என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "துப்பாக்கிகள்"
- பயங்கரவாத தடுப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
- துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல கும்பலின் தலைவன் பெரும்பாவூர் அனஸ். கொச்சி பியூட்டிபார்லர் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இவர் மீது மேலும் பல வழக்குகள் இருக்கின்றன. இவருடைய கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அனசின் கூட்டாளியான எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள மஞ்சலி கொச்சுகுன்றும்புரம் பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது வீட்டில் 2 கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 4 துப்பாக்கிகள், 2 கத்திகள், துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 25 குண்டுகள் இருந்தன.
அவற்றை சோதனையில் ஈடுபட்ட பயங்கரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் ரியாசின் வீட்டில் இருந்து ரூ8.83 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து ரியாசை போலீசார் கைது செய்தனர். ரியாசின் வீட்டில் கடந்த 8 ஆண்களுக்கு முன்பு இதேபோல் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.
இந்நிலையில் தற்போதும் அவர் துப்பாக்கிகளுடன் சிக்கியிருக்கிறார். அவர் தனது வீட்டில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கிவைத்திருந்தது தொடர்பாக அவரிடம் பயங்கரவாத தடுப்பு படையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று அனசின் மற்றொரு கூட்டாளியான அல்தாப் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து ரிவால்வர் கேஸ், கைவிலங்கு மற்றும் சில பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அனசின் நெருங்கிய கூட்டாளியான பெரும்பாவூரை சேர்ந்த ஷாஜி பாப்பன் என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் அனசுடன் தொடர்புடையவர்களாக கருதப்படும் கோவை மாவட்டம் ஆனைமலையில் ஒருவரின் வீடு, மேட்டுப்பாளையத்தில் ஒருவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் பயங்கரவாத தடுப்பு படையினர் அந்த மாவட்ட போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி உள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு படையினரின் அதிரடி சோதனையில துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெப்ரி பெர்குசன் துப்பாக்கியால் மனைவியை சரமாரியாக சுட்டார்.
- போலீசார் நீதிபதி ஜெப்ரி பெர்குசனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
கலிபோர்னியா:
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் அனஷிம்ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் ஜெப்ரி பெர்குசன் ( வயது 72).நீதிபதியாக உள்ளார்.இவரது மனைவி ஷெர்லி பெர்குசன். இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெப்ரி பெர்குசன் துப்பாக்கியால் மனைவியை சரமாரியாக சுட்டார். இதில் குண்டு பாய்ந்த ஷெர்லி இறந்தார்.இது குறித்து அவரது மகன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நீதிபதி ஜெப்ரி பெர்குசனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அவர் ஏன் மனைவியை சுட்டக்கொன்றார் என தெரியவில்லை.
போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது அங்கு 47 துப்பாக்கிகள் இருந்தது தெரியவந்தது. அந்த துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நீதிபதியிடம் இத்தனை துப்பாக்கிகள் எப்படி வந்தது என்பது தெரியவில்லை.
இந்த வழக்கில் கைதான நீதிபதி ஜெப்ரி பெர்கு சனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
- போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர்.
கடலூர்:
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் கடல்வழியாக மும்பையில் ஊடுருவி நாசவேலையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களுக்குள் தீவிரவாதிகள் கடல்வழியாக ஊடுருவுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் போலீசார் சாகர் கவாச் என்ற பேரில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆபரேஷன் சாகர் கவாச் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது.
கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் போலீசார் கடலோர பகுதிகளில் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கடலூர் துறைமுகத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் கடல் பகுதிக்கு விசை படகில் மத்திய, மாநில அதிரடி படையை சேர்ந்த கமாண்டோ போலீசார் 7 பேர் மாறுவேடத்தில் தீவிரவாதிகள் போல் வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் அவர்கள், கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் வெடிகுண்டு வைப்பதற்காக வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், அவர்களை துறைமுகம் பகுதிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்த போலி வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்