search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலைஞர் நூற்றாண்டு விழா"

    • கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை.
    • படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக நடித்திருக்கிறார்.

    இந்நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடந்து வருகிறது. கண்காட்சியை நடிகர் ஜீவா பார்வையிட்டார். தொடர்ந்து நடிகர் ஜீவா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கலைஞரை பற்றி சினிமாவில் நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். கண்காட்சியை பார்க்கும் போது சினிமாவை தாண்டி முதல்-அமைச்சராக அவர் செய்துள்ளதை கண்டு வியந்து போனேன்.

    கலைஞர் வரலாறு படமாக்கப்பட்டால் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜீவா, "நிச்சயமாக அந்த படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. கலைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு ஆசை. கலைஞர் வரலாற்றை படமாக எடுப்பதை விட வெப் தொடராக எடுத்தால் சரியாக இருக்கும். அதை பா.விஜய் இயக்குவார் என நினைக்கிறேன்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் வரலாற்றை பேசி இருக்கிறார்.
    • விஜயகாந்த்திற்கு மணி மண்டபம் அமைக்க அவரது குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

    திருப்பூர்:

    சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கருணாநிதியால் உயர்ந்தவர்தான் எம்.ஜி.ஆர். என்று நடிகர் ரஜினிகாந்த பேசியது வருத்தம் அளிப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் இன்று இது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும் போது,


    திரை உலகினர் நடத்திய கலைஞருக்கான பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதில் தவறு இல்லை. வரலாற்றை பேசி இருக்கிறார். அது தவறாக தெரியும் என்றால் அவர்களுடைய மனசாட்சியை பொருத்தது. மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்திற்கு மணி மண்டபம் அமைக்க அவரது குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கோரிக்கை முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது என்றார்.

    • கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது.
    • தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பார்க் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளான இன்று கலைஞரின் புகைப்பட கண்காட்சியை திறந்து வைப்பது பெருமைக்குரியது. பேராசிரியர் அன்பழகன் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு செய்த சாதனைகளை தி.மு.க.வினர் மட்டுமல்லாது தமிழக மக்களே தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.


    கலைஞரின் ஆட்சியில் கட்டப்பட்ட ஓமந்தூரார் சட்டமன்றம் அ.தி.மு.க.வின் குறுகிய மனப்பான்மையினாலும் , பொறாமை எண்ணத்தாலும் மருத்துவ மனையாக மாற்றப்பட்டதை மக்கள் உணர்வார்கள். டெல்லியில் இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.

    இதில் மிச்சாங் புயல் - தென் மாவட்ட மழை பாதிப்புகள் குறித்து முக்கிய கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் முன்வைப்பார். அவர்களும் நல்ல எண்ணத்துடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

    பேரிடர் தொடர்பாக கவர்னர் ஆய்வுக்கூட்டம் குறித்து விமர்சிக்க விரும்பவில்லை. பேரிடர் காலம் என்பதால் நல்லதை யார் செய்தாலும் அதனை தி.மு.க., வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.

    • கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.
    • மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி பிரமாண்ட விழா சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வருகிற டிசம்பர் மாதம் 24-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதையொட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.

    நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திர பிரகாஷ், கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.கே.செல்வமணி, கே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிர்வாகிகள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், கலைஞர் ஆற்றிய மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக அடுத்த மாதம் 24-ந்தேதி (ஞாயிறு) அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அகில இந்திய அளவில் தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி, மராத்தி, ஒரியா, குஜராத்தி என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம்.

    கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.

    இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.

    மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், விஜய், அஜித், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்தபட்சம் 35,000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது.

    இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

    நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், டிரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம்.

    இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 58-வது வட்ட தி.மு.க. சார்பில் 10,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
    • விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார்.

    மதுரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. 58-வது வட்டம் சார்பில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞான ஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலை பள்ளி வளாகத்தில் நாளை (7-ந்தேதி) நடைபெறு கிறது.

    விழாவிற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார். 58-வது வார்டு கவுன்சிலரும், மாநில தலைமை செயற்குழு உறுப்பின ருமான ஜெயராம் அனைவரையும் வரவேற்று பேசுகிறார். பகுதி செயலர் மாறன், வட்ட செயலாளர் சீனிர மேஷ், கப்பல்ஜான், வக்கீல் ராகவேந்திரன், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரி யர் ராஜாராம், ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கு கின்றனர். நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பொன்முத்து ராமலிங்கம், வேலுசாமி, குழந்தைவேலு, மூவேந்தி ரன், மேயர் இந்திராணி, தன செல்வம், சின்னம்மாள், அக்ரிகணேசன், சவுந்தர் ராஜன் உள்பட பலர் பங் கேற்கின்றனர். ராஜா, சட்சி தானந்தம், அன்புகுமார், ஆகியோர் நன்றி கூறு கின்றனர்.

    • திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருப்பாலைவனத்தில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

    பொன்னேரி:-

    முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பாலைவனத்தில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஈ.ஏ.பி. சிவாஜி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பொன்னேரி எம் எல் ஏ துரை சந்திரசேகர் , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில், சேர்மன் ரவி, நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், நகர செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஏ.கே. சம்பத்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேசராணி தேசப்பன், இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசன், முன்னாள் நகர இளைஞர் அணி அமைப்பாளர் டாக்டர் மா. தீபன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஷ், அன்பு, வார்டு கவுன்சிலர் பரிதா ஜெகன், திருப்பாலைவனம் விஜய் அன்பு, காண்ட்ராக்டர் ஜோதீஸ்வரன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சம்பத், சுகுமார், ஜெயசீலன் உட்பட திமுக கழக ஒன்றிய நகர நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தி.மு.க. இளைஞரணி சார்பில் விளையாட்டு போட்டி நடந்தது.
    • ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான தடகளப்போட்டியை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு தலைமை தாங்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இந்த விளையாட்டு போட்டிக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விளையாட்டு போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற னர்.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மண்டபம் சம்பத் ராஜா தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கோபிநாத், ரமேஷ் கண்ணா, சம்பத் குமார், தௌபீக் அலி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் உதயசூரியா மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 43 மாணவர்களுக்கு கேடயம்- பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மதுரை

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மதுரை மாநகர் பகுதிகளில் தொடர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு நிகழ்வாக உலக சாதனையை நோக்கி மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 2752 தூய்மை பணியாளர்களை கொண்டு 1 மணி நேரம் 20 நிமிடத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவத்தை வடிவமைத்து உலக சாதனை "டிரம்ப் புத்தகத்தில்" இடம் பெற்றுள்ளது. மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களிடையே கருணாநிதி நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

    போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடத்தப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற 180 மாணவ, மாணவியர்கள் ஐந்து மண்டலங்களிலும் மண்டல அளவில் நடைபெற்ற போட்டி களில் பங்கு பெற்றனர்.

    மதுரை மாநகராட்சி 27 நடுநிலைப் பள்ளிகள், 24 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளை நடத்துவதற்கு ஒருங்கிணைப் பாளர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றது. இந்த பேச்சுப்போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் 89 மாணவ, மாணவிகள், 9 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் 40 மாணவ, மாணவிகள், 11 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு பயிலும் 23 மாணவ, மாணவிகள் என மொத்தம் 152 மாணவ, மாணவிகள் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக் கிடையே நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பெற்ற 43 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி ெபான்வசந்த், கலெக்டர் சங்கீதா, ஆணையாளர் பிரவீன் குமார், பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் ஞான சம்பந்தன், பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி, துணை ஆணையாளர் சரவணன், துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சர்மா, கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாநகராட்சி கல்வி அலுவலர் நாகேந்திரன், கவுன்சிலர் முருகன், ஒருங்கி ணைப்பா ளர் சண்முகதிருக்குமரன் மற்றும் ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாக்கோட்டை, புதுவயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வருகை தந்து இருந்தனர்.
    • கடைசியில் உடுக்கை சத்தத்துடன் கருப்பசாமி பாட்டு பாடப்பட்டது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாக்கோட்டை கிழக்கு ஒன்றியம் மற்றும் புதுவயல் பேரூர் தி.மு.க. சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட வழங்கும் விழா புதுவயல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

    பொதுக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் சாக்கோட்டை, புதுவயல் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் வருகை தந்து இருந்தனர். கூட்டத்தில் உள்ளவர்கள் கலைந்து செல்லாமல் இருப்பதற்காக பாட்டுக் கச்சேரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியின் கடைசியில் உடுக்கை சத்தத்துடன் கருப்பசாமி பாட்டு பாடப்பட்டது. அப்போது நிகழ்ச்சிகள் கலந்து கொண்டிருந்த பெண்கள் பலருக்கு திடீரென்று அருள் வந்தது. இதையடுத்து அவர்கள் தங்கள் நிலைநிறுத்த முடியாமல் எழுந்து சாமி ஆட தொடங்கினர்.

    அருகில் இருந்து நிகழ்ச்சியை ரசித்த சக பெண்கள் அவர்களின் கைகளில் வேப்பிலையை கொடுத்தும், நெற்றியில் விபூதி பூசியும் அவர்களை ஆசுவாசப்படுத்தினர். ஆனால் அந்த பாடல் முடியும் வரை சாமியாடிய பெண்கள் தளரவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் மேடையேறி விடுவார்களோ என்ற அச்சமும் ஏற்பட்டது. அதையும் தாண்டி கழகத்தினர் உள்பட ஒருசிலர் சாமியாடிய பெண்களிடம் குறி கேட்கவும் முற்பட்டனர். கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பெண்கள் அருள் வந்து சாமி ஆட்டம் ஆடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கழக உடன்பிறப்புகள் தெருமுனை கூட்டத்தினை மிகச்சிறப்பாக நடத்திட வேண்டும்.
    • நல்லூர் பகுதி கழக செயலாளர் தலைமையிலும், எனது முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்க ளின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்டம், தெற்கு மாநகரம், நல்லூர் பகுதி கழகம் சார்பில் 8 இடங்களில் தெருமுனை கூட்டம் நல்லூர் பகுதி கழக செயலாளர் மேங்கோ பழனிச்சாமி தலைமையிலும், எனது முன்னிலையிலும் நடைபெறவுள்ளது. இக்கூத்ததில் தலைமைக் கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். அதில் நல்லூர் பகுதி 56-வது வார்டு இராஜீவ்காந்தி நகரில் 8-ந்தேதிகரூர் முரளி, 09-ந்தேதி 48-வது வார்டு நல்லூர் மற்றும் ராக்கியாபாளையம் பிரிவில் பவானி கண்ணன், 10ந்தேதி 47-வது வார்டு முதலிபாலையம் பிரிவு கந்திலி கரிகாலன், 11ந்தேதி அன்று 46-வது வார்டு காசிபாளையம் மற்றும் மணியகாரம்பாளையம் ஈரோடு இளையகோபால், 12ந்தேதி அன்று 49-வது வார்டு வள்ளியம்மை நகர், சுப்பிரமணிய நகர் திருப்பூர் கூத்தரசன் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

    அதுசமயம் மாநகர, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் தெருமுனை கூட்டத்தினை மிகச்சிறப்பாக நடத்திட வேண்டுமெனவும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    ×