என் மலர்
நீங்கள் தேடியது "பாலிஸ்டிக் ஏவுகணை"
- வடகொரியா சந்தேகத்திற்கிடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் தெரிவித்தது.
- அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
டோக்கியோ:
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், வடகொரியா சந்தேகத்திற்கு இடமான பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது என ஜப்பான் பிரதமர் அலுவலகம் டுவீட் செய்துள்ளது. அது எந்த வகையான ஏவுகணை என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் கியோடோ நிறுவனம், டோக்கியோவில் உள்ள அரசாங்கத்தை மேற்கோள் காட்டி, இந்த ஏவுகணை ஜப்பான் மீது பறந்து கொண்டிருந்ததாகக் கூறியது.
இதுதொடர்பாக, ஜப்பான் பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், தற்போதைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு தயார் நிலையில் இருப்பது உள்பட முன்னெச்சரிக்கைக்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
- கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் சிரியா மீது நடத்திய தாக்குதலில் ஈரான் தூதரகம் பலத்த சேதம் அடைந்தது.
- இரண்டு தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்திருந்தது.
இஸ்ரேல் ராணுவம் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களது இருப்புகளை கண்டறிந்து துல்லியமாக தாக்கி அழித்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியபோது எதிர்பாராத விதமாக சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டது.
இதில் இரண்டு ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் தெரிவித்திருந்த நிலையில், நேற்று ஈரான் நேரடியாக டிரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 300-க்கும் மேற்பட்ட டிரான்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் ஏற்கனவே வான் எல்லைகளில் எதிரி ஏவுகணைகள் தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் ஈரான் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்த்ததால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவி செய்தது.
இதனால் நேற்று நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும் இஸ்ரேல் சிறப்பாக எதிர்கொண்டு தடுத்ததாக கூறப்படுகிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு தாங்கள் உதவியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஈரானின் 80 பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் ஏமனில் இருந்து ஏவப்பட்ட குறைந்தபட்சம் ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகள், 80-க்கும் மேற்பட்ட ஒரு வழி தாக்குதல் ஆளில்ல ஏரியல் வாகனங்கள் (OWA UAV) ஆகிய தடுத்து அழிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் தொடர்ச்சியான இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையிலான, மோசமான மற்றும் பொறுப்பற்ற நடத்தை பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அமெரிக்க மற்றும் கூட்டணிப் படைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
- இஸ்ரேல் தொடர்புடைய கப்பல் என ஈரான் சிறைப்பிடித்துள்ளது.
- சிறைப்பிடித்த கப்பலில் 17 இந்தியர்கள் உள்ளனர்.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியதில் இரண்டு முக்கிய ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனால் ஈரான் பயங்கர கோபம் அடைந்தது. இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. தெரிவித்ததுபோல் நேற்று டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
முன்னதாக ஓர்முஸ் ஜலசந்தியில் போர்ச்சுக்கல் நாட்டு கொடியுடன் சென்ற சரக்கு கப்பலை ஈரான் ராணுவத்தின் கப்பற்படை வீரர்கள் சுற்றிவளைத்து சிறைப்பிடித்தனர். இந்த கப்பலில் இந்தியா, பிலிப்பினோ, பாகிஸ்தான், ரஷியா மற்றும் எஸ்டோனியா நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் 17 பேர் இந்தியர்கள்.
இவர்களை மீட்பதற்கு இந்திய வெளியுறவுத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரானின் வெளியுறவுத்துறை மந்திரி அமிர்-அப்டோலாஹியன் உடன் டெலிபோன் மூலம் பேசினார்.
அப்போது சிறைப்பிடித்து வைத்துள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களை உடனடியாக விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
"சிறைப்பிடித்துள்ள கப்பல் தொடர்பான விவரங்களை நாங்கள் பின்பற்றி வருகிறோம். கப்பலில் உள்ள இந்தியர்களை இந்திய அரசின் பிரதிநிதிகளுடன் பேசுவதற்கு விரைவில் அனுமதிப்போம்" என ஈரான் மந்திரி தெரிவித்தார்.
அப்போது இந்தியர்கள் குறித்து ஜெய்சங்கர் தனது கவலையை தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக ஈரானிடம் உதவி கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
- நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
- ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது.
உக்ரைன் போர்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் ரஷியாவின் அண்டை நாடான உக்ரைன் முயற்சி மேற்கொண்டது. இதனால் தங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மேற்கு நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி ரஷியா கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்தது.
1000 வது நாள்
நேற்றுடன் போர் 1000 வது நாளை எட்டிய நிலையில் ரஷியா மீது உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் பால்சிடிக் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா வழங்கிய இந்த ATACMS பால்சிடிக் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு கட்டுப்பாடு இருந்த நிலையில் அதை ஜோ பைடன் தளர்த்திய நிலையில் நேற்றைய தினம் ரஷியா மீது முதல் முறையாக பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

