என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுங்கக்கட்டணம்"

    • மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை.
    • தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் மட்டும் NPR-FASTag- அடிப்படையிலான தடையற்ற கட்டண நடைமுறை.

    வரும் மே 1ம் தேதி முதல் நாடு தழுவிய செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் நடைமுறை குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து கூறியபோது, " செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகமும், நெடுஞ்சாலை ஆணையமும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    தேர்ந்தெடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளில் மட்டும் NPR-FASTag- அடிப்படையிலான தடையற்ற கட்டண நடைமுறையில் இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
    • வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    இந்த நிலையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

    அதன்படி தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னையில் பரனூர், வானகரம், சூரப்பட்டு ஆகிய 3 இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.110 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.180 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.380 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.275 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.415 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.595 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.485 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.725 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வானகரம் சுங்கச்சாவடியில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. இங்கு கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.55 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.90 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.130 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.185 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.275 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.200 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.290 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.435 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.350 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.525 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கார், ஜீப், வேன், இலகுரக மோட்டார் வாகனம் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.75 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.115 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    இலகுரக வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.120 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.185 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பஸ்கள், டிரக் ஆகியவை ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.255 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.385 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    வர்த்தக வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.280 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.420 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    கனரக கட்டுமான எந்திர வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.400 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.600 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    பெரிய வாகனங்கள் ஒருமுறை செல்ல கட்டணம் ரூ.490 ஆகவும், ஒரே நாளில் சென்று திரும்புவதற்கு கட்டணம் ரூ.730 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

    மேலும் சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ள உள்ளூர் வணிகம் சாராத வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணம் ரூ.350 ஆகும்.

    • ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட உள்ளது.
    • மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதில் 40 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்.

    இந்த நிலையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு வகை வாகனங்களை பொருத்து சுங்கச் சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட உள்ளது.

    சென்னையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மொத்தம் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதி கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

    சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக விலைவாசி அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    • நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது.
    • பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையில் நெடுஞ்சாலை சுங்கக்கட்டணம் தொடர்பாக நேற்று உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி எழுப்பினர். இந்த கேள்விகளுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்து இருக்கிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.64,809.86 கோடி வசூலாகி இருக்கிறது. இது முந்தைய ஆண்டை விட 35 சதவீதம் அதிகம். அதேநேரம் 2019-20-ல் இது ரூ.27,503 கோடியாக இருந்தது.

    சாலை உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு அதிகம் செலவிடுகிறது. எனவே சுங்கக்கட்டணம் அவசியமானது. சிறந்த சாலையை நீங்கள் விரும்பினால், அதற்காக நீங்கள் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்பதே கொள்கை ஆகும்.

    நாங்கள் ஏராளமான பெரிய சாலைகள், 4 வழிச்சாலைகள், 6 வழிச்சாலைகளை அமைத்து வருகிறோம். பிரம்மபுத்ரா நதியில் ஏராளமான பாலங்களை அமைத்து உள்ளோம்.

    இதற்காக வெளிச்சந்தையில் இருந்து நிதி பெற்று வருகிறோம். எனவே சுங்கக்கட்டணம் இல்லாமல் இவற்றை செய்ய முடியாது.

    ஆனாலும் நாங்கள் மிகவும் நியாயமான முறையிலேயே இருக்கிறோம். 4 வழிச்சாலைகளில் மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கிறோம். இருவழிச்சாலைகளில் வசூலிக்கவில்லை.

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கட்டண சுங்கச்சாவடிகளும் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் (கட்டண நிர்ணயம் மற்றும் வசூல்) விதிகள்-2008 மற்றும் தொடர்புடைய சலுகை ஒப்பந்தத்தின் விதிகளின்படி நிறுவப்பட்டுள்ளன.

    இந்த சட்டப்படி தேசிய நெடுஞ்சாலையில் ஒரே பிரிவு மற்றும் ஒரே திசையில் 60 கி.மீ.க்குள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. எனவே உண்மையில் சில விதிவிலக்குகள் உள்ளன.

    இந்த பாராளுமன்ற அமர்வுக்குப்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக நாங்கள் ஒரு புதிய கொள்கையை அறிவிக்க உள்ளோம். அதன்மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படும்.

