என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரயான் 3"

    • இஸ்ரோ குழுவிற்கும், சாதனையைச் செய்ய அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    • தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று வெற்றிகரமாக செலுத்தியது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது. சந்திரயான் 3 வெற்றிகரமாக ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்நிலையில், சந்திரயான்- 3 விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் சந்திரயான்-3 ஐ இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ குழுவிற்கும், சாதனையைச் செய்ய அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்திற்கான தேசத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை இது நிரூபிக்கிறது. சந்திர பயணத்தின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.
    • சந்திரயான்- 3 வரும் ஆகஸ்டு 23, மாலை 5.47க்கு நிலவில் தரையிறக்க திட்டம்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம்.3- எம்4 (ஜி.எஸ்.எல்.வி.மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.

    இந்நிலையில், அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான் விண்கலம் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

    ரூ.600 கோடி மதிப்பீட்டில் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், "சந்திரயான்- 3 ஆகஸ்ட் 1ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக இருந்தால், சந்திரயான்- 3 வரும் ஆகஸ்டு 23ம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் மேற்பரப்பில் தொழில்நுட்ப ரீதியாக சவாலான மென்மையான தரையிறக்க முயற்சிக்கும்" என்று கூறினார்.

    • இஸ்ரோவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
    • ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தில் இஸ்ரோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலத்தை இன்று ஏவியது. இந்த ராக்கெட் திட்டமிட்டபடி பயணித்து, சந்திரயான்-3 விண்கலத்தை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியது.

    இதைதொடர்ந்து, இஸ்ரோவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இஸ்ரோவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது:-

    இன்று, நம்மில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் வானத்தைப் பெருமிதத்துடன் பார்க்கிறோம்.

    சந்திரயான்- 3 என்பது 1962ல் இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து விஞ்ஞான சமூகத்தின் பல சதாப்தங்களாக உழைப்புக்கு கிடைத்த பலனாகும். அதைத் தொடர்ந்து 1969ல் இஸ்ரோ உருவாக்கப்பட்டது.

    சந்திரயானின் வெற்றி, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடாக நம்மை மாற்றும். உண்மையிலேயே நம்பமுடியாத சாதனை!

    இஸ்ரோவில் உள்ள ஒட்டுமொத்த குழுவிற்கும் வாழ்த்துகள்.

    • சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடையும்.
    • இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, நிலவை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இதில் கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் திட்டம் வெற்றி பெற்றது. 2019-ம் ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் வெற்றி பெறவில்லை. லேண்டர் நிலவில் வேகமாக தரையிறங்கியதால் தொடர்புகளை இழந்தது.

    இதற்கிடையே நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ததற்காக சந்திரயான்-3 விண்கலம், நேற்று விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண் கலம் நேற்று மதியம் 2.35 மணிக்கு ஏவப்பட்டது.

    தீப்பிழம்பை கக்கியபடி சென்ற ராக்கெட், நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் தூரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

    பூமியின் சுற்று வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலத்தை இஸ்ரோவின் தரை கட்டுப்பாட்டு நிலையம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது. சந்திரயான்-3 விண்கலம், நிலவின் சுற்று வட்டப் பாதையை நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. அதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    பூமியின் சுற்று வட்ட பாதையை சுற்றி வரும் சந்திரயான்-3 விண்கலம் வருகிற ஆகஸ்டு 5-ந்தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடையும்.

    புவியின் ஈர்ப்பு விசையும், நிலவின் ஈர்ப்பு விசையும் சமமாக இருக்கும் பகுதியில் புவி வட்ட பாதையில் இருந்து விலகி நிலவின் வட்ட பாதையில் சந்திரயான்-3 விண்கலம் புதிய பயணத்தை தொடங்கும். அப்போது நிலவின் ஈர்ப்பு விசையின் துணையுடன் அந்த சுற்று வட்டப் பாதையில் விண்கலம் பயணிக்கும்.

    அதன்பின் நிலவின் சுற்றுப் பாதையை சுற்றி வந்து ஆகஸ்டு 23-ந்தேதி நிலவில் விண்கலம் தரையிறங்கும்.

    இஸ்ரோ விஞ்ஞானிகள் வரும் நாட்களில் நிலவுக்கு செல்லும் பாதையில் சந்திரயான்-3 விண்கலத்தை கொண்டு வர சுற்றுப்பாதையை உயர்த்தும் பணிகளை மேற்கொள்வார்கள்.