Bryansk
நேற்று இரவு ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] பகுதியில் இருந்த ராணுவக் கிடங்கை தங்களின் ஏவுகணை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை குறித்து பேசியுள்ள ரஷிய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்காவால் வழங்கப்பட்ட 5 ATACMS ஏவுகணைகள் ரஷியாவின் பிரையன்ஸ்க் [Bryansk] வான்பகுதிக்குள் வந்ததாகவும் அவற்றை தாங்கள் அழித்ததாகவும், அதில் ஒரு ஏவுகணையின் சேதமடைந்த பாகங்கள் ராணுவ தளவாடம் அருகே விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதில் எந்த உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

உலகப் போர்
முன்னதாக உக்ரைன் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்கா உத்தரவிட்டிருப்பது மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னர் இன்னொரு உலகப் போரை துவக்க பார்க்கிறார் என்றும் ரஷியா தெரிவித்தது. மேலும், உக்ரைனுக்கு இந்த அனுமதியை அளித்ததன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் நேரடியாக தங்களுடன் மோதுவதாக ரஷியா கருதும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போர் தொடங்கி நேற்றைய 1000 வது நாளில் ரஷிய அதிபர் புதின் அணு ஆயுத பயன்பாட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தி கொள்கைகளில் மாற்றம் செய்துள்ளார்.

அணு ஆயுத கொள்கை
இந்த கொள்கைப்படி, அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு, ரஷியாவின் மீது ஏதேனும் ஒரு வகையில் தாக்குதல் நடத்தினால் கூட, அதற்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்க இந்த புதிய கொள்கை வழிவகை செய்கிறது.
இந்த உத்தரவுக்கு வெளிவந்த அதே நாளிலேயே உக்ரைன் பாலிஸ்டிக் தாக்குதல் நடத்தி ரஷியாவை சீண்டியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதன்படி ரஷியா அணு ஆயுத்தங்களை பயன்படுத்தினால் அது மனித குல வரலாற்றின் மீது மேலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.
- கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்
- அதேவேளையில் மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் என்ற புதிய ஏவுகணை மூலம் நடத்தியதாக புதின் சொல்கிறார்
ரஷியா உக்ரைன் மீது படையெடுத்து ஆயிரம் நாட்களை தாண்டியுள்ள நிலையிலும் சண்டை முடிவுக்கு வரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் உக்ரைன் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷியா மீது அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக உக்ரைன் ரஷியா ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீது முதன்முறையாக கண்டம் விட்டு கண்டம் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம்சாட்டியது.
இவ்வாறு செய்தி வந்த நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மிட்-ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணையை உக்ரைன் பகுதி மீது செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏவுகணை உக்ரைன் இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றிகரமாக அமைந்தது என புதின் தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணைக்கு ஒரேஷ்னிக் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரேஷ்னிக் அணு அல்லாத ஹைப்பர்சோனிக் கட்டமைப்பு கொண்டது. நொடிக்கு 2.5 முதல் 3 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. நவீன ஏர் பாதுகாப்பு சிஸ்டங்கள் கூட இதை தடுத்து நிறுத்த முடியாது. தடுத்து நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. இன்றைய நிலவரப்படி, இந்த ஏவுகணையை எதிர்கொள்ள எந்த வழியும் இல்லை என புதின் தெரிவித்துள்ளார்.
ரஷியாவை நோக்கி நேட்டோ நாடுகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த ஒரேஷ்னிக் சோதனை எனத் தெரிவித்துள்ளார்.
- போரில் பயன்படுத்த அமெரிக்கா திரும்பி வழங்கலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது
- ஜோ பைடன் பதவியை விட்டு செல்வதற்கு முன் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கலாம்
உக்ரைன் போர்
உக்ரைன் மேற்குலகின் நேட்டோ நாடுகளுடன் இணைய முயன்றால் தங்கள் நாட்டுக்கு ஆபத்து என்று கூறி ரஷியா கடந்த 2022 பிப்ரவரியில் போரை தொடங்கியது. 1000 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் போரில் இரண்டு பக்கமும் இழப்புகள் அதிகம் உள்ளன. இந்நிலையில் தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுமதி வழங்கினார்.

