என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாராளுமன்றம் தேர்தல்"
- “திராவிடம் வெல்லும்; அதை வரலாறு என்றும் சொல்லும்” என்பதையும் நிரூபித்து விட்டார்.
- காவிகளின் பொய்யுரை எடுபடவில்லை. காவிக் கறை வடஇந்தியாவில் கலைய, கரையத் தொடங்கி விட்டது.
சென்னை:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
வெளிவந்த தேர்தல் முடிவுகளின்படி, வரலாற்றில் மறக்க முடியாத, மறைக்க முடியாத, மறுக்க முடியாத, மகத்தான வெற்றியாக தமிழ்நாடு-புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடவைத்து, "இந்த நாற்பது-இனியவை நாற்பது" என்பதை உணர்த்தி, பிரகடனப்படுத்தியதற்குக் காரணமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்ட வார்த்தைகளே இல்லை!
அவரது கடும் உழைப்பும், திட்டமிட்ட மதியூக வியூகமும் தந்த வெற்றிக்கனிகள் இவை. கலைஞர் தம் நூற்றாண்டு நிறைவில் இந்த இனிய நாற்பதைக் கொண்டு முதலமைச்சரும் கூட்டணியினரும் கட்டிய இந்த வெற்றி மாலையைக் கலைஞரின் தோளுக்குச் சூட்டிடும் அவரது முயற்சியின் மூலம், மீண்டும் "இது பெரியார் மண்தான்" என்பதையும், "திராவிடம் வெல்லும்; அதை வரலாறு என்றும் சொல்லும்" என்பதையும் நிரூபித்து விட்டார்,
அவரே அதன் வெற்றிக்கும் அடித்தளமிட்டார். அந்த வெற்றித் திருமகனாருக்குத் தாய்க் கழகத்தின் வாழ்த்துகள்!
காவிகளின் பொய்யுரை எடுபடவில்லை. காவிக் கறை வடஇந்தியாவில் கலைய, கரையத் தொடங்கி விட்டது.
காங்கிரசும், இளந்தலைவர் ராகுல் காந்தியின் இடையறாத பிரசாரச் சுனாமியும் இந்தியா, கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த பிரசாரமும் முகிலைக் கிழித்து எறிந்து புதிய விடியலுக்கு வித்திட்டிருக்கின்றன!
இதற்குக் காரணமான வாக்காளர்களுக்கு நன்றியுடன் கூடிய வாழ்த்துகள்!
சர்வாதிகார வெறிக்கு அணை போடப்பட்டுள்ளது; அந்த அணை முழுமையாவதற்கு முழுக் கவனமும் அரசியல் வியூகமும் தேவை! அதற்கும் தமிழ்நாடும் அதன் மதியூகியான நமது தி.மு.க. தலைவரும் கலங்கரை வெளிச்சமாக என்றும் இருப்பார் என்பது உறுதி!
ஜனநாயகத்தின்-அரசியல் சட்டத்தின் தலை தப்பியுள்ளது.
இவ்வாறு கி.வீரமணி கூறி உள்ளார்.
- பா.ஜனதாவின் ஹாட்ரிக் கனவை காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் கலைத்துவிட்டார்.
- பனஸ்கந்தா தொகுதியில் பால்த்துறை அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் மொத்தமுள்ள 26 பாராளுமன்ற தொகுதிகளில் 25 இடங்களை பா.ஜனதா கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.
பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் 30 ஆயிரத்து 406 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவர் 6 லட்சத்து 71 ஆயிரத்து 883 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் ரேகாபென் ஹிதேஷ்பாய் சவுதாரி 6 லட்சத்து 41 ஆயிரத்து 477 வாக்குகள் பெற்றார்.
இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் இதற்கு முன் 2009 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 11 தொகுதிகளை கைப்பற்றியது.
கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதனால் இங்கு தொடர்ந்து 3-வது முறையாக அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற பா.ஜனதா தீவிரம் காட்டியது.
ஆனால் பா.ஜனதாவின் ஹாட்ரிக் கனவை காங்கிரஸ் பெண் வேட்பாளர் ஜெனிபன் தாகோர் கலைத்துவிட்டார்.
பனஸ்கந்தா தொகுதியில் கணிசமான செல்வாக்கைக் கொண்ட தாகோர் சமூகத்தை சேர்ந்த ஜெனிபன் தாகோருக்கு அதிக ஆதரவு இருந்தது. மேலும் அவரது வெற்றியில் உள்ளூர் செல்வாக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக ரூ.50 லட்சத்தை நன்கொடையாக மக்கள் வழங்கினர். பனஸ்கந்தா தொகுதியில் எந்த அரசியல் கட்சியும் தாகோர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக் களமிறக்கவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு, அந்த சமூகத்தை சேர்ந்த வரை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முடிவு செய்து ஜெனிபனுக்கு டிக்கெட் கொடுத்தது.
