பஞ்சாக்னியில் தவம் செய்யும் காமாட்சி என இங்கு மூன்று அம்பாளையும் ஒருசேரத் தரிசிக்கலாம்.

    இதுமட்டுமின்றி ஆதிகாமாட்சி அருகில், சிறிய காமாட்சி விளக்கும் எரிந்து கொண்டிருக்கிறது.

    இந்த விளக்கையும் அம்பிகையாகவே கருதி வழிபடுகிறார்கள்.

    இவ்வாறு இக்கோயிலில் நான்கு அம்பிகைகளையும் முன் மண்டபத்திலிருந்து ஒரே சமயத்தில் தரிசிக்கலாம்.

    கருவறையில் உள்ள அம்பாள், வலக்கையில் கிளி வைத்து, தலையில் பிறைச்சந்திரனை சூடியிருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    • சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.
    • இச்சக்கரத்திற்கு விசயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது.

    இக்கோயிலிலுள்ள அர்த்தமேரு ஸ்ரீசக்கரம் மிகவும் விசேஷமானது.

    43 திரிகோணங்கள் கொண்ட இச்சக்கரம், "அஷ்டகந்தம்" என்னும் எட்டு வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது.

    இந்த அர்த்தமேரு ராஜயந்திரமாகும்.

    இதற்கு கூர்மம் (ஆமை) உருவத்தை அடித்தளமாக்கி அதன் மேல் மூன்று படிக்கட்டுகள் கட்டி அதற்கு மேல் 16 இதழ் தாமரை அமைத்து, அதற்கும் மேல் 8 இதழ் தாமரை அமைத்து, அதன்மேல் ஸ்ரீசக்ர இயந்திரம் வரையப்பட்டுள்ளது.

    இந்த அர்த்தமேரு மிகப்பெரியது. இம்மாதிரி வேறு எங்குமே இல்லை.

    இதற்கு 18 முழப்புடவை அணிவிக்கிறார்கள். எனவே இதற்கு அபிசேகம் கிடையாது.

    சந்தனம், புனுகு, சந்தனம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்கின்றனர்.

    இச்சக்கரத்திற்கு விசயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது.

    அன்று ஒருநாள் மட்டும் இதனை தங்க கவசத்தில் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருக்கும்.

    • காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • விஸ்வகர்மா ஐந்தொழில் செய்வோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    மதுரை

    திருமங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சி செக்கானூரணியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் 9-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.

    பால்குடம், மஞ்சள்நீர் எடுத்தல், முளைப்பாரி, கரகம் எடுத்து பூஞ்சோலை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் விஸ்வகர்மா ஐந்தொழில் செய்வோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால் (கல் தூண்களால்) அமைக்கப்பட்டுள்ளது.
    • ஸ்ரீ சக்கர பீடத்தைப் பூஜித்து, ஆதி சங்கரர் அன்னையின் அருள் பெற்றார் என்று கோவில் வரலாறு கூறுகின்றது.

    காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால் (கல் தூண்களால்) அமைக்கப்பட்டுள்ளது.

    காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில், நாம் தரிசனம் செய்யக்கூடிய சந்நிதிகள் இருபத்துநான்கு. அவையாவன:

    காயத்ரி மண்டபம்

    காமகோடி காமாட்சி (கருவறையில்)

    காமகோடி பீடமாகிய ஸ்ரீ சக்கரம் (கருவறையில்)

    தபஸ் காமாட்சி

    பிலாகாசம்

    அரூப லக்ஷ்மி எனப்படும் அஞ்சன காமாட்சி

    வராஹி

    சந்தான ஸ்தம்பம்

    அர்த்த நாரீஸ்வரர்

    ரூப லக்ஷ்மியும், கள்ளர் பெருமாளும்

    அன்னபூரணி

    தர்ம சாஸ்தா

    ஆதி சங்கரர்

    துர்வாச முனிவர்

    உற்சவ காமாட்சி

    துண்டீர மகாராஜா

    (அஷ்ட புஜ) மகா சரஸ்வதி

    தர்ம ஸ்தம்பம்

    காசி கால பைரவர்

    துர்க்கை

    காசி விஸ்வநாதர்

    பஞ்ச கங்கை

    பூத நிக்ரக பெருமாள்

    அகஸ்தியரும், ஹயகிரீவரும்

    மேற்கண்ட சந்நிதிகளுள், முக்கியமாகக் கருதப்படும் சில சந்நிதிகளைப்பற்றி விபரமாகப் பார்ப்போம்.