இதனால் உக்ரைன் முதல் முறையாக கடந்த மாதம் ரஷியா மீது அந்த பாலிஸ்டிக் மிசைல்களை பயன்படுத்தியது. அவற்றை தாக்கி அழித்த ரஷியா உக்ரைன் மீது தாங்கள் கண்டுபிடித்த புதிய ரக பாலிஸ்டிக் மிசலை ஏவியது. இந்நிலையில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்யும் அமெரிக்கா அடுத்ததாக அணு ஆயுதங்களை வழங்கலாம் என்ற செய்திகள் பரவின.

புதின் மிரட்டல்
ரஷிய அதிபர் புதின், தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் நாட்டுக்கு எந்த அணு ஆயுதம் கொண்ட நாடு உதவினாலும் தங்களின் அணு ஆயுதங்களை அவர்கள் மீது பயன்படுத்தலாம் என ரஷியவின் அணு ஆயுத விதியை திருத்தி எழுதினார். இதன் பிறகே அமெரிக்கா உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை வழங்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன.
சோவியத் யூனியன்
கடந்த 1991 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் உடைந்த சமயத்தில் ரஷியா உக்ரைன் தனித்தனி நாடானது. அப்போது சோவியத் யூனியனில் உருவாக்கப்பட்ட அணு ஆயுதங்களில் ஒரு பங்கு புதிதாக உருவான உக்ரைன் நாட்டுக்கு கிடைத்தது.
ஆனால் 1994 புடாபெஸ்ட் உடன்படிக்கையின் படி உக்ரைன் தனது அணு ஆயுதங்களைத் துறந்தது. இந்நிலையில் உக்ரைன் துறந்த அந்த அணு ஆயுதங்களை மீண்டும் இந்த போரில் பயன்படுத்த அமெரிக்கா திரும்பி வழங்கலாம் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது.

ஜேக் சல்லிவன்
இது தொடர்பாக நேற்று [ஞாயிற்றுக்கிழமை] ஏபிசி செய்தி நிறுவனத்திடம் பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சில மேற்கத்திய அதிகாரிகள் ஜோ பைடன் பதவியை விட்டு வெளியேறுவதற்கு முன் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க பரிந்துரைத்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால் அது பரிசீலனையில் இல்லை, போரில் உக்ரைனின் இயல்பான திறன்களை அதிகரிப்பதே நாங்கள் செய்வது, இதனால் அவர்கள் திறம்பட தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும, ஆனால் அவர்களுக்கு அணுசக்தி திறன் வழங்கப்படாது என்று தெரிவித்தார். நேட்டோ நாடுகளுடன் தங்களை இணைத்துக்கொள்வதே போருக்கு தீர்வு என்று உக்ரைன் அதிபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- அல்பேனியா, அர்ஜென்டினா, பாலஸ்தீனம், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன.
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமான செயின்ட் நிக்கோலஸ் கதீட்ரலும் தாக்கப்பட்டது
உக்ரைன் தலைநகர் கீவ் -இல் ரஷியா நேற்று [டிசம்பர் 20] பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6 தூதரகங்கள் மற்றும் ஒரு பழமையான தேவாலயம் [கதீட்ரல்] சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 12 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலை உறுதிப்படுத்திய உக்ரைன் விமானப்படை, உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் ரஷிய படைகளால் ஏவப்பட்ட 5 இஸ்கந்தர்-எம்/கேஎன்-23 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்ததாகவும், உயிரிழப்புகளைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