    நிலவின் சுற்றுப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டதும், ஆகஸ்டு மாத இறுதிக்குள் தரையிறங்கும் வரிசை பணி தொடங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    • லேண்டர் கலனில் அது துல்லியமான நவீன கேமரா கருவிகள் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
    • கடந்த முறை லேண்டர் கலன் தரையிறங்க 5 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    நிலவுக்கு ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் புதுமைகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கடந்த முறை நிலவில் வேகமாக தரையிறங்கியதால் லேண்டர் கலன் தொடர்பை இழந்தது. இந்த முறை லேண்டர் கலன்களின் கால்களை மிக திடமாக வடிவமைத்ததுடன் அதனை பல்வேறு பரிசோதனைகள் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

    லேண்டர் கலன் தரையிறங்கும்போது சம தளத்தில் இறங்க ஏதுவாக அதன் கால்களில் டெலஸ்கோப் கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இம்முறை லேண்டர் கலனில் அது துல்லியமான நவீன கேமரா கருவிகள் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

    அதன் மூலம் எடுக்கப்படும் படங்கள் உடனுக்குடன் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு கிடைக்கும் வகையில் புதிய கட்டமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. லேண்டர் கலன் தரையிறங்கும் வேகத்தை கணக்கிடுவதற்கான லேசர் டாப்ளர் வெலாசிட்டி சென்சார் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திட்டமிட்டதைவிட வேகமாக தரையில் இறங்குகிறது என்பதை அறியலாம். கடந்த முறை லேண்டர் கலன் தரையிறங்க 5 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு என்ஜின் புழுதிகளை தணிப்பதற்காக கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆனால் சில எதிர் விளைவுகள் ஏற்படலாம் என கருதி தற்போது அந்த என்ஜின் நீக்கப்பட்டு நான்கு என்ஜின்களுடனேயே லேண்டர் செல்கிறது. லேண்டர் கலனில் உள்ள 7 வகை சென்சார்கள், கேமரா நுட்பங்கள் மூலம் மென்மையான தரையிறக்கத்துக்காக வழி காட்டுதல்கள் தரப்பட்டுள்ள என்ஜின்களின் வேகக் கட்டுப்பாட்டு விதத்திலும் சில நுட்பமான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இறுதி நிலை தரையிறக்க வேகம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

    • சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் பேசினார்.
    • மருத்துவர் இசிஜி பார்ப்பது போல, இந்த வரைபடங்களைப் பார்க்கிறோம்.

    தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் ஐஐடியின் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துக் கொண்டார்.

    அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ராக்கெட்டுகளை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன் என்று கூறினார்.

    சந்திரயான் 3 விண்கலம் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், இஸ்ரோ தலைவர் பேசினார்.

    இதுகுறித்து மேலும் அவர் பேசியதாவது:-

    முதல் கட்டமாக சந்திரயான் -3ன் ஏவப்பட்டதை மிகவும் ரசித்தேன். அதே நேரத்தில் அவர் முழு தரவுகளையும் ஆராய்ந்து ராக்கெட் எவ்வளவு அழகாக இருந்தது.

    பொறியாளர் மற்றும் விஞ்ஞானி என்ற முறையில் எனக்கு ராக்கெட்டுகள் மீது பிரியம் உண்டு. ராக்கெட்டின் பிறப்பு, வளர்ச்சி, பிரச்சனைகள் ஆகியவற்றைப் பார்த்து, ராக்கெட்டை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன். வளர்ச்சி, அதன் உணர்ச்சிகள் மற்றும் அதன் இயக்கவியல் மற்றும் அதன் வாழ்க்கைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்ப்பது ஆகும்.

    கடந்த சந்திரயான் ராக்கெட்டில், கிட்டத்தட்ட 2,000 அளவீடுகள் இருந்தன. இறுதியாக அவை வரைபடங்கள் மற்றும் வளைவுகளாக நம்மிடம் வந்தன. ஒரு மருத்துவர் இசிஜி பார்ப்பது போல, இந்த வரைபடங்களைப் பார்க்கிறோம்.

    அந்த வளைவுகளுடன் நாங்கள் ஒரு இணைப்பை உருவாக்கியுள்ளோம். வரைபடங்கள், மற்றும் ஏற்ற தாழ்வுகளைப் பார்ப்பதன் மூலம் அதன் வேகம் என்ன... எப்படிப் போகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு இயந்திரத்தைப் புரிந்துகொள்வதற்கும் அதைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட காட்சியை பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர்.
    • மேகங்களை கிழித்துக்கொண்டு ராக்கெட் சீறிப்பாய்வது வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

    நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் செலுத்தி உள்ளது. புவியின் சுற்றுப்பாதையில் நுழைந்து சுற்றி வரும் விண்கலத்தின் செயல்பாடு இயல்பாக உள்ளது. இந்த நீள்பட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும். அந்த வகையில் சுற்றுப்பாதையை உயர்த்தும் முதல் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. விண்கலம் இப்போது பூமிக்கு நெருக்கமாக 173 கிமீ, அதிகபட்ச தொலைவாக 41,762 கி.மீ. என்ற சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது.

    கடந்த 14ம் தேதி சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்ட காட்சியை பலரும் தங்கள் செல்போன்களில் படம் பிடித்தனர். தொலைக்காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பின. வீடியோ எடுத்து வெளியிட்டன. அன்றைய தினம் முழுவதும் இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் வெளியாகின.

