என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்விக் கொள்கை ஆண்டு விழா
- தேசிய கல்வி கொள்கை- 2020 அமலாக்கத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.
- பள்ளியில் மாணவர்களுக்கு புதிய தேசிய கல்வி கொள்கையின் படி கல்வி கற்றுத் தரப்படுகிறது.
தருமபுரி
தருமபுரி செட்டிக்கரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி கொள்கை- 2020 அமலாக்கத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.
விழாவுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி தேசிய கல்வி கொள்கை மற்றும் அதன் பயன்கள் பற்றி படக்காட்சி உடன் விளக்கி பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தற்போது நாடு முழுவதும் 1250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளில் மூன்று பள்ளிகள் என மொத்தம் 1253 கேந்திரிய வித்யாலயாக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றன.கடந்த 2022-23 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு சேர்க்கை வயது 6 ஆக மாற்றியமைக்கப்பட்டது. அடித்தள நிலைகள் பால்வாட்டிகா, முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் 5 ஆண்டுகள் ஆகும். 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆயத்த நிலை முன்று வருடமாகவும், 6 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மூன்று வருடமாகவும், 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்கு வருடம் என 12 வருடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கு புதிய தேசிய கல்வி கொள்கையின் படி கல்வி கற்றுத் தரப்படுகிறது.
மேலும் பள்ளி ஆசிரியகளின் திறமை மேம்பாட்டுக்காக 50 மணி நேர பயிற்சி கொடுக்கபடுகிறது.
புதிய பாட திட்டத்தை திறம்பட செயல்படுத்த தேவையான அறிவு சார்ந்த பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் படி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.