என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலக்ட்ரிக் வாகனம்"

    • 12 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மதிப்பில் குப்பைகள் எடுத்துச் செல்லும் எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி தலைமை தாங்கினார்.

    காவேரிப்பட்டினம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தூய்மை பாரத இயக்கம் மற்றும் 15 வது நிதிக் குழு மான்ய திட்டத்தின் கீழ் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்துகுட்பட்ட 12 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மதிப்பில் குப்பைகள் எடுத்துச் செல்லும் எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன்,செந்தில் ஆகியோர் முன்னில வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வாகனங்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, மகேந்திரன் பேரூர் கழக செயலாளர் பாபு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சங்கீதா கேசவன், நித்தியா சங்கர், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், அஸ்லாம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • பாரம்பரியம் மிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் புது மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன
    • ஒரு பேட்டரி சுமார் 10 கிலோ எடையுள்ளது என்பதை நினைவுபடுத்தினார் தருண்

    ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ.100 எனும் அளவில் விற்பனையாகிறது. இந்த விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வந்தவர்களுக்கு பேட்டரியை பயன்படுத்தி இயங்கும் எலக்ட்ரிக் வாகனங்கள் (electric vehicle) நல்ல மாற்றாக உருவெடுத்தது.

    ஏத்தர், ஓலா போன்ற புது நிறுவனங்களும், வாகன தயாரிப்பில் பாரம்பரியம் மிக்க பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் போன்ற நிறுவனங்களும் தங்கள் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

    இந்தியாவில் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம், ஏத்தர்.

    வளர்ந்து வரும் இத்துறையில் அடுத்த முன்னெடுப்பாக சார்ஜ் குறைந்தவுடன் தங்கள் இரு சக்கர வாகனத்தில் உள்ள பேட்டரியை, நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் பரிமாற்றி (battery swapping) கொள்ளும் வசதியை ஆங்காங்கே ஏற்படுத்த சில நிறுவனங்கள் முனைந்து வருகின்றன. இவ்வசதியை ஒரு சிறப்பு அம்சமாக கூறி வாகன விற்பனையும் நடந்து வருகிறது.

    ஆனால், இந்த முயற்சியை ஏத்தர் நிறுவன தலைமை செயல் அதிகாரி (CEO) தருண் மேத்தா (Tarun Mehta) விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

    ஒரு பேட்டரி என்பது 10 கிலோ எடைக்கு குறையாமல் இருக்கும். அதனை மாற்றி பொருத்தும் போது கீழே போட்டு விட கூடாது. வயதானவர்களுக்கு இப்பணி எளிதில்லை. அவர்களுக்கு உதவ பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு மாற்றலுக்கான பணியகத்தில் 200 பேட்டரிகளாவது எப்போதும் முழு சார்ஜுடன் இருக்க வேண்டும். இதற்கு பெரிய பரப்பளவிலான இடம் தேவைப்படும். இந்த பேட்டரிகள் அனைத்தும் விலையுயர்ந்தவை என்பதால் அவற்றை பாதுகாக்க இரவும் பகலும் பணியில் இருக்கும் பாதுகாப்பாளர்களை நியமிக்க வேண்டும். இவையனைத்தும் செலவினங்களை கூட்டி விடும். இதை தவிர, ஒரு புது எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை வாங்கியவர், சார்ஜிங் நிலையத்தில் உள்ள பழைய பேட்டரியுடன் தனது புது பேட்டரியை பரிமாற்றி கொள்ள தயங்குவார். எனவே நாங்கள் இத்திட்டத்தை பெரிதாக ஆதரிக்கவில்லை.

    இவ்வாறு தருண் கூறியுள்ளார்.

    • ஓலா ஷோரூமில் இருந்து கடந்த மாதம் புத்தம்புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இறக்கி உள்ளார்.
    • குட்டி யானையில் ஸ்கூட்டரை தூக்கிப்போட்டு நேராக ஓலா ஷோரூமுக்கு வண்டியை விட்டுள்ளார்.

    எலக்ட்ரிக் வாகனங்களை அரசு ஊக்குவித்தாலும் அவற்றை பராமரிப்பது பழுதுபார்ப்பதில் உள்ள சிக்கல் வாடிக்கையாளர்களைப் பின்வாங்கச் செய்து வருகிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஓலா விளங்கி வருகிறது.

    அந்த வகையில் ஒரு வாடிக்கையாளர் ஓலா ஷோரூமில் இருந்து கடந்த மாதம் புத்தம்புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை இறக்கி உள்ளார். ஆனால் வாங்கிய ஒரு மாதத்திலேயே அதில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.

    ஆனால் அதை பழுதுபார்க்க ஓலா நிறுவனம் ரூ.90,000 சார்ஜ் கேட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் குட்டி யானையில் ஸ்கூட்டரை தூக்கிப்போட்டு நேராக ஓலா ஷோரூமுக்கு வண்டியை விட்டுள்ளார்.

    ஷோரூம் வாசாலில் தடாலடியாக அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குட்டி யானையில் இருந்து இறக்கிய அவர் கையோடு கொண்டு வந்த சுத்தியலால் ஆத்திரம் தீர அதை அடித்து துவம்சம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ரிப்பேர் செய்ய ரூ.90,000 ஓலா கேட்டதையும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம், Ola Electric நிறுவனம் தங்களுக்கு வந்த 10,644 புகார்களில் 99.1 சதவீதம் தீர்க்கப்பட்டதாக்கத் தேசிய நுகர்வோர் உதவி மையத்தில் (NCH) கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  முன்கூறிய சம்பவம் எங்கு எப்போது நடந்து என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

    ×