பனஸ்கந்தா தொகுதியில் பால்த்துறை அரசியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு பா.ஜனதா வேட்பாளர் ரேகாபெனின் தாத்தா கல்பபாய் படேல், பனாஸ் பால் பண்ணையின் நிறுவனர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்த தேர்தல் களம் ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாகும்
- தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அளிக்கையில், "இந்த தேர்தல் களத்தை ஜனநாயக சக்திகளுக்கும், பாசிச சக்திகளுக்கும் இடையிலான சித்தாந்த போராட்டமாக மனிதநேய ஜனநாயக கட்சி கருதுகிறது.
நாட்டின் பன்மை கலாச்சாரத்தையும், ஜனநாயக மாண்புகளையும் பாதுகாப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனையாக மாறியுள்ளதை கவனத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதா? தேர்தல் அரசியலை முன்னிறுத்தும் ஜனநாயகத்தை பாதுகாப்பதா? என்ற நிலையில் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
கடந்த இரண்டு வாரங்களாக சான்றோர்கள், அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் நல்லெண்ண கருத்துகளை உள்வாங்கி, 18.03.2024 அன்று நடைபெற்ற கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசத்தை காக்கும் அறப்போரில் கட்டுமரத்தில் பயணிப்பதா? போர் கப்பலில் பயணிப்பதா? என்ற நிலையில், I.N.D.I.A கூட்டணி என்ற போர் கப்பலில் ஏறியுள்ளோம்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான I.N.D.I A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் 39 பாராளுமன்ற தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இக்கூட்டணியின் வெற்றிக்காக களமிறங்கி பணியாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- 3 கட்சிகளும் தொகுதி விருப்பப்பட்டியலை தி.மு.க.விடம் இன்று வழங்குகிறார்கள்.
- கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலையொட்டி இன்று மாலையில் தி.மு.க. தனது கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன், முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நடத்துகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா ஆகியோர் அடங்கிய தொகுதி பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மதியம் 3 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் 4 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் 5 மணிக்கு கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதே போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.இந்த முறை அதே தொகுதிகள் ஒதுக்கப்படுமா? அல்லது தொகுதி மாற்றி கொடுக்கப்படுமா? என்பது இன்று நடைபெறும் பேச்சு வார்த்தையில் தெரியவரும்.
இதற்காக 3 கட்சிகளும் தொகுதி விருப்பப்பட்டியலை தி.மு.க.விடம் இன்று வழங்குகிறார்கள்.
- பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
- பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஓசூர்:
ஓசூரில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மனிதநேய ஜனநாயக கட்சி மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி, நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், முருகன், சாந்தன் ஆகியோர் இன்னும் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களை விடுவித்து, அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு சென்று நிம்மதியாக வாழ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த 30 ஆண்டுகளில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள், இலங்கை அரசுடன் பேசி தமிழர்கள் கொல்லப் படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின்னர், கட்சியின் தலைமை நிர்வாக குழு கூட்டத்தை கூட்டி, எங்களின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, நாட்டில் என்னென்ன நடக்கப் போகிறது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நாங்கள் ரத்து செய்துள்ளோம்
- எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரலாம்.
புதுடெல்லி:
உலகளாவிய வணிக உச்சி மாநாடு டெல்லியில் நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வாயிலாக குடியுரிமை வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்படும். இது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நாங்கள் ரத்து செய்துள்ளோம், எனவே நாட்டு மக்கள் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 370 இடங்களில் வெற்றியை தருவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.
பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து எந்த சஸ்பென்சும் இல்லை. காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் கூட தாங்கள் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமர வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன. எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரலாம்.
இந்த தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான தேர்தலாக இருக்காது. மாறாக வளர்ச்சியை கொடுக்கும் எங்களுக்கும், வெற்று கோஷங்களை கொடுப்பவர்களுக்கும் இடையே நடக்கும் தேர்தலாக இருக்கும்.
1947-ம் ஆண்டு நாட்டை பிரித்ததற்கு காங்கிரஸ் கட்சி காரணமாக இருந்தது. இதனால் நேரு, காந்தி ஆகியோரின் வாரிசுகளுக்கு ஒற்றுமை யாத்திரை நடத்த உரிமை இல்லை.
