என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகளிர் உரிமைத் திட்டம்"
- இன்று தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?
- பல்வேறு அரசியல் தலைவர்களும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, "தமிழகத்தில் எவ்வளவு போதைப் பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார். இன்று தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?" என காட்டமாக பேசினார்.
மகளிர் உரிமைத் திட்டம் குறித்து குஷ்புவின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக, நடிகை அம்பிகா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள். பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். 'பிச்சை' என அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். 5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்" என பதிவிட்டுள்ளார்.
- ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
- கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும்.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திட்டம் தொடங்கி வைப்பதற்கு முன்னதாகவே, பலருக்கு ரூ.1000 தொகை அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
அதன்பிறகு, உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் 1.06 கோடி பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், "இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும்.
கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும்.
இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
- 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டில் கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டத்தில் ஒரு கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்ததும் ஒவ்வாரு விண்ணப்பதாரருக்கும் அவர்களது விண்ணப்பம் பெறப்பட்டதாக கைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்பிறகு கள ஆய்வுகள் செய்யப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. எஞ்சிய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை அனுப்பப்பட்டது.
இதுவரை வங்கி கணக்கு தொடங்காதவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. அடுத்த தவணை பணம் செலுத்துவதற்குள் அவர்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் 57 லட்சம் விண்ணப்பஙகள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்? அவர்களை விட வசதி படைத்தவர்களுக்கு உரிமைத் தொகை கிடைத்து இருப்பதாகவும் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் புரியவில்லை என்றும் சந்தேகம் அடைந்துள்ளார்கள்.
அவர்களது சந்தேகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று முதல் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரமறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையத்தினை தொடர்புகொண்டு விண்ணப்பம் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள், மகளிர் உரிமைத் திட்டத்தில் தான் தகுதியானவர் என கருதும்பட்சத்தில் இ-சேவை மையம் மூலமாகவும் அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடமோ மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- விழா மேடை அமைக்கும் பணிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம்:
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்ட தொடக்க விழாவுக்கான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுப் பணித்துறையினரால் மேற்கொள்ளப்படும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- கூகனுர், கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், கோவிந்தபுரம், தேவஸ்த்தானப்பள்ளி, கவுணப்பள்ளி, அக்கிரகாரம், கன சந்திரம், கருக்கன அல்லி, ஆகிய கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
- உத்தனப்பள்ளியில் உள்ள நியாய விலை கடையில் 1,170 குடும்ப அட்டைதாரர்களுக்கு உட்பட்ட பயனாளிகள் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், உத்தனப்பள்ளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த் தலைமையில் கடந்த வாரம் முதல் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விண்ணப்ப பணிகள் உத்தனப்பள்ளி, லாளிக்கல், கொத்துர், கூகனுர், கிருஷ்ணாபுரம், லட்சுமிபுரம், கோவிந்தபுரம், தேவஸ்த்தானப்பள்ளி, கவுணப்பள்ளி, அக்கிரகாரம், கன சந்திரம், கருக்கன அல்லி, ஆகிய கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
அதில் ஒரு பகுதியான உத்தனப்பள்ளியில் உள்ள நியாய விலை கடையில் 1,170 குடும்ப அட்டைதாரர்களுக்கு உட்பட்ட பயனாளிகள் ஆன்லைனில் விவரங்களை பதிவு செய்து வருகின்றனர்.
- 2-ம் கட்ட முகாம்கள் 5-ந் தேதி தொடங்குகிறது
- விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வர வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த 24.07.2023 முதல் நடை பெற்று வருகிறது. மேற்படி முதற்கட்ட விண்ணப்ப பதிவிற்காக ஏற்கனவே நியாய விலைக் கடை பணியா ளர்கள் ஒவ்வொரு நியாய விலை கடை பகுதியில் உள்ள முகாம்கள் நடை பெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக ஏற்கனவே 20.07.2023 முதல் 23.07.2023 வரை வழங்கப்பட்டது.
மேற்படி விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பம் மற்றும் டோக்கன் பெற்ற வர்கள் விண்ணபங்களை இதுவரை முகாமில் அளித்துக் கொள்ள வில்லை என்றால் வருகிற 3.8.2023 மற்றும் 4.8.2023 ஆகிய நாட்களில் தங்களுக்குரிய நியாய விலைக் கடை முகாம்களில் கொடுத்துக் கொள்ளலாம். மேலும் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை பகுதியில் நடை பெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரி பார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய வற்றை எடுத்து வர வேண்டும்.
இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் வரும் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெறும். நியாய விலைக் கடை பணியா ளர்கள் ஒவ்வொரு நியாய விலைகடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகிய வற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக இன்று (1-ந் தேதி) முதல் 4.8.2023 வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவி விண்ணப்பங் களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 14 ஒன்றி யங்களில் 557 நியாய விலைக் கடைகளில் 2-ம் கட்ட முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்