search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலையேற்றம்"

    மின்சார நிலைகட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வு, சூவசூலிப்பது ஆகியவை அனைத்து தொழில்துறையினரையும் பாதிப்பு.

    திருப்பூர்

    தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் நிட்மா இணை செயலாளர் கோபி, டீமா தலைவர் முத்துரத்தினம், டெக்பா தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று கலந்தாய்வு செய்தனர்.

    மின்சார நிலைகட்டணம் உயர்வு, பீக் ஹவர் கட்டண உயர்வு, சூரியஒளி சக்தி மின் உற்பத்திக்கு கட்டணம் வசூலிப்பது ஆகியவை அனைத்து தொழில்துறையினரையும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது. மின்கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி, தொழில்துறையினரின் நிலையை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    நாளை 9-ந் தேதி காலை தொழில்துறையின் நிலை குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்க வரும் தொழில்துறையினர் கருப்பு பேட்ஜ் அல்லது கருப்பு சட்டை அணிந்து வர வேண்டும். அவரவர் நிறுவனங்களில் கருப்புக்கொடி ஏற்றி தொழில் பாதிப்பை அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    ஒவ்வொரு சங்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 உறுப்பினர்கள் வர வேண்டும். ஒவ்வொரு அமைப்பினரும் மின்கட்டண பாதிப்பு குறித்து மனுவில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். அனைத்து அமைப்பினரும் ஒன்று சேர்ந்து திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தின் முன் அனைவரும் வர வேண்டும். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்து முதல்-அமைச்சருக்கு அனுப்ப இருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

    • தேங்காய் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
    • கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

    மதுரை

    வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. சில மாதமாக மட்டை தேங்காய் சந்தை விலை குறைவாக இருந்தது. தற்போது மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.10.65-க்கும் குறைந்தபட்சமாக ரூ.6.10-க்கும் விலைபோனது. கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.74.50-க்கும் குறைந்த பட்சமாக ரூ.56.30- க்கும் விலைபோனது.

    மறைமுக ஏலத்தில் 20 வியாபாரிகள் போட்டி முறையில் பங்கேற்றனர். விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைத்தது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    மேலும் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் கொப்பரை எடுத்து வந்தததை மதுரை விற்ப னைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி ஆய்வு செய்தார். மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டம் செப்டம்பர் வரை மட்டுமே உள்ளதால், தென்னை விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து தங்களின் தேங்காய்களை கொப்ப ரையாக மதிப்பு கூட்டி முதல் தர கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

    • தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது.
    • சமீப காலங்களில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், குறுகிய காலத்தில் அதிக வருமானம் தரும் காய்கறிகள் சாகுபடி தொழில்நுட்பம் குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த சில ஆண்டுகளாக சரியான அளவீட்டில் மழை பெய்து வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கரும்பு, நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் ஒரே பயிரை மட்டும் பயிரிடாமல் பல்வேறு வகையான மாற்றுப் பயிர்களை மாற்றி பயிரிட்டால் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும். தற்போது உள்ள வாழ்வியல் சூழ்நிலையில், மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்காக சிறுதானியங்களை, அதிக அளவில் பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும்.

    சமீப காலங்களில் தக்காளி விலையேற்றத்தை அறிந்திருப்பீர்கள், எனவே காய்கறிகளும் பெருமளவில் பயிரிட வேண்டும். இதற்கான ஆலோசனைகளும், சந்தேகங்களையும் வேளாண் விஞ்ஞானிகளிடம் தெரிந்து கொண்டு செயல்படவேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக வேளாண் தொழில் நுட்பங்கள் அடங்கிய கையேட்டினை வெளியிட்டார். மேலும் வேளாண் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, துணை இயக்குநர் தோட்ட கலை துறை சசிகலா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், வாழ வச்சனூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய கவின்னோ, யசோதா, கார்த்திகேயன், வேளாண்மை துணை இயக்குநர் வேளாண் வணிகம் (பொ) சத்திமூர்த்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர் முரளி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • காலநிலை மாறுபாட்டால் கடும் வெப்பம் நிலவியது.
    • குளிர்ச்சியான காற்று வீசுவதால் தக்காளி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து பூக்கத் துவங்கியுள்ளது.

    திருப்பூர்:

    கடந்த மாசி பட்டத்தில் பல விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்திருந்தனர். காலநிலை மாறுபாட்டால் கடும் வெப்பம் நிலவியது. வெப்பத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் தக்காளி செடிகள் கருகின. விளைச்சல் பாதிப்பால் தக்காளி விளைச்சல் மிகவும் குறைந்து விட்டது. தட்டுப்பாடு காரணமாக கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. உச்ச விலைக்கு விற்பனையான போதிலும் போதிய விளைச்சல் கிடைக்காமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    கடந்த வைகாசி பட்டத்தில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். குளிர்ச்சியான காற்று வீசுவதால் தக்காளி செடிகள் நன்கு வளர்ச்சி அடைந்து பூக்கத் துவங்கியுள்ளது. தக்காளி அதிக விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் தக்காளி செடிகளை கண்ணும் கருத்துமாக பராமரித்து வருகின்றனர்.

    அடுத்த மாதத்தில் புதிய தக்காளி அறுவடை துவங்கிவிடும். எனவே சில வாரங்களில் விலை குறைய துவங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    • தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
    • சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் பகுதியில் தென்னை, வாழை, கரும்பு, நெல், மக்காச்சோளம் மற்றும் காய்கறிப் பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக தக்காளி, வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தநிலையில், போதிய விலை கிடைக்காததால் சமீப காலங்களாக அவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது. இந்தநிலையில் தக்காளி, வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளதால் மீண்டும் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக சொட்டுநீர்ப் பாசனத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி என்பது விவசாயிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சின்ன வெங்காயம் சாகுபடி என்பது அதிக செலவு பிடிக்கும் சாகுபடியாக உள்ளது. சின்ன வெங்காய விதையின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதுதவிர உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட அனைத்துவிதமான இடுபொருட்களும் விலை உயர்ந்துள்ளது.அந்தவகையில் ஒரு ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்வதற்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் செலவு பிடிக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை மற்றும் கூலி ஆட்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொண்டுள்ளோம். இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதுடன் பாசன நீரின் தேவை குறைகிறது. மேலும் நீரில் கரையும் உரங்களை சொட்டுநீருடன் கலந்து வழங்கும் போது, குறைந்த அளவு பயன்பாட்டில் கூடுதல் மகசூல் பெற முடிகிறது.சமீப காலங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும்.

    ஆனால் விவசாய விளைபொருட்கள் விலை உயர்வு என்பது மட்டும் மிகப் பெரிய பேசு பொருளாக மாறுவது வேதனை தருகிறது.தக்காளி விலை உயர்ந்ததால் அரசு ரேஷன் கடை மூலம் குறைந்த விலையில் தக்காளி விற்கிறது.

    அதுபோல தக்காளி, வெங்காயம் போன்ற விளைபொருட்கள் விலை குறையும் போது ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.இதன்மூலம் விவசாயத்தை விட்டு பலரும் வெளியேறும் நிலையை மாற்ற உதவும்.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    ×