என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரியானா கலவரம்"
- விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் கல்வீசப்பட்டதால் வன்முறை வெடித்தது
- இரு தரப்பினர் இடையேயான மோதலில் 6 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் மற்றொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மோதல் உருவானது. இந்த மோதல் வன்முறையாக வெடித்து, பெரும் கலவரமாக மாறியது.
இந்த கலவரத்தில் இரண்டு ஊர்க்காவல்படை வீரர்கள், மசூதி மதகுரு உள்ளிட்ட ஆறுபேர் கொலை செய்யப்பட்டனர். வாகனங்கள், கடைகள் கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலை நிலவியதால் அரசு இணைய தள சேவையை முடக்கியது.
சுமார் இரண்டு வார காலத்திற்குப்பிறகு தற்போது மீண்டும் இணைய தள சேவை அரியானாவின் நூ மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
விஷ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியில் பசு காவலர் மோனு மனேசர் கலந்து கொள்ள இருப்பதாக வதந்தி பரவியது. மோனு மனேசர், நூவில் நடைபெற இருக்கும் பேரணியில் ஆதரவாளர்கள் மிகப்பெரிய அளவில் திரள வேண்டும் என சமூக வலைத்தள வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம். நீங்கள் கலந்து கொண்டால் தேவையற்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்கள்.
இந்த வன்முறையில் மானேசர் பங்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற இருக்கிறது.
நூ மாவட்டத்தை நீக்க வேண்டும், இறைச்சிக்காக பசுக்கள் கொலை செய்யப்படாத மாவட்டமாக வேண்டும் என 51 பேர் கொண்ட கிராமசபை கூட்டம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே நூ மாவட்டத்தில் ஆகஸ்டு 28-ந்தேதி ஜலாஹிஷேக் யாத்திரை மீண்டும் தொடங்கும் என முடிவு செய்துள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எதிராக கடும் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இந்த வன்முறை காரணமாக 390-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 118 பேர் வன்முறை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சமூக வலைத்தளம் மூலமாக வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார்
கடந்த வாரம் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்தும் முழு அளவில் இயக்கப்பட்டு வருகிறது.
- நாளை வரை நூ மாவட்டத்தில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன
- கைது சட்ட விரோதமானது மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ளது நூ (Nuh) மாவட்டம்.
இங்கு கடந்த ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் வேறொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு மோதல் உருவானது. இதில் வன்முறை வெடித்து இம்மோதல் பெரும் கலவரமாக மாறியது.
கலவரம் மேலும் பரவாமல் தடுக்கவும், அமைதி திரும்பவும் மாநில அரசாங்கமும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து பணியாற்றி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இக்கலவரம் குறித்து இரு தரப்பினரும் மற்றொரு தரப்பினர் மீது பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர். நாளை () வரை அந்த மாவட்டத்தில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
கலவரம் குறித்து பல பிரமுகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியரயராக பணிபுரிபவர் முகேஷ் குமார். இவர் இக்கலவரம் மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
முகேஷ் குமார் எக்ஸில் (டுவிட்டர்) ஒரு பதிவிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:
"கத்தார் நாட்டை தலைமை இடமாக கொண்ட அல் ஜசீரா (Al Jazeera) செய்தி நிறுவனம், குருகிராம் காவல்துறை ஆணையர் கலா ராமச்சந்திரன்-ஐ தொடர்பு கொண்டு இந்துக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி நிர்பந்திக்கிறது. இந்த அழுத்தத்தால் ஆணையர் இந்து மத ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் எங்கிருந்தாலும் அவர்களை கைது செய்கிறார்." இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதை குருகிராம் காவல்துறை மறுத்தது. இதனை தொடர்ந்து முகேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கைது நடவடிக்கைக்கு சுதர்ஷன் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.., "இந்த கைது சட்ட விரோதமானது மட்டுமல்ல, பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதான தாக்குதல். நாங்கள் அவருக்கு துணையாய் இருப்போம்" என தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் சுரேஷ் சவ்ஹன்கே (Suresh Chavhanke) இது குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்தார். முகேஷ் விடுவிக்கப்பட்டதாக சுரேஷ் பின்னர் தெரிவித்திருந்தாலும் காவல்துறையினர் அதிகாரபூர்வமாக இதனை தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.
- அரியானாவில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்
- அரியானாவில் ஏற்பட்டுள்ள கலவரம் அருகில் உள்ள மாநிலங்களுக்கு பரவும் அபாயம்
மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மணிப்பூர் கலவரத்திற்கு நாடு தழுவிய எதிர்ப்பு கிளம்பிய போதிலும், மத்திய அரசும் மாநில அரசும் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசாமல் இருந்து வருகிறது.
தற்போது அரியானா மாநிலத்தில் வன்முறை வெடித்துள்ளது. கடந்த மாதம் 31-ந்தேதி விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல் வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வன்முறை பக்கத்து மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள டெல்லி மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சிதான் நடந்து வருகிறது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். நலத்திட்டங்கள் சரியான முறையில் மக்களை சென்றடையும். அதனால் இரட்டை என்ஜின் ஆட்சிதான் மக்களுக்கு தேவை என பாரதிய ஜனதா கூறி வரும் நிலையில், தற்போது அந்த இரட்டை என்ஜின் எங்கே? என உத்தவ் தாக்கரே பா.ஜனதா நோக்கி கேள்வி எழுப்பி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:-
முதலில் மணிப்பூர் தற்போது அரியானா. இது ராம்ராஜ்ஜியமா? இல்லையா?. அங்கே அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. மணிப்பூர் நிலை என்ன என்று நான் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். மணிப்பூர் மாநில கவர்னர் ஒரு பெண். அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும்போது ஏதும் நடக்கவில்லை என அரசு தெரிவித்து வருகிறது.
