என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுச்சேரி கோவில்"
- இங்கு வன்னிமரம் தலவிருட்சமாக இருந்து வருகிறது.
- வன்னி மரத்தை வணங்குவதன் மூலம் தீவினைகள் அகலும்.
கோவிலின் தலவிருட் சமாக வன்னிமரம் திகழ்கிறது.
சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த புனித மரம் இன்றளவும் கோவிலின் கோபுரம் போல் உயர்ந்து நிற்கிறது.
இந்த மரம் எந்த வித இடையூறும் இல்லாமல் மேலோங்கி வளர்ந்து செல்லும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது.
வன்னி இலைகள் விநாயகருக்கும், முருகனுக்கும், சிவபூஜைக்கும், சனீஸ்வரருக்கும் உகந்த பச்சிலைகள் ஆகும்.
வன்னி மருத்துவ பயன்மிக்க ஒரு சிறந்த மூலிகையும் ஆகும்.
பொதுவாக சிவன் கோவில்களில் வில்வமரம் இருப்பதைத்தான் பார்க்க முடியும்.
இங்கு வன்னிமரம் தலவிருட்சமாக இருந்து வருகிறது.
வன்னி மரத்தை வணங்குவதன் மூலம் தீவினைகள் அகலும்.
நினைத்தாலும், கைகூப்பி தொழுதாலும், வலம் வந்தாலும் நம் பாவங்கள் விலகும் என விநாயகர் புராணம் சொல்கிறது.
வன்னி மரத்தின் அடியில் ஒரு முனிவர் தவம் இருந்து வந்தார் என்றும், அந்த மரத்தில் முனீஸ்வரர் குடி கொண்டுள்ளார் எனவும் பெரியவர்கள் கூறுகின்றனர்.
வன்னி மரத்தை வாரம்தோறும் சுற்றி வந்தால் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
எல்லா பிணிகளையும் போக்கவல்ல மூலிகையாக திகழும் வன்னியை வணங்கி வந்தால் வாழ்க்கையில் எல்லா துயரங்களும் விலகி நன்மை கிடைக்கும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
- வரதராச பெருமாள் சன்னதி சிறந்த கோபுர அமைப்புடன் சுற்றுப்பகுதியோடு விளங்குகிறது.
- கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
கோவிலின் வடமேற்கு மூலையாகிய வாயு மூலையில் கோவில் கொண்டுள்ள வரதராச பெருமாள் சன்னதி சிறந்த கோபுர அமைப்புடன் சுற்றுப்பகுதியோடு விளங்குகிறது.
பண்டைய நடு நாட்டுத்தலமாக விளங்கிய காலத்தில் "அச்சுதக் களப்பாளர்" என்னும் சிற்றரசன் ஆட்சியில் தொண்டை மண்டலத்திற்கு உட்பட்ட கெடில நதிக்கரையில் கோவில் கொண்டுள்ள திருவகீந்திரபுரம் தேவநாத சாமி கோவிலின் கட்டளைக்கு உட்பட்ட அபிமான கோவிலாக இந்த கோவில் இருந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது.
ஞானாம்பிகை உடனுறை காளத்தீசுவரர் கோவில், "அரியும் அரனும் ஒருவரே" என்னும் உண்மையையும், "சைவமும் வைணவமும் சமயங்களால் பிரிந்தனவேயொழிய வழிபாட்டால் வேறானவையல்ல" என்ற உண்மையையும், "இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான்; எல்லா இடங்களிலும் அவன் ஒன்றாகவே காட்சியளிக்கின்றான்" என்ற உண்மையையும் உலகோருக்கு உணர்த்துகின்றது.
சிந்தித்தவருக்கு சிவனே சிவலிங்கம்.
சீதேவி, பூதேவி உடனுறை வரதராஜ பெருமாள் கோவில் சிறந்த வேலைப் பாடுகளுடன், புதுவண்ணம் தீட்டப்பட்டு பொலிவுடன் காட்சியளிக்கிறது.