    காயத்ரி மண்டபம்

    காமாட்சி ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் காயத்ரி மண்டபம் உள்ளது. இது இருபத்து நான்கு ஸ்தம்பங்களால் (கல் தூண்களால்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் மத்தியில்தான், காமாட்சி அம்மன் மூல விக்கிரகமாக அழகுற அமர்ந்திருக்கிறாள்.

    காமகோடி காமாட்சி

    மேற்படி காயத்ரி மண்டபத்தின் மத்தியில் அன்னை காமாட்சி அம்பாள் தென் கிழக்காக, நான்கு கரங்களுடன், பத்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறாள். அவளது திருக்கரங்களில், பாசம், அங்குசம், மலர் அம்பு (புஷ்ப பாணம்), கரும்பு வில் முதலிய ஆயுதங்களைத் தாங்கி இருக்கின்றாள். இங்கு, மூலமூர்த்தியாகிய அம்பிகையே ஸ்தூல வடிவத்தில், தன்னுடைய பக்தர்கள் தன்னைத் தரிசித்த மாத்திரத்திலேயே சகல வரங்களையும் தந்து அருள் புரிவதால், அன்னை காமகோடி காமாட்சி என்னும் திருநாமத்துடன் விளங்குகின்றாள்.

    காஞ்சிபுரத் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். அந்த சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர்.

    அரூப லக்ஷ்மி என அழைக்கப்படும் அஞ்சன காமாட்சி

    மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லக்ஷ்மியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.

    (அழகே உருவான லக்ஷ்மி தேவி அரூப உருவம் கொண்டது ஏன்? இக் கேள்விக்குரிய பதிலாக, ஒரு சுவையான கதை நமது புராணங்களில் காணப்படுகின்றது. அந்தக் கதையைப் பின்னர் படியுங்கள்.)

    காமகோடி பீடம் என அழைக்கப்படும் ஸ்ரீ சக்கரம்

    அன்னை காமாட்சியின் காரண வடிவமான ஸ்ரீ சக்கரம், கருவறையினுள், மூலவரான காமாட்சி அம்பாளின் எதிரில் காட்சியளிக்கின்றது. (அதனால், இத் திருத்தலம் ஸ்ரீ சக்கர பீடத் தலம் என அழைக்கப்படுகின்றது). அன்னை காமாட்சியே ஸ்ரீ சக்கரமாகவும் விளங்குகின்றாள். வட்ட வடிவமான தொட்டி போன்று சக்கர பீடம் அமைந்துள்ளது. இந்தப் பீடத்தின் உட்சுவர்களில் அஷ்ட லக்ஷ்மிகளின் திரு உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தொட்டியின் மத்தியில், பீடத்தில், அபூர்வ சக்திகள் நிறைந்த ஸ்ரீ சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது.

    இந்த ஸ்ரீ சக்கர பீடத்தைப் பூஜித்து, ஆதி சங்கரர் அன்னையின் அருள் பெற்றார் என்று கோவில் வரலாறு கூறுகின்றது.

    சந்தான ஸ்தம்பம்

    காமாட்சி அன்னையின் இடது புறத்தில் உள்ள வராஹி தேவியின் எதிரில், சந்தான ஸ்தம்பம் உள்ளது. இந்த ஸ்தம்பத்தைப் பிரதட்சணம் செய்யும் பக்தர்களுக்குப் புத்திர பாக்கியம் உண்டாகும் என்பது அம்பாளின் அருள்வாக்கு.

    அர்த்தநாரீஸ்வரர்

    காயத்ரி மண்டபத்தில், தேவிக்கு வலது பக்கத்தில் தெற்குத் திசை நோக்கியவண்ணம் அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி உள்ளது.

    காசி விஸ்வநாதர்

    காமாட்சி அன்னை ஆலயத்தின் மூன்றாவது பிரகாரத்தில், கிழக்குப் பக்கத்தில், கிழக்குத் திசையை நோக்கியவண்ணம் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது.

    மகிஷாசுரமர்த்தனி

    காமாட்சி அன்னையின் ஆலயத்தில் மூன்றாவது பிரகாரத்தில், கீழ்க் கோபுரத்தின் உட்புறம், தேவியை நோக்கியவண்ணம், மகிஷாசுரமர்த்தனி தேவி நின்ற கோலத்தில் அருள் புரிகின்றாள்.

    அன்னபூரணி

    காமாட்சி அன்னையின் முதல் பிரகாரத்தில், காயத்ரி மண்டபத்துக்குச் செல்லும் வழியில் அன்னபூரணி அன்னையின் சந்நிதி கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ளது.