இரட்டை என்ஜின் எங்கே?
பாரதிய ஜனதா எம்.எல்.ஏ. நித்திஷ் ராணா சட்டசபையில் பாகிஸ்தானுக்கு போவது குறித்து பேசுகிறார். பெண்களை பாதுகாக்க முடியாத அவர்களிடம் இதைவிட வேறு எதை எதிர்பார்க்க முடியும். தாங்கள் மணிப்பூரில் பெண்களின் நிலைகளை பற்றி கவலைப்படுகிறோம். அவர்கள் பெண்களை பாதுகாப்பதை விட இந்துத்வாவை பற்றி பேசுகிறார்கள்
சீதைக்காக ராமாயணம் தொடங்கியது. திரவுபதிக்காக மகாபாரதம் தொடங்கியது. ஆனால் இந்த அரசு இதை மிகவும் கவனமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே இது இந்து தேசம் அல்ல.
எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் மும்பையில் ஆகஸ்ட் மாதம் இறுதியில் அல்லது செப்டம்பர் மாதம் முதலில் நடக்கலாம்.
- வன்முறையின் மையப்புள்ளியாக கருதப்படும் மோனு மானேசர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
- வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது. கலவரத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் கலவரம் அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது. வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
வன்முறையின் மையப்புள்ளியாக கருதப்படும் மோனு மானேசர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் மீது ராஜஸ்தான் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. அவரை கண்டுபிடிக்க உதவும்படி ராஜஸ்தான் அரசாங்கத்திடம் கேட்டுள்ளேன். நாங்களும் உதவி செய்ய தயாராக இருக்கிறோம். இப்போது ராஜஸ்தான் காவல்துறை அந்த நபரை தேடி வருகிறது.
வன்முறை தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 190 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வன்முறைக்கு காரணமானவர்கள் இழப்புகளுக்கு பொறுப்பேற்கவேண்டும். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொலைபேசி அழைப்பு பதிவுகள் மூலம் காவல்துறை விசாரித்து வருகிறது.
அனைத்து மக்களையும் பாதுகாப்பது காவல்துறைக்கு சாத்தியமில்லை. மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- வன்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
அரியானாவில் விரிவடைந்து வரும் துன்பகரமான வகுப்புவாத மோதலால் மனவேதனை அடைகிறேன். உயிர் இழப்புகள் மற்றும் பரவலான ஆணவக் கொலைகள் மறுக்க முடியாத துயரமான ஒன்று. வன்முறையால் 6 பேர் உயிரிழந்தது மற்றும் வடமாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவர முன்னேற்றங்கள் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைவரும் இன நல்லிணக்கத்தை நிலைநிறுத்துவதில் ஒன்றிணைவோம். வன்முறையை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குருகிராம் மாவட்டத்துக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- அரியானாவில் நிகழ்ந்த வன்முறை திட்டமிட்ட சதி என்று அம்மாநில முதல்-மந்திரி கட்டார் குற்றம் சுமத்தி உள்ளார்.
புதுடெல்லி:
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வஇந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக வெடித்தது.
கலவரத்தில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கலவரம் அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது. அங்கு வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. அங்கு ஒருவர் பலியானார்.
இதன் காரணமாக அரியானா வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. நேற்று பகலில் வன்முறை சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் நேற்று இரவு சில இடங்களில் மீண்டும் வன்முறை தலைதூக்கியது.
நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இணையதள சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. என்றாலும் நேற்று இரவு சில இடங்களில் கடைகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. குருகிராம்-சோனா சாலையில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்தன.
குருகிராம் பத்சாப்பூரில் சாலையோர உணவகத்துக்கு தீ வைக்கப்பட்டது. அருகில் உள்ள மார்க்கெட்டில் இருந்த கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. குருகிராம் 70-வது செக்டார் பகுதிகளிலும் நேற்று இரவு பல கடைகள் சூறையாடப்பட்டன.
கலவரம் தொடர்பாக இரு மாவட்டங்களிலும் 90 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக இரு மாவட்டங்களில் பெட்ரோல்-டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
குருகிராம் மாவட்டத்துக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. துணை நிலை ராணுவத்தினரும் மற்றும் அதிரடிப்படையினரும் முக்கிய இடங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரியானாவில் ஏற்பட்டுள்ள வன்முறையால் டெல்லியில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெல்லிக்குள் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு உள்ளனர். சாலைகளில் வழக்கத்தை விட அதிகளவு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
பதட்டம் ஏற்படலாம் என்று கணக்கிடப்பட்டுள்ள டெல்லி மற்றும் டெல்லி புறநகர் பகுதிகளில் டிரோன்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். பல பகுதிகளில் துணைநிலை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தேவை இல்லாமல் சமூக வலைதளங்களில் வரும் வதந்தி தகவல்களை நம்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரியானாவில் நிகழ்ந்த வன்முறை திட்டமிட்ட சதி என்று அம்மாநில முதல்-மந்திரி கட்டார் குற்றம் சுமத்தி உள்ளார். அவரிடம் இன்று காலை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
வன்முறை நடத்தி தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக விஸ்வஇந்து பரிஷத்தும் குற்றம் சுமத்தி உள்ளது. தங்கள் மீதான தாக்குதலை கண்டித்து பாரத் பந்த் நடத்தப்போவதாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்தது. இதையடுத்து வடமாநிலங்களில் பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்