கோவில் கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.
- ஆறு முகங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த சன்னதியின் கோபுரத்தில் 6 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.
- சஷ்டி விழா இக்கோவிலில் சிறப்பாக நடைபெறும்.
கோவிலில் விநாயகர் சன்னதியை சுற்றிக் கொண்டு வந்தால், சிவன் சன்னதிக்கு பின்னால் மேற்கில், வள்ளி தெய்வானை உடனுறை சண்முக சுப்பிரமணியர் சன்னதி உள்ளது.
சன்னதியின் முன் நின்று துதிக்கும் போது, முருகப் பெருமானின் அழகும், அருளும், கருணையும், நம்மை மெய்மறக்க செய்கின்றன.
"வேலிருக்க வினையில்லை; மயிலிருக்க பயமில்லை" என்ற மெய்மொழிக்கேற்ப பக்தர்களுக்கு நம்மால் துணையாக இருந்து, அவர்களுக்கு ஏற்படும் தீமைகளை களைய கையில் வேல் கொண்டு விளங்குகிறார் என்பது சிவசுப்பிரமணியரை எதிரில் நின்று வணங்கும் போது தான் நம்மால் நன்கு உணர இயலும்.
தமிழ் தென்றல் திரு.வி.க.வின் உரைப்படி நிலவுலகத்தின் முதற் கடவுளும், குறிஞ்சி நில தலைவனும், தமிழ் மக்களை காக்க வந்த முதல் துணையும் முருகன் ஆவான்.
முருகு என்றால் அழகு. இளமை, இனிமை என்றும் பொருள்படும். சிவசுப்பிரமணியர் சன்னதிக்கு எதிரில், முருகன் ஏறும் ஊர்தியாகிய மயிலும், அதன்பின் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆறு முகங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த சன்னதியின் கோபுரத்தில் 6 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன.
சஷ்டி விழா இக்கோவிலில் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நடைபெறுவது விஷேசம்.
- பித்தளைத் தகடுகள் வேய்ந்து வாயில் படிகள், பீடம் யாவும் விளங்குகின்றன.
- கூத்தப்பெருமான் திருமேனியின் பின்புறம் "அண்டச்சக்கரம்" சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது.
24 கால் மண்டபத்தின் தென்பகுதி சைவ நெறி விளங்குவதாகவும் வடபகுதி வைணவ நெறி சிறப்பதாகவும் நேர்த்தியான கலைநயம் மிக்க சிற்பங்களுடன் அமைக்கப் பட்டுள்ளது.
வரதராசு பெருமாள் தென்கலை சார்ந்த கோவிலாக அமைந்திருப்பினும், மூலவருக்குரிய திருவாட்சி சங்கு, சக்கரங்களுடன் கூடிய வடகலை - செய்து வைக்கப்பட்டுள்ளது ஒரு புதுமையே.
வடகலை, தென்கலை வேறுபாடு அறியாத இறைவன் வேறுபட்டுள்ள மக்களுக்கு உணர்த்துவதாக இது அமைந்துள்ளது.
காசி விசுவநாதர் சன்னதியின் கிழக்கு வாயிலின் முன்புறம் பால விநாயகரும், கையில் வச்சிராயுதம் தாங்கிய பால கந்தப்பெருமானும் அமைந்துள்ளனர்.
எங்கும் நிறைந்த இறைவன் எந்நேரமும் தாண்டவமாடும் சபா மண்டபமானது, பஞ்சபூதங்களைப் படிகளாக்கி, ஐம்புலன்களைக் காலடியில் போட்டு, ஆறு ஆதார சக்திகளுக்கு மேற்பட்ட நிலையில் விளங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றிலும் கிரானைட் கற்களால் பதிக்கப்பட்டு சுவர்கள் புதிய பொலிவோடு காட்சி அளிக்கின்றன.
பித்தளைத் தகடுகள் வேய்ந்து வாயில் படிகள், பீடம் யாவும் விளங்குகின்றன.
