என் மலர்
நீங்கள் தேடியது "பாடகர்"
- பழனியம்மாள் 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
- மைக் மற்றும் ஸ்பீக்கருடன் அமர்ந்து பாட்டு பாடி போலீசாரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாடல் பாடினார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல். இவரது மனைவி பழனியம்மாள்.
பழனியம்மாள் 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை பல இடங்களில் தேடி கிடைக்காத நிலையில் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பழனிவேல் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் 5 ஆண்டுகள் ஆகியும் அவரது மனைவியை கண்டுபிடித்து தரவில்லை என சோகத்தில் ஆழ்ந்த பழனிவேல் விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு மைக் மற்றும் ஸ்பீக்கருடன் அமர்ந்து பாட்டு பாடி போலீசாரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாடல் பாடினார்.
இதுபற்றி பழனிவேலிடம் கேட்டபோது, தான் ஒரு மைக் ஒரு ஸ்பீக்கர் வைத்துக்கொண்டு பாட்டு பாடும் தொழில் செய்வதாகவும், மாதம் ரூ.40ஆயிரம் சம்பாதிப்பதாகவும் தனது மனைவி 5 ஆண்டுகளாக காணவில்லை எனவும், மனைவியை கண்டுபிடித்து கொடுக்குமாறு விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தபோது அங்கிருந்த போலீசார் ஒருவர் அதிகாரிகள் யாரும் இல்லை பிறகு வாருங்கள் என கூறி என்னை அனுப்பிவிட்டனர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு தனது மனைவியை நினைத்து உருகி பாடுவதாகவும் கூறினார்.
இளங்காற்று வீசுதே, என் ஜீவன் பாடுது, ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு உள்ளிட்ட சோக பாடல்களை போலீஸ் நிலையம் முன்பு அவர் பாடியதைக் கண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
- கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடந்தது.
- ஜெய் இசட்டுக்கு இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது.
இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்று கிராமி விருது. அந்த வகையில் 66-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நேற்று நடந்தது. விழாவில் தமிழக பாடகர் சங்கர் மகாதேவன் குழுவினர் உள்பட பலருக்கு கிராமி விருது வழங்கப் பட்டது.

இதுபோன்று அமெரிக்கா ராப் இசைக் கலைஞரான ஜெய் இசட்டுக்கு இசைத் துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில் முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இம்பாக்ட் விருது வழங்கப்பட்டது. விருதை மகள் புளு ஜவியை மேடையில் அழைத்து சென்று பெற்றுக் கொண்டார்.

விருதை பெற்ற மகிழ்ச்சியில் ஜெய் இசட் மேடையில் இருந்து கீழே வந்து தனது சக நண்பர்களுடன் விருதை கொண்டாடும் வகையில் தான் பெற்றுக் கொண்ட விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தினார். அவர் விருது கோப்பையில் மது அருந்தும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
- வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை அபு சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, ஜூலை 7-ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருந்தார்.
- துபாயில் ஜூலை 6-ந்தேதி பாக்ஸிங் பைட் போட்டி நடக்கிறது.
தஜிகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அபு ரோசிக். 3 அடி உயரம் கொண்ட இவர் தடைகளை தகர்த்து தனது திறமையின் மூலம் பாடகராகவும் திகழ்கிறார். சமூக வலைதளங்களிலும் பிரபலமான இவர் இந்தியில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இவருக்கும் தஜிகிஸ்தான் பாடகி அமீராவுக்கும் திருமணம் முடிவாகி கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது வருங்கால மனைவிக்கு மோதிரம் அணிவித்த புகைப்படத்தை அபு சமூக வலைதளங்களில் வெளியிட்டதோடு, ஜூலை 7-ந்தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் திருமணத்தை தள்ளிவைத்திருப்பதாக கூறி உள்ளார். துபாயில் ஜூலை 6-ந்தேதி பாக்ஸிங் பைட் போட்டி நடக்கிறது. இதில் பங்கேற்க இருப்பதால் தனது திருமணத்தை தள்ளி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
- பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து கான்சர்ட் நடந்துள்ளது.
- 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர்
அமரிக்கவைச் சேர்த்த பிரபல பாடகியான டெய்லர் ஸ்விப்ட் இசைத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஐகானாக உள்ளவர். எல்லைகள் தாண்டி உலாமெங்கிலும் இவரின் பாடல்களுக்கு பலர் பைத்தியாக உள்ளனர். தனது பாடலக்ளை தானே இயற்றி கான்சர்ட்களில் பாடிவரும் டெய்லர் ஸ்விப்ட் நின்றால் செய்தி உட்கார்ந்தால் செய்தி என ஆகிவிட்ட நிலையில் பிரிட்டன் தலைநகர் வெம்ப்லே அரங்கத்தில் வைத்து நடந்த இவரின் கான்சர்ட்டில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

அந்த கான்சர்ட்டில் தனது சிறந்த பாடல்களில் ஒன்றான 'All Too Well' பாடலை டெய்லர் ஸ்விப்ட் பாட அதை அரங்கத்தில் கூடியிருந்த ரசிகர்கள் கோரஸ் செய்து பாடியுள்ளனர். இந்த பாடல் சுமார் 10 நிமிட நீளம் உடையது ஆகும். 'All Too Well' பாடலை விடமால் தம் கட்டி சிவப்பு நிற ஆடையில் ஜொலித்த டெய்லர் ஸ்விப்ட் பாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அவரது வாய்க்குள் எங்கிருந்தோ வந்த ஒரு பூச்சி நுழைந்ததால் பாடலைத் தொடர அவர் சிரமப்பட்டார்.