    ஏனெனில் அதில் நாங்கள் நுகர்வோருக்கு நியாயமான சலுகைகளை வழங்குவோம். அதன்பிறகு சுங்கக்கட்டணம் தொடர்பாக எந்த விவாதமும் இருக்காது.

    இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.

    • சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக் கூடாது.
    • முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு அவற்றில் சுங்கக்கட்டணத்தை நீக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்து உள்ளது.

    தென் மாநிலங்களில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் இருந்து மட்டும் ரூ.132 கோடி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

    அரசு நிறுவனமே விதிகளை மதிக்காமல் அப்பாவி மக்களிடம் சுங்கக் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    செங்கல்பட்டு சுங்கச்சாவடியையும், திண்டிவனம் சுங்கச்சாவடியையும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1.20 லட்சம் வாகனங்கள் கடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    இவ்வளவு வாகனங்கள் செல்லும் இந்த சாலையில் ஒரு நாளைக்கு ரூ.11 லட்சம் மட்டுமே கட்டணமாக வசூலாவதாக கணக்கு காட்டப்பட்டால், அதில் எந்த அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள முடியும்.

    செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் சுங்கச்சாவடிகளில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதுமே சுங்கச் சாவடிகளின் கட்டண வசூல்கள் இப்படித் தான் பராமரிக்கப்படுகின்றன. சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தில் பாதியாவது கணக்கில் காட்டப்படுமா? என்பதே ஐயமாகத் தான் இருக்கிறது.

    சுங்கச்சாவடிகளும், அவற்றில் வசூலிக்கப்படும் கட்டணங்களும் மர்மமாகவே நீடிப்பதை அனுமதிக்க முடியாது. சுங்கக்கட்டண கணக்கு மேலாண்மை என்பது வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படக் கூடாது.

    எனவே, பரனூர் சுங்கச்சாவடியில் தொடங்கி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணம் குறித்து தணிக்கை செய்யப்பட வேண்டும்.

    அதன்மூலம் முதலீடு எடுக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை அடையாளம் கண்டு அவற்றில் சுங்கக்கட்டணத்தை நீக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம்.

    கடலூர்:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் பரங்கிப்பேட்டை அருகே கொத்தட்டையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியில் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டணம் வசூல் செய்ய உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது. மேலும் கட்டண விவரங்களையும் வெளியிட்டது.

    இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர், சாலை பணி முழுமை பெறாமல் சுங்க கட்டணம் வசூலிக்கக்கூடாது. மேலும் கட்டண விகிதம் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதற்கிடையில் இந்த போராட்டத்தை யொட்டி கடலூர்-சிதம்பரம் இடையே தனியார் பஸ்கள் ஓடாது என்று அறிவித்துள்ளனர்.

    இதுபற்றி கடலூர் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் தேசிங்குராஜன் கூறுகையில், கொத்தட்டை சுங்கச்சாவடியில் 50 முறை சென்றால் ஒரு மாத கட்டணம் ரூ.14 ஆயிரத்து 90 அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் வட்டார போக்குவரத்து அதிகாரி நிர்ணயித்த கால நேர அட்டவணைப்படி ஒரு நாளைக்கு 8 முதல் 10 முறை சட்டப்படி பஸ்கள் இயங்கி வருகிறது. இப்படி என்றால் 5 நாளில் ஒரு மாத கணக்கு தீர்ந்து விடும். ஆகவே இந்த கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இன்று கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு செல்லும் 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் ஓடாது.

    இந்த பஸ்களை சுங்கச்சாவடியில் நிறுத்தி முற்றுகை போராட்டம் நடத்துவோம். இது தொடர்பாக சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தின் தீவிரம் குறித்து அறிவிப்போம் என்றார்.

    அதன்படி இன்று காலை கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் அனைத்து தனியார் பஸ்களும் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளானார்கள்.

    அவர்கள் அரசு சார்பில் இயக்கப்பட்ட பஸ்களில் சென்றனர். இதனால் பணிக்கு செல்ல வேண்டியவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல இயலாமல் தவித்தனர்.

    இந்த நிலையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் அனைத்து பஸ்களையும் கொத்தட்டை சுங்கச்சாவடிக்கு கொண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்து உள்ளனர்.

    அதேபோல் கொத்தட்டை சுங்கச்சாவடி சுற்று வட்டார கிராம மக்களும், அனைத்து கட்சியினர், சமூகநல அமைப்பினர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியதால் அங்கு 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×