என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விதவை"
- பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.
- பழங்குடியின நபரை தாக்கியபோது தடுக்க முயன்ற விதவை பெண்ணையும் கிராம மக்கள் அடித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதவை பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 48 வயது பழங்குடியின நபரை கிராம மக்கள் நிர்வாணப்படுத்தி, அடித்து, ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 14 அன்று அலிராஜ்பூர் மாவட்டத்தின் சோட்டி மால்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பழங்குடியின நபரை தாக்கியபோது தடுக்க முயன்ற விதவை பெண்ணையும் கிராம மக்கள் அடித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். அந்த சமயத்தில் அப்பெண்ணுக்கு கிராம மக்கள் யாரும் உதவி செய்யவில்லை. பாதிக்கப்பட்ட பழங்குடியின நபர் தான் அப்பெண்ணுக்கு ஆதரவு கொடுத்து அவளது குழந்தைகளை வளர்க்க உதவி செய்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக அந்நபரை கிராம மக்கள் நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்கபடும்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்க உள்ளதாக அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் உதவும் என்பதால், இதனை ஜார்க்கண்ட் அரசு அமல்படுத்தி இருக்கிறது. விதவைகள் தங்கள் திருமணப் பதிவுச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணமான ஒரு வருடத்தில் அவர்களது வங்கி கணக்கில் 2 லட்சம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் அரசு 2024-25 நிதியாண்டில் ரூ.1.28 லட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. சம்பை சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றார் தங்கமணி.
- விதவைப் பெண் கோயிலுக்குள் செல்வதை தடுப்பதா என ஐகோர்ட் நீதிபதி வேதனை தெரிவித்தார்.
சென்னை:
ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகா, கெட்டிசேவியூர் கிராமத்தில் உள்ள பெரிய கருப்பராயன் கோவிலில் பூசாரியாக இருந்த பொங்கியப்பன் கடந்த 2017-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இந்தக் கோவிலில் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் ஆடித்திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூசாரி பொங்கியப்பனின் மனைவி தங்கமணி மற்றும் மகனை கோவிலுக்குள் நுழைய அந்த ஊரைச் சேர்ந்த அய்யாவு மற்றும் முரளி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விதவை என்பதால் கோவிலுக்குள் நுழையக் கூடாது என மிரட்டுவதால், திருவிழாவில் கலந்துகொண்டு, கோவிலுக்குள் சென்று, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தங்கமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், விதவைப்பெண் கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெட்டு விடும் என்ற மூட நம்பிக்கைகள் தமிழகத்தில் இன்னும் நிலவுவது துரதிருஷ்டவசமானது. பல சீர்திருத்தவாதிகள் இந்த அர்த்தமற்ற நம்பிக்கைகளை உடைக்க முயன்றாலும், சில கிராமங்களில் அது தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என வேதனை தெரிவித்தார். மேலும், ஆண்கள் தங்கள் வசதிக்கேற்ப வகுத்த இந்தக் கோட்பாடுகள் மற்றும் விதிகளால், கணவனை இழந்ததால் பெண்ணை இழிவுபடுத்துகின்றன எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாகரீக சமுதாயத்தில் இவையெல்லாம் தொடர அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி, மனுதாரர் தங்கமணியும், அவரது மகனும் திருவிழா மற்றும் கடவுள் வழிபாட்டில் கலந்து கொள்வதைத் தடுக்க எவருக்கும், எந்த உரிமையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். மனுதாரரை கோவிலுக்குள் நுழையவிடாமல் யாரேனும் தடுக்க முயற்சித்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தங்கமணி கோவிலுக்குள் செல்வதை தடுக்கும் அய்யாவு மற்றும் முரளி ஆகியோரை சிறுவலூர் காவல் நிலைய ஆய்வாளர் அழைத்து கோவிலுக்கு வரும் தாய் - மகனையும் தடுக்கக்கூடாது என அறிவுறுத்தும்படி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி வழங்கப்படும் அந்த அறிவுறுத்தலையும் மீறி அவர்கள் இருவரும் செயல்பட்டால் சட்டத்திற்குட்பட்டு இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம் என காவல்துறைக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் திருவிழா நடக்கக்கூடிய இரு நாட்களிலும் தாயும் மகனும் கலந்து கொள்வதை காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்