கூத்தப்பெருமான் திருமேனியின் பின்புறம் "அண்டச்சக்கரம்" சுவற்றில் பதிக்கப்பட்டுள்ளது.
பழனியாண்டவர் (பாலதண்டாயுதபாணி) கிழக்கு நோக்கியவாறு இங்கு நின்றிருக்கின்றார்.
பஞ்சமூர்த்திகளுக்குரிய மூன்று அலங்கார மண்டபங்கள் தெற்கு நோக்கியவாறு அமைந்துள்ளன.
காளத்தீசுவரர் கோவிலில் மிக அதிக அளவில் 8 விநாயகர் சிலைகளும், 4 பெரிய காண்டாமணிகளும், 2 சந்தனம் அரைக்கும் பீடங்களுடன் கூடிய கற்களும் காணப்படுகின்றன.
- இவையல்லாமல், அன்னை ஞானாம்பிகை சன்னதியின் முன்மண்டபத்தில் ஒரு காண்டாமணியும் உள்ளது.
- முதல் மூன்று மணிகளின் அமைப்பும், நான்காவது மணியின் அமைப்பும் வேறுபட்டுள்ளன.
கொடிமரத்தின் மேற்கேயுள்ள பால விநாயகர், பால சண்முகர் சன்னதிகளின் உச்சியில், இரண்டு பெரிய காண்டாமணிகளும், காசி விசுவநாதர் சன்னதியின் மேல் ஒரு பெரிய காண்டாமணியும் உள்ளன.
இவையல்லாமல், அன்னை ஞானாம்பிகை சன்னதியின் முன்மண்டபத்தில் ஒரு காண்டாமணியும் உள்ளது.
முதல் மூன்று மணிகளின் அமைப்பும், நான்காவது மணியின் அமைப்பும் வேறுபட்டுள்ளன.
அன்னை சன்னதியில் உள்ளது பிரஞ்சுக்காரர்கள் ஆட்சியின்போது செய்த மணி- தொப்பி கவிழ்த்தது போன்ற தோற்றத்துடன் உள்ளது.
கோவிலின் மேற்கு சுற்றின் மேல்பாகத்தில் உள்ள கன்னி மூல விநாயகர், மகா விஷ்ணு, கெஜலட்சுமி ஆகிய சிலைகளும், அன்னை ஞானாம்பிகை சன்னதியின் வலப்பக்கம் தனித்திருக்கக்கூடிய விநாயகர் சிலையும் பழமை வாய்ந்தது எனக் கருத முடிகின்றது.
சிவன் சன்னதியின் உட்புறம் முன்மண்டப வலது பக்கமாக, ஒரு பழைய கால விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வள்ளி, தெய்வானை உடனுறை சிவசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் உள்ள வள்ளி, தெய்வானை சிலைகளில் பால் அபிஷேகத் தின்போது "நிறமாற்றம்" உண்டாவதை காணலாம்.
- பக்தர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி பொட்டு வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபடுகின்றன.
- சிறந்த குல தெய்வக்கோவிலாக திகழும் இக்கோவில் ராகு-கேது பரிகார தலமாகவும் சிறந்து விளங்குகிறது.
இந்த அம்மனுக்கு எதிர் திசையில் கருப்பண்ணசாமி வீற்றிருக்கிறார்.
இங்கு கேணிக்குளம் என்ற பெயரில் தீர்த்தகுளம் உள்ளது.
ஆழமான அந்த குளத்தையொட்டி தீர்த்தகிணறும் அமைந்துள்ளது.
இந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் புனிதநீரைக் கொண்டுதான் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
கோவில் வளாகத்தில் பெரிய அரச மரம் ஒன்று உள்ளது.
சுமார் 300 ஆண்டுகள் பழமையான இந்த மரத்தின் வேர் மூட்டுக்களில் 'சுயம்பு கல்யாண அம்மன்' என்ற உருவம் இயற்கையாக தோன்றியதாக சொல்கிறார்கள்.