    அவ்வகையில், சந்திராயன்-3 விண்கலத்தை சுமந்துகொண்டு ராக்கெட் (எல்விஎம்-3) சீறிப்பாய்ந்து சென்ற காட்சி விமானத்தில் இருந்து வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து டாக்கா நோக்கி சென்ற விமானத்தின் ஜன்னல் வழியாக ஒரு பயணி அந்த வீடியோவை பதிவு செய்துள்ளார். மேகங்களை கிழித்துக்கொண்டு ராக்கெட் சீறிப்பாய்வது அதில் தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    இந்த வீடியோவை இஸ்ரோ மெட்டீரியல்ஸ் இயக்குநர் (ஓய்வு) மற்றும் ராக்கெட் உற்பத்தி நிபுணர் டாக்டர் பிவி வெங்கடகிருஷ்ணன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளையும் ஏராளமான லைக்குகளையும் பெற்றுள்ளது. வீடியோவை எடுத்த பயணியின் புகைப்படத் திறமையை சிலர் வியந்து பாராட்டி உள்ளனர்.

    • சந்திரயான்-3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பூடான் பிரதமர் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
    • சந்திரயானின் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் வழிகாட்டுவதாக உள்ளது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த விண்கலத்துக்காக பல்வேறு உலக நாடுகள் இந்தியாவைப் பாராட்டி வருகின்றன.

    இதற்கிடையே, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சந்திரயான்-3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்காக பிரதமர் மோடி மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திட்டம் இந்தியாவுக்கும், மனித குலத்துக்கும் சிறப்பாக பயனளிக்கட்டும் என பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், பூடான் பிரதமருக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதில் டுவீட்டில், உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. உண்மையில், சந்திரயான் வெற்றி ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் நல்வழி காட்டுவதாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • விண்கலம் இப்போது 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
    • ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும்.

    சென்னை:

    நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படும்.

    இதன் முதல் கட்டமாக 15ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. அப்போது, விண்கலம் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 173 கி.மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 41,762 கி.மீட்டர் தொலைம் கொண்ட சுற்றுப்பாதையில் சீரான வேகத்தில் புவியை வலம் வந்தது.

    இந்நிலையில், இரண்டாவது முறையாக இன்று விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டது. இரண்டாவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், விண்கலம் இப்போது 41603 கிமீ x 226 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பாதையானது நாளை மேலும் உயர்த்தப்படுகிறது. நாளை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின்  விண்கலம் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பிறகு  நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும், அதன் சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு வட்ட சுற்றுப்பாதையை அடையும். குறிப்பட்ட வட்டப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    • சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
    • சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அபாயகரமான பொருளில் இருந்து விலகி இருக்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தினர்.

    இதுகுறித்து ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம்.

    மற்ற நாடுகளுடன் நாங்கள் தொடர்பு கொள்கிறோம். அந்த பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.

    இதற்கிடையே ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ராக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

    மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்தனர்.

    இந்த மர்ம பொருள் 2 மீட்டர் உயரமும், 2 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. ராக்கெட் பாகம் போன்று உள்ளது.

    • விண்கலம் இப்போது 51400 கிமீ x 228 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
    • ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும்.

    சென்னை:

    நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது.

    ஏற்கனவே இரண்டு கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக இன்று சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது. மூன்றாவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், விண்கலம் இப்போது 51400 கிமீ x 228 கிமீ சுற்றுப்பாதையில் உள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த சுற்றுப்பாதையானது அடுத்து 20ம் தேதி மேலும் உயர்த்தப்படுகிறது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பிறகு சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும், சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஒரு வட்ட சுற்றுப்பாதையை அடையும். குறிப்பட்ட வட்டப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    • 4-வது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
    • ஐந்து முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும்.

    சென்னை:

    நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

    அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாக கொண்டு செல்லப்படுகிறது.

    ஏற்கனவே மூன்று கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது.

    இந்நிலையில், நான்காவது முறையாக இன்று சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது.

    நான்காவது சுற்றுப்பாதையை உயர்த்தும் செயல்முறை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

    இந்த சுற்றுப்பாதையானது அடுத்து 25-ம் தேதி மேலும் உயர்த்தப்படுகிறது. அன்றைய தினம் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

    இவ்வாறு 5 முறை சுற்றுப்பாதை உயர்த்தப்பட்ட பின் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும். அதன்பிறகு சந்திரயான்-3 நிலவை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும். நிலவின் ஈர்ப்பு விசைக்குள் சென்றதும், சுற்றுப்பாதை படிப்படியாக குறைக்கப்படும். இறுதியாக விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வட்ட சுற்றுப்பாதையை அடையும். குறிப்பட்ட வட்டப்பாதையில் இருந்து நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று சாப்ட் லேண்டிங் முறையில் விண்கலம் தரையிறங்கும்.

    ×