இடையில் பாடுவதை நிறுத்திவிட்டு இருமத் தொடங்கிய டெய்லர் ஸ்விப்ட், நான் ஒரு பூச்சியை விழுங்கிவிட்டேன், நீங்கள் தொடர்ந்து பாடுங்கள் என்று ரகிகர்களிடம் கூறினார். பின்னர் நிலைமையை சமாளித்துக்கொண்டு மீண்டும் அவர் பாடத்தொடங்கினார்.இந்த சமபவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கான்சர்ட்டில் ஹாலிவுட் நடிகர்கள் டாம் குரூஸ், மிலா குனிஸ், ஆஸ்டோன் குட்சர், டெய்லர் ஷிப்டட்டின் காதலன் கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டது குறிபிடித்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது.
- ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.
மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கையும் இந்திய சினிமாவின் மூத்த பாடகியான 90 வயதாகும் ஆஷா போஸ்லே தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல கிளாசிக் படலக்ளை பாடி ரசிகர்களை கவர்ந்தவர் ஆவார். ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற செண்பகமே செண்பகமே பாடல் மூலம் ஆசா போஸ்லேவின் குரல் தமிழகமெங்கும் எதிரொலித்தது. சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற கொஞ்சநேரம் கொஞ்சநேரம் பாடல், ஹே ராம் படத்தில் இடம்பெற்ற நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி என ஆஷா போஸ்லேவின் கிரக்கும் குரலுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் தற்போது ஆஷா போஸ்லேவின் சுயசரிதை 'ஸ்வரஸ்வாமினி ஆஷா' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நேற்று [ஜூன் 28] வெள்ளிக்கிழமை மும்பையில் வைத்து நடந்த இந்த புத்தக வெளியீட்டு விழாவில், ஜாக்கி செராப் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள், பின்னணி பாடகர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட பிரபல பின்னணி பாடகர் சோனு நிகாம், விழா மேடையில் வைத்து ஆஷா போஸ்லேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை முத்தமிட்டு தண்ணீரால் கழுவிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீரால் ஆஷாவின் கால்களைக் கழுவித் துடைத்த சோனு நிகாம் பின் எழுந்து நின்று ஆஷாவுக்கு தலைவணங்கினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சோனு நிகாம் தமிழில் அஜித்தின் கிரீடம் படத்தில் இடம்பெற்ற விழியினில் உன் விழியினில், ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தில் இடம்பெற்ற ஆருயிரே, கார்த்தியின் சகுனி படத்தில் இடம்பெற்ற மனசெல்லாம் மழையே உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடுயுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்க்கு அவர் கடந்த சனிக்கிழமை நடந்த கன்சர்ட்டை அர்ப்பணித்திருந்தார்.
- நீங்கள் மதுபானங்களை தடை செய்யும் வரை நான் அதுகுறித்து படுவதை நிறுத்தமாட்டேன்
நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படாத வரை இந்தியாவில் இனி நேரலை இசைக் கச்சேரிகளை நடத்த மாட்டேன் என்று பிரபல பஞ்சாப் பாடகர் தில்ஜித் தோசன்ஜ் அதிரடியாக அறிவித்துள்ளார்.
ரசிகர்களை கலங்கடிக்கும் இந்த அறிவிப்பை அவர் ஏன் வெளியிட்டார் என்றால் கடந்த சனிக்கிழமை சண்டிகரில் அவர் நடத்திய லைவ் கன்சர்ட்டில் போதுமான வசதிகள் இல்லாமல் திண்டாடியுள்ளார். கான்செர்ட்டின்போது அதிகாரிகளிடம் அவர் காட்டமாக நடந்துகொள்ளும் வீடியோவும் வெளியானது.
எங்களை (கலைஞர்களை) தொந்தரவு செய்வதற்குப் பதிலாக, உங்கள் கச்சேரி உள்கட்டமைப்பை மேம்படுத்துங்கள் அல்லது இந்தியாவில் நான் நிகழ்ச்சி நடத்த மாட்டேன். இதை நிர்வாகத்திடம் கூற விரும்புகிறேன். நேரலை நிகழ்ச்சிகளுக்கு இங்கு சரியான வசதிகள் இல்லை.