    அழகே உருவான லக்ஷ்மி தேவி, காஞ்சிபுரத்தில் அரூப லக்ஷ்மியாக வடிவம் கொண்டது ஏன்? நமது புராணங்கள் கூறும் சுவையான கதையை இப்போது படியுங்கள்.

    முன்னொரு காலத்தில், அமுதத்தை அடைவதற்காக, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து, பாற்கடலைக் கடைந்தார்கள். மந்தார மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு, தேவர்கள் ஒருபுறமாகவும், அசுரர்கள் மறு புறமாகவும் நின்று, பாம்பை இருபக்கமும் மாறி மாறி இழுத்து, பாற்கடலைக் கடைந்தார்கள். வலி தாங்க முடியாமல் வாசுகிப் பாம்பு விஷக் காற்றைக் கக்கியது. அந்த விஷக்காற்றின் தாக்கத்தால், மகாவிஷ்ணுவின் திரு மேனி (உடல்) கறுப்பாக மாறி விட்டது.

    பாற்கடலை மேலும் கடைந்தபோது, அங்கே லக்ஷ்மி தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு மணந்துகொண்டார். அப்போது, லக்ஷ்மி, மகாவிஷ்ணுவின் கறுத்த மேனியைப் பார்த்துப் பரிகாசம் செய்தாள். அவர் தன்னைவிட அழகில் குறைந்தவரே என்று கேலி செய்தாள்.(லக்ஷ்மி தேவி அழகிய பொன் நிற மேனியை உடையவள்.)

    லக்ஷ்மியின் கர்வத்தை அடக்க விரும்பிய மகாவிஷ்ணு, "நீ கர்வம் கொண்டு என்னைப் பரிகாசம் செய்ததால், உன்னுடைய அழகு அரூபமாகப் போகக் கடவது" என்று சாபமிட்டார்.

    மனம் வருந்தி அழுது, மன்னிப்புக் கோரிய லக்ஷ்மியிடம், "நீ காமகோட்டம் (காஞ்சிபுரம்) சென்று தவம் செய்" என்று கூறினார்.

    அவ்வாறே, தாங்கமுடியாத மனவருத்தத்துடன், காமகோட்டம் வந்துசேர்ந்த லக்ஷ்மியை வாழ்த்தி வரவேற்ற அன்னை காமாட்சி, அவளுக்கு" அஞ்சன காமாட்சி" என்று பெயரிட்டு, தன இடது பக்கத்தில் அமர்ந்திருக்குமாறு இடம் கொடுத்தாள்.

    மேலும், "என்னை வணங்க வரும் பக்தர்கள் பெறும் அர்ச்சனைக் குங்குமத்தை உன் திருவடிகளில் சமர்ப்பிக்கும்போது, அந்த அர்ச்சனைக் குங்குமத்தின் மகிமையெல்லாம் ஒன்றுசேர்ந்து, உன் உண்மையான வடிவத்தைப் பெறுவாயாக. மேலும், உன்னை உள்ளன்புடன் வணங்கும் பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வழங்கி, அவர்களுக்கு நல்ல வாழ்வை வழங்குவாயாக" என்று கூறி அன்னை லக்ஷ்மி தேவிக்கு அருள் புரிந்தாள்.

    அன்றுமுதல், மங்கள நாயகியாம் அன்னை காமாட்சியின் அருட்பார்வையாலும், குங்குமப் பிரசாத மகிமையாலும், இழந்த அழகையெல்லாம் மீண்டும் பெற்று, லக்ஷ்மி தேவி அழகுருக்கொண்டு விளங்கினாள்.

    காமாட்சி அன்னையின் திருக்கோவிலில், அன்னை காமாட்சிக்கு நடைபெறும் மாசி மாதப் பிரமோத்சவம் மிகவும் விசேடமானது. இவ்விழாவின் இறுதிநாள் உதயம் விசுவரூப சேவை மிகவும் முக்கியத்துவமும், விசேடமும் உடையது.

    தன்னை நாடி வரும் பக்தர்களின் இன்னல்களைப் போக்கி, இன்பத்தை நல்கும் மங்கள நாயகியாய், வேண்டுவார்க்கெல்லாம் வேண்டுவன நல்கும் அருள் வடிவினளாய் விளங்கும் அன்னை காமாட்சியின் பேரெழிலை வர்ணித்துப் போற்ற வார்த்தைகள் போதாது. அந்த அன்னையின் திருவடித் தாமரைகளைத் தினமும் வணங்கி, அவளது பேரருளைப் பெற்று, துன்பங்களையெல்லாம் அகற்றி, இனிய நல்வாழ்வைப் பெறுவோமாக.

    ×