அரச மரத்தடியில் நாகதேவதைகளும் உள்ளனர்.
பக்தர்கள் அம்மனுக்கு புடவை சாத்தி பொட்டு வைத்து விளக்கேற்றி பூஜை செய்து வழிபடுகின்றன.
சிறந்த குல தெய்வக்கோவிலாக திகழும் இக்கோவில் ராகு&கேது பரிகார தலமாகவும் சிறந்து விளங்குகிறது.
வடகிழக்கு மூலையில் விநாயகரும், ஜெயவீர ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளன.
இங்கு வடக்கு நோக்கி முகத்தை திருப்பிய நிலையில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.
ஜெயவீர ஆஞ்சநேயர் வாலில் மணிகட்டிய நிலையில் வாலை தலைக்கு மேலே தூக்கி ஆபத்துகளை போக்கி வெற்றிகளை தரக்கூடியவராக திகழ்கிறார்.
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் தலைமுறை தலைமுறையாக இந்த கோவிலுக்கு வந்து குலதெய்வ வழிபாட்டை செய்கின்றனர்.
இயற்கை எழில் கொஞ்சும் வகையில் மிகப்பழமையான இக்கோவிலை புனரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
- அங்குள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த திருவுருவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
- அதுபோல லாட சின்ன அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாவதை காணலாம்.
காளத்தீஸ்வரர் கோவிலின் உபகோவிலாக லாட சின்னம்மன் கோவில் உள்ளது.
இந்தகோவிலின் வடகிழக்கு திசையில் மணக்குள விநாயகர் கோவில் அருகே உள்ள லல்லிதொல்லாந்தல் தெருவில் அமைந்துள்ளது.
வெளியில் இருந்து பார்த்தால் ஏதோ ஒரு மடம் போல் தோன்றும் இக்கோவில் உள்ளே சென்று பார்த்தால் ஆச்சரியப்படும்படி பழமை மாறாத வகையில் காட்சி அளிப்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
அங்குள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த திருவுருவமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வாரம்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ராகு தலமான திருநாகேஸ்வரத்தில் உள்ள ராகு பகவான் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பாலானது கண்டத்தின் கீழே வரும்போது நீலநிறமாக மாறுவதை பார்க்கலாம்.
அதுபோல லாட சின்ன அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாவதை காணலாம்.
செவ்வாய் தோஷம், நாகதோஷம் போன்ற எல்லா வித தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் பேரருள் வாய்ந்த அம்மனாக ஓடு வேய்ந்த சிறிய கட்டிடத்தில் வீற்றிருக்கிறார்.
மற்ற அம்மன் கோவில்களை போல் அல்லாமல் இங்கு பாம்பு மேல் அமர்ந்த நிலையில் லாட சின்னம்மன் கம்பீரமாக வீற்றிருக்கிறார்.
நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் இங்கு 5 முதல் 10 வாரங்கள் வரை ராகுகாலத்தில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும்.
5 நெய் விளக்குகள் மற்றும் எலுமிச்சம் பழ விளக்குகள் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
- இது ‘சூட்சும லிங்கம்’ எனவும் வழங்கப்படும்.
- கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் பலி பீடத்தின் மேற்கே மிக அருகில் வானத்தை தொட்டுக் கொண்டிருக்கக் கூடிய ஏறக் குறைய 36 அடி ஒரு அங்குல உயரமுள்ள உறுதிமிக்க கொடி மரம் கம்பீரமாக நிற்கின்றது.
அன்பர் மனத்தில் அண்டவெளி பராசக்தியை ஈர்த்துக் கொடுக்க வல்லது கொடி மரம் ஆகும்.
இது 'சூட்சும லிங்கம்' எனவும் வழங்கப்படும்.
கொடிமரத்தின் உச்சியில் 2 கலசங்களும், நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற கருத்தில் கொடி மரத்தின் உச்சியில் அமைந்துள்ள மணிகள் காற்றில் கலகலத்து கொண்டு இருக்கின்றன.