இது பெரிய வருவாய் ஆதாரமாகும். நிறைய பேர் இந்த நிகழ்வுகளில் வேலை செய்கிறார்கள் மற்றும் அதன் காரணமாக வேலைவாய்ப்பு பெறுகிறார்கள் என்று சமூக வலைத்தளம் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை சண்டிகரில் நடந்த தில்ஜித் இசைக் கச்சேரி அவரது "தில்-லுமினாட்டி இந்தியா டூர் 2024" இன் ஒரு பகுதியாகும். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ்க்கு அவர் கடந்த சனிக்கிழமை நடந்த கன்சர்ட்டை அர்ப்பணித்திருந்தார்.
முன்னதாக ஐதராபாத்தில் இசைக் கச்சேரி நடத்தியபோது மதுபானங்களை குறித்து பாடக் கூடாது என்று நிர்வாகம் தெரிவித்தது. நீங்கள் மதுபானங்களை தடை செய்யும் வரை நான் அதுகுறித்து படுவதை நிறுத்தமாட்டேன் என்று தில்ஜித் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது.
- இதில் பாடகர் கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி பியான்கா சென்சோரி உடன் கலந்து கொண்டார்.
இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. இதில் பாடகர் கன்யே வெஸ்ட் மற்றும் அவரது மனைவி பியான்கா சென்சோரி உடன் கலந்து கொண்டார்.
அப்போது மிகவும் மெல்லிதாக உடல் பாகங்கள் முழுவதுமாக வெளியே தெரிய கூடிய உடையை பியான்கா சென்சோரி அணிந்து வந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பியான்கா சென்சோரி கிட்டத்தட்ட நிர்வாணமாக காட்சியளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிட்டத்தட்ட நிர்வாணமாக வந்ததற்காக பியான்கா சென்சோரி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
- சென்னையில் உள்ள MCC கல்லூரியில் தான் சந்திரிகா டன்டன் படித்துள்ளார்.
- தற்போது சந்திரிகா டன்டன் அமெரிக்காவில் தொழிலதிபராகவும் உள்ளார்
இசை உலகில் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் கிராமி விருதுகள் 1959-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது உலகம் முழுவதும் சிறந்த பாடல், ஆல்பம், இசையமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 67-வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன்டன் (70) கிராமி விருதை வென்றார்
'த்ருவேனி' என்ற பாடலுக்காக Best New Age Album என்ற பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள MCC கல்லூரியில் பயின்ற இவர், தற்போது அமெரிக்காவில் தொழிலதிபராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீட்டில் போலீஸ் சோதனையின்போது தண்ணீருக்காக சமையலறைக்கு சென்றார்
- அதிபர் புதினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல.
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகளுடன் தங்களின் அண்டை நாடான உக்ரைன் சேருவதை எதிர்த்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது.
3 ஆண்டுகளாக போர் நடந்து வரும் நிலையில் இரண்டு பக்கங்களிலும் உயிர்சேதங்களும், மக்கள் இடப்பெயர்வும் நிகழ்ந்துள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும், ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் உதவி செய்து வருகின்றன.
இந்நிலையில் உக்ரைன் மீது தொடுத்த போரை கண்டிக்கும் விதமாக அதிபர் புதினை விமர்சித்த ரஷிய பாடகர் தனது வீட்டின் ஜன்னல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
ரஷிய இசைக்கலைஞரும் வானொலி தொகுப்பாளருமான 58 வயதான வாடிம் ஸ்ட்ரோய்கின், செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 10 ஆவது மாடியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை போலீஸ் சோதனையின் போது ஜன்னலில் இருந்து கீழே விழுந்த அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் ராணுவத்திற்கு நன்கொடை அளித்ததாகவும், அதிபர் விளாடிமிர் புதினை "முட்டாள்" என்று அழைத்ததாகவும் அதிகாரிகள் அவரை விசாரித்து வந்தனர்.
மேலும் உக்ரைன் ராணுவத்தை ஆதரித்தது மற்றும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தது ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அறிக்கையின்படி, அவரது வீட்டில் போலீஸ் சோதனையின்போது தண்ணீருக்காக சமையலறைக்குச் சென்றதாகவும், பின்னர் ஜன்னலை திறந்து கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது.
புதின் மற்றும் உக்ரைன் போரை ஸ்ட்ரோய்கின் சமூக ஊடகங்களில் பலமுறை விமர்சித்துள்ளார்.
கடந்த 2022 இல் தனது சமூக வலைதள பதிவில், இந்த முட்டாள் [புதின்] தனது சொந்த மக்கள் மீதும் சகோதர தேசத்தின் மீதும் போரை அறிவித்தார்" என்று பதிவிட்டிருந்தார். அதிபர் புதினை விமர்சிப்பவர்கள் மர்மமான முறையில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல.
உக்ரைன் போரை வெளிப்படையாக விமர்சித்த ரஷிய பாலே நடனக் கலைஞர் விளாடிமிர் ஷ்க்லியாரோவ், கடந்த நவம்பரில் ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் குதித்து இறந்தார்.
- தனது மனைவியால் அபினவ் சிங் மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
- பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
ஒடியா பாடகர் அபினவ் சிங் (32) பெங்களூரில் அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
அபினவ் சிங் மீது அவரது மனைவி பொய்யான குற்றசாட்டுகளை கூறியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் ஒடிசாவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.