search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்பளிப்பு"

    • வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.
    • கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்பதற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த சந்திரகிரி சட்டமன்ற தொகுதியில் செவி ரொட்டி மோகித் ரெட்டி எம்.எல்.ஏ. மீண்டும் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் திவிர பிரசாரம் செய்து வருகிறார். மோகித் ரெட்டி அவரது தாயார் செவி ரெட்டி லட்சுமி ஆகியோர் கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் வாக்கு சேகரிக்க செல்லும் கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருகின்றனர்.

    சந்திரகிரி அடுத்த கல்ரோடு பள்ளிகிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தொகுதி எம்.எல்.ஏ.வான செவிய ரெட்டி பாஸ்கர் ரெட்டி தன்னார்வலர்கள் மூலம் ஒலி பெருக்கிகளை இலவசமாக கொடுக்க கொண்டு வந்தனர்.

    இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் எங்கள் கோவிலுக்கு எதுவும் தேவை இல்லை என திருப்பி அனுப்பினர்.

    இதனை வீடியோ எடுத்து பரவ விட்டு உள்ளனர். ஓட்டுக்காக கிராம மக்களை கவர கோவிலுக்கு அன்பளிப்பு வழங்கப்படுவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து செவி ரெட்டி லட்சுமி கூறுகையில், கிராமப்புறங்களில் ஆன்மீகத்தை வளர்ப்ப தற்காக கோவில்களுக்கு மைக் செட் வழங்கி வருவதாக தெரிவித்தார். 

    • உயர்கல்வி முதல் திருமண விழா வரை ரூ.2 லட்சம் வரை அன்பளிப்பை சுய உதவிக்குழுவினர் கொடுத்து வருகின்றனர்.
    • மற்ற கிராமங்களுக்கு முன்னுதார ணமாக திகழ்வதால் பிற கிராமத்தினர் இதுபற்றி ஆர் வமாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் உத்தரகோசமங்கை அருகே லாந்தை ஊராட்சிக் குட்பட்ட எல்.கருங்குளம் கிராமத்தில் கிராம மக்களின் திருமணம், பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, புதுமனை புகுவிழா உள்ளிட்ட விழாக்களுக்கும், மகளிர் குழு உறுப்பினர்க ளின் பிள்ளைகளின் உயர் கல்விக்கும் கை கொடுக்கும் மகளிர் குழுவினருக்கு பொது மக்களிடையே பாராட்டு குவிந்து வருகிறது.

    கஷ்ட, நஷ்ட காலங்களில் கை கொடுப்பது உறவுகள் மட்டுமல்ல எல்.கருங்குளம் மகளிர் குழுவினர் கிராம மக்களுக்கு உதவி வரு கின்றனர். இதுபற்றி லாந்தை ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் மற் றும் மகளிர் குழுவினர் 'மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-

    பெரும்பாலும் வீட்டில் நடக்கும் விசேஷங்களை முன்னிட்டு குழு உறுப்பினர் களுக்கு ரூ.2 லட்சம் வரை அன்பளிப்பாக தருகி றோம். 26 உறுப்பினர்கள் மகளிர் குழுவில் உள்ளனர். ரூ.2 லட்சத்தை திருமணம் உள் ளிட்ட விசேஷ நிகழ்வுக ளுக்கு அன்பளிப்பாக வழங் குகிறோம். நாங்களே சீர்வ ரிசை பொருள்கள் வாங்கு வது, பந்தியில் பரிமாறுவது என முழு வீச்சில் வேலை களை கூட்டு முயற்சியுடன் செய்வது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற அடிப்படை யில் ஒற்றுமையாக விழாக்க ளில் பங்கேற்கிறோம். ஒரு முறை ரூ.2 லட்சம் பெற்ற வர்களுக்கு மீண்டும் வழங் காமல் சுழற்சி முறை யில் இதனை கடைப்பிடித்து உதவி வருகிறோம். மற்ற கிராமங்களுக்கு முன்னுதார ணமாக திகழ்வதால் பிற கிராமத்தினர் இதுபற்றி ஆர் வமாக கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • திருச்சுழி நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
    • மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி கிளை நூலகத்தில் அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளுக்காக, மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் படித்து வருகின்றனர். போட்டித்தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு உதவிடும் பொருட்டு கிளை நூலகத்தின் நூலகர் மற்றும் வாசகர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக திருச்சுழி கிளை நூலகத்திற்கு அருப்புக்கோட்டை ஜெயன்ட்ஸ் குழுவினர் மாணவர்களின் எதிர்கால நலன்கருதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு அருப்புக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவின் தலைவர் வெள்ளையரெட்டி தலைமை தாங்கினார். திருச்சுழி கிளை நூலகத்தின் வாசகர் ஒருங்கிணைப்பாளர் சுந்தர் அழகேசன் முன்னிலை வகித்தார். நூலகரான பாஸ்கரனிடம் அருப்பக்கோட்டை ஜெயண்ட்ஸ் குழுவினர் ரூபாய் 4,000 மதிப்புள்ள போட்டித்தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினர். ஜெயண்ட்ஸ் குழுவின் இணைய அலுவலர் திருவண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன் நிர்வாக இயக்குநர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார். ஜெயண்ட்ஸ் குழுவின் நிதிகளுக்கான இயக்குனர் காத்தமுத்து, பாக்கியராஜ், நூலக பணியாளர் மஞ்சுளா, போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ,மாணவிகள், வாசகர்கள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    ×