கொடி மரத்தின் கிழக்கு பகுதியில் நர்த்தன விநாயகரும், தெற்கு வடக்கு முறையே பார்வதி பரமேசுவரனும், வள்ளி தெய்வானையுடன் முருகரும், மேற்கே சிவனை பார்த்தவாறு லிங்கோத்பவரும் செப்பு தகட்டில் பதிக்கப்பட்டு அமைந்துள்ளனர்.
பலிபீடத்தின் முன் தலை தாழ்த்தி வணங்கிய உடனே கொடி மர உச்சியை அண்ணாந்து நோக்கும் அமைப்பை எண்ணிப் பார்த்தால் "பணிவு உண்டாயின் உயர் பதவி உண்டாகும்.
புகழ் வானளாவ விரிந்து நிற்கும்" என்ற கருத்து நமக்கு மிக எளிதில் விளங்கி விடுகின்றது.
மண்ணையும், விண்ணையும் இணைக்கின்ற ஒரு சிறப்பு கொடி மரத்துக்கு உண்டு.
2 கோவில்களிலும் கொடி மரம், பலி பீடம், கோபுரம் என தனித் தனியாக இருப்பினும், ஒரு கோவிலின் சுற்றுப்பகுதியிலேயே அமைந்துள்ளது சிறப்பு கொண்டதாகும்.
- செட்டிமார்கள் இந்த இறைவியையும், ஈசனையும் தங்களது இதயத்துள் வைத்து பூஜித்து வந்தனர்.
- காலப்போக்கில் எல்லோராலும் அன்புடன் “செட்டிக்கோவில்” என்றே அழைக்கப்படுகின்றது.
இவ்வாறு பலவகையினாலும் சிறப்புற்று, தன்னை நாடிவந்தோருக்கு எண்ணியதை எல்லாம் நிறைவேற்றி அருள்பாலித்து வரும் இத்திருத்தலத்தில் உறையும் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானின் திருவருளால் ஈர்க்கப்பட்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் பன்னெடுங்காலத்திற்கு முன்பே இந்த இறைவியையும், ஈசனையும் தங்களது இதயத்துள் வைத்து "திருமூலர்" கூறியவாறு (இதயக்கோவில்) பூஜித்து வந்தனர்.
இவ்வாறு பூஜிக்கப் பெற்று வந்த தெய்வங்களுக்கு திருக்கோவில் கட்டிட எண்ணம் கொண்ட புதுச்சேரி வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் மனம் உருகி இறைவன் திருவருளை வேண்டிட இறைவனும் அவர்களின் மேலான அன்புக்கு கட்டுப்பட்டவனாக திருவருள் வழங்கினார்.
இறையருள் கிடைக்கப் பெற்ற அவர்கள் நகரின் நடுவில் தங்களுக்குச் சொந்தமான இடத்தில் பெருங்கோவில் எழுப்பி அதில் ஸ்ரீமத் ஞானாம்பிகா சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர பெருமானுடன் பரிவார மூர்த்திகளையும் அமைத்தனர்.
அதுமட்டுமின்றி சிவபெருமானின் இடதுபுறம் ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கும் விக்கிரகத்தினை அமைத்து பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தனர்.
பன்னெடுங்காலத்திற்கு முன்னரே சைவமும் வைணவமும் ஒன்று என்பதற்கு இலக்கணமாக புதுவை வாழ் ஆயிர வைசிய செட்டிமார்கள் சான்றாக இருந்துள்ளார்கள்.
இன்றளவும் இருந்து வருகிறார்கள்.
இவ்வாறு போற்றப்படும் ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஸ்ரீ காளத்தீஸ்வர சுவாமி ஸ்ரீதேவி -பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் காலப்போக்கில் எல்லோராலும் அன்புடனும் பெருமிதத்துடனும் "செட்டிக்கோவில்" என்றே அழைக்கப்படுகின்றது.
- பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தினை உணர்த்தும் வகையில் அருள்பாலித்து வரும் திருத்தலங்கள் சிறப்பானதாகும்.
- பக்தர்களால் “அஷ்டமா சித்திகள் அனைத்தும் தரும் காளத்தி” என்று போற்றி வணங்கிய திருத்தலம்.
புதுவை நகரின் இதயமாக விளங்கக்கூடிய மைய பகுதியில், கிழக்கில் மாதா கோவில் தெரு என்று அழைக்கப்படும் முற்கால நெசவாளர் தெருவுக்கும், மேற்கில் அம்பலத்தாடும் ஐயன் திருமடத்துக்கும், வடக்கே கோவில் பெயர் விளங்கும் காளத்தீஸ்வரன் கோவில் தெருவுக்கும், தெற்கே கொசக்கடை தெரு என்று கூறப்படும் அம்பலத்தடையார் மடம் தெருவுக்கும் இடையில் மிஷன் வீதியில் சுமார் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் காளத்தீசுவரர் கோவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இக்கோவில் திகழ்கிறது.
இப்பூவுலகம் "நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று" ஆகிய பஞ்சபூதங்களின் ஆளுமைக்கு உட்பட்டே இயங்குகிறது என்பது யாவரும் அறிந்ததே.
பஞ்சபூதங்களின் ஆதிக்கத்தினை உணர்த்தும் வகையில் அருள்பாலித்து வரும் திருத்தலங்கள் சிறப்பானதாகும்.
அவற்றுள் தென்கயிலாயம் என்றும், வாயுதலம் (காற்றுத்தலம்) என்றும் "ராகு-கேது தலம்" என்றும் அழைக்கப்படுவது செட்டிக்கோவில் எனப்படும் காளத்தீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில்.
இது பரத்வாஜ மகரிஷி, சிவகோசரியார், கண்ணப்ப நாயனார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றதும், 'கயிலை பாதி காளத்தி பாதி" என்று நக்கீரரால் போற்றி துதிக்கப்பட்ட திருத்தலமும் ஆகும்.
மூவர் பாடல் பெற்ற திருத்தலம்.
பக்தர்களால் "அஷ்டமா சித்திகள் அனைத்தும் தரும் காளத்தி" என்று போற்றி வணங்கிய திருத்தலம்.
- கோவில் கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த செப்பு கலசம் உடைத்து திருடப்பட்டு இருப்பதை கண்டார்.
- நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கோபுர கலசத்தை உடைத்துள்ளனர்.
வில்லியனூர்:
புதுச்சேரி வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரி பகுதியில் பாலமுருகன் கோவில் உள்ளது.
பிரசித்தி பெற்ற இக்கோவிலில் விசேஷ நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்தநிலையில் கோவில் பூசாரி கந்தன் நேற்று முன்தினம் இரவு கோவிலில் வழக்கமான பூஜைகளை செய்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை கோவிலை திறக்க பூசாரி கந்தன் வந்தபோது, வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது கோவில் கோபுரத்தில் பொருத்தப்பட்டு இருந்த செப்பு கலசம் உடைத்து திருடப்பட்டு இருப்பதை கண்டார்.
இதுபற்றி கோவில் நிர்வாகி வைத்தியநாதன் வில்லியனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் கோவில் கோபுர கலசத்தை உடைத்துள்ளனர். அதில் ஒரு பகுதி கீழே விழுந்த நிலையில் மற்ற பகுதியை திருடியுள்ளனர். மேலும் கொடிமரத்தில் இருந்த 3 சிறிய கலசங்களையும் உடைத்து திருடிச்சென்றது தெரியவந்தது.
தங்களை பற்றி அடையாளம் தெரியாமல் இருக்க கோவிலில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை உடைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
கோபுர கலசம் திருடப்பட்டது பற்றி அறிந்த கிராம மக்கள் கோவிலுக்கு திரண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதே கோவிலில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பஞ்சலோக முருகன் சிலை திருடு போனதும் இதுதொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்