2014-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை இழந்த போது நாடு மோசமான நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் பொருளாதாரம் சீரழிந்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்திருந்தது. வெளி நாட்டு முதலீடுகள் வரவில்லை.
அந்த நேரத்தில் நாங்கள் ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருந்தால் அது உலகுக்கு தவறான செய்தியை கொடுத்திருக்கும். ஆனால் 10 ஆண்டுகளுக்கு பிறகு எங்களது அரசு பொருளாதாரத்தை மீட்டெடுத்து வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்துள்ளது. எங்குமே ஊழல் இல்லை. எனவே வெள்ளை அறிக்கை வெளியிட இதுவே சரியான தருணம். எனவே வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உள்ளோம்.
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்டப்பட வேண்டும் என்று 500 முதல் 550 ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அரசியல், சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. அதை இப்போது நிறை வேற்றியுள்ளோம்.
ராமர் கோவில் திறப்பு விழாவை காங்கிரஸ் கட்சியினர் ஏன் கொண்டாடவில்லை?
இவ்வாறு அவர் பேசினார்.
- வக்கீல் சதீஷ் சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
- ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
சென்னை:
பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனி அணியாக செயல்படுகிறது. பா.ஜ.க.வை தவிர்த்து மற்ற கட்சிளை இணைத்து போட்டியிட தீவிரமாகி வருகிறது.
அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வம், பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்று தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அதற்கான அரசியல் வியூகங்களை வகுத்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கடந்த முறை தேனி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே போல இந்த முறையும் அந்த தொகுதியில் மகனை நிறுத்த முடிவு செய்துள்ளார்.
மேலும் அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்ட தன்னை இந்த தேர்தல் மூலம் அ.தி.மு.க. தொண்டர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதற்காக 5 தொகுதிகளை கேட்டு பா.ஜ.க. தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளர்களான கோபால கிருஷ்ணன் (மதுரை), ஜே.சி.டி. பிரபாகர் (ஸ்ரீபெரும்புதூர்), புகழேந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், மற்றும் சென்னை மாவட்ட செயலாளர் வக்கீல் எம்.வி. சதீஷ் ஆகியோரில் சிலரை வேட்பாளராக நிறுத்தவும் முடிவு செய்துள்ளார். வக்கீல் சதீஷ் சென்னையில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா கட்சி தாயராகி வருகிறது.
- ஒவ்வொரு மாநில முதல்-மந்திரியுடனும் நீண்ட விவாதத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா கட்சி தாயராகி வருகிறது. கடந்த திங்கட்கிழமை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தினார்.
அதன் அடிப்படையில் ஆட்சியிலும், கட்சியிலும் சில மாற்றங்களை கொண்டு வர பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அடுத்த வாரம் வியாழக்கிழமைக்குள் இது தொடர்பாக சில அறிவிப்புகளை வெளியிடவும் இவர் தீர்மானித்துள்ளார். இந்த நிலையில் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்-மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து மோடி விரிவான ஆலோசனை நடத்த உள்ளார்.
நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாநில முதல்-மந்திரியுடனும் நீண்ட விவாதத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே 12-ந் தேதி திங்கட்கிழமை வரை பா.ஜ.க. முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய வியூகம் வகுப்பது தொடர்பாகவும் அவர்கள் பேச இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா, பொதுச் செயலாளர் சந்தோஷ் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது பற்றி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. மேலும் வருகிற 23-ந் தேதி எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஒன்றுகூடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
- பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. முழு வேகத்தில் தயாராகி வருகிறது.
- அமித் ஷா வேலூருக்கு வருகை தர இருப்பது மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்:
பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க. முழு வேகத்தில் தயாராகி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்திலும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி வேலூரில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வருகிற 8-ந் தேதி (வியாழக்கிழமை)நடைபெறுகிறது.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார். இதுகுறித்து பா.ஜ.க. மேலிடத்தில் இருந்து கட்சி நிர்வாகிகளுக்கு அவசர தகவல் நேற்று பகிரப்பட்டது.
அமித் ஷா வேலூருக்கு வருகை தர இருப்பது மாவட்ட பா.ஜ.க.வினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கார்த்தி காயினி துணைத்தலைவர் நரேந்திரன். மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நடந்தது.
கூட்டத்தில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை விளக்கி வேலூரில் வரும் 8-ந்தேதி பொதுக்கூட்டம் நடக்க இருக்கிறது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க உள்ளார். அதற்கு ஏற்றவாறு களப்பணியில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்