search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேந்திரிய வித்யாலயா"

    • நாடு முழுவதும் 1,250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில் 3 பள்ளிகளும் இயங்குகின்றன.
    • மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கே.வி.எஸ்-ஐ "ஆலமரம்" என்று குறிப்பிட்டார்.

    நாடு முழுவதும் 1,250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், வெளிநாடுகளில் கேவிஎஸ் நடத்தும் மூன்று பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

    இந்நிலையில், கேந்திரிய வித்யாலயா சங்கதன் (கேவிஎஸ்) வைர விழாவையொட்டி, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

    மேலும், "பல மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் முக்கிய பங்காற்றியுள்ளன" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கேந்திரிய வித்யாலயா குடும்பத்தின் அனைத்து மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும், துணைப் பணியாளர்களுக்கும் மற்றும் முன்னாள் மாணவர்களுக்கும் வைர விழாவையொட்டி வாழ்த்துக்கள். இந்த மதிப்பிற்குரிய கல்விச் சமூகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் இது ஒரு சந்தர்ப்பமாகும்.

    பல ஆண்டுகளாக, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் பல மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதன் மூலம் நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளன. மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் முழுமையான வளர்ச்சிக்கு அவர்களின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கிடையே, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கே.வி.எஸ்-ஐ "ஆலமரம்" என்று குறிப்பிட்டார்.

    இதுகுறித்து மேலும் அவர், "கடந்த ஆறு சதாப்தங்களாக மாணவர்களுக்கு தரமான கல்வியை கேந்திரிய வித்யாலயா சங்கதன் வழங்கி வருகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த "ஆலமரம்" முக்கிய காரணியாக உள்ளது. இன்று நாம் விக்சித் பாரத் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் போது கேவிஎஸ்-ன் பங்கு முக்கியமானதாகிறது.

    கேவிஎஸ் குடும்பம் 21ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப கல்வி மூலம் எதிர்காலம் மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான பாதையில் தொடர்ந்து முன்னேறட்டும். மேலும் என்இபி (தேசிய கல்விக் கொள்கை) தரையில் செயல்படுத்தப்படுவதற்கு பங்களிக்கட்டும்" என்றார்.

    • தேசிய கல்வி கொள்கை- 2020 அமலாக்கத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.
    • பள்ளியில் மாணவர்களுக்கு புதிய தேசிய கல்வி கொள்கையின் படி கல்வி கற்றுத் தரப்படுகிறது.

    தருமபுரி

    தருமபுரி செட்டிக்கரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி கொள்கை- 2020 அமலாக்கத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.

    விழாவுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி தேசிய கல்வி கொள்கை மற்றும் அதன் பயன்கள் பற்றி படக்காட்சி உடன் விளக்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், தற்போது நாடு முழுவதும் 1250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளில் மூன்று பள்ளிகள் என மொத்தம் 1253 கேந்திரிய வித்யாலயாக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றன.கடந்த 2022-23 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு சேர்க்கை வயது 6 ஆக மாற்றியமைக்கப்பட்டது. அடித்தள நிலைகள் பால்வாட்டிகா, முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் 5 ஆண்டுகள் ஆகும். 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆயத்த நிலை முன்று வருடமாகவும், 6 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மூன்று வருடமாகவும், 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்கு வருடம் என 12 வருடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கு புதிய தேசிய கல்வி கொள்கையின் படி கல்வி கற்றுத் தரப்படுகிறது.

    மேலும் பள்ளி ஆசிரியகளின் திறமை மேம்பாட்டுக்காக 50 மணி நேர பயிற்சி கொடுக்கபடுகிறது.

    புதிய பாட திட்டத்தை திறம்பட செயல்படுத்த தேவையான அறிவு சார்ந்த பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் படி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×