நகரின் மையப்பகுதி முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. கட்டிடங்களில் தீ பற்றி எரிந்ததில் மேற்கூரை மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்தன. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி உள்ளன.
தீப்பற்றிய கட்டடத்தில் அல்பேனியா, அர்ஜென்டினா, பாலஸ்தீனம், வடக்கு மாசிடோனியா, மாண்டினீக்ரோ மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. இருப்பினும் தூதரக ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உக்ரைன் தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும் இந்த தாக்குதலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமான செயின்ட் நிக்கோலஸ் கதீட்ரலும் சேதமடைந்ததாக உக்ரைனின் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் மைகோலா டோசிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எனினும் ஏவுகணை வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் ஈடுபட்ட உக்ரைனின் SBU பாதுகாப்புப் படையின் கட்டளை மையத்தை மூலம் வெற்றிகரமாகக் குறிவைத்து தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

- கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர்.
- வெடிக்கும் போர்க்கப்பலை விட அதிக தாக்கத்தை உருவாக்கி உள்வரும் ஏவுகணைகளை தாட் அழிக்கிறது.
அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்பை இஸ்ரேல் முதல் முறையாக பயன்படுத்தி உள்ளது. ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன் தினம் [வெள்ளிக்கிழமை] கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவினர்.
இதனை டெர்மினல் ஹை ஆல்டிடியூட் ஏரியா டிஃபென்ஸ் (THAAD) கட்டமைப்பைப் பயன்படுத்தி இஸ்ரேல் இடைமறித்து அழித்துள்ளது. இந்த ஏவுகணை தடுப்பு தொழில்நுட்பத்தை கடந்த அக்டோபர் மாதம் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு வழங்கியது.
இந்நிலையில் அந்த தொழில்நுட்பத்தை இஸ்ரேல் முதல் முறையாக பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், தாட் அமைப்பு இடைமறிக்கும் கருவியை ஏவுவதும், அதைத் தொடர்ந்து ஒரு அமெரிக்க வீரர், பதினெட்டு ஆண்டுகளாக நான் இதற்காகக் காத்திருக்கிறேன் என்று கூறுவதும் பதிவாகி உள்ளது.
தாட் ஏவுகணை தடுப்பு அமைப்பு
தாட் அமைப்பு பூமியின் வளிமண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டது. அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது, இந்த அமைப்பு குறுகிய, நடுத்தர மற்றும் இடைநிலை பாலிஸ்டிக் ஏவுகணைகளை அவற்றின் முனைய கட்டத்தில் இடைமறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
தாக்குதல்களை தடுக்க தாட், இயக்க ஆற்றலை நம்பியுள்ளது, அதாவது வெடிக்கும் போர்க்கப்பலை விட அதிக தாக்கத்தை உருவாக்கி உள்வரும் ஏவுகணைகளை தாட் அழிக்கிறது. ஒரு தாட் பேட்டரி, ஆறு டிரக் - லாஞ்சர்களை உள்ளடக்கியது, ஒவ்வொன்றும் எட்டு இடைமறித்து அழிக்கும் தடுப்புகளை வைத்திருக்கும்.

அதனுடன் ஒரு ரேடார் மற்றும் தீ கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். தாட் - இன் ரேடார் 870 முதல் 3,000 கிலோமீட்டர் தொலைவிலான ஏவுகணை அச்சுறுத்தல்களைக் கண்டறியும் வல்லமை உடையது.
- அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
- போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசி 30 பேர் காயமடைந்தனர்,
வட கொரியா கடலுக்குள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இன்று, தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும்.
இந்த இராணுவப் பயிற்சி இந்த இரு படைகளின் வருடாந்திர பயிற்சியின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இது தாக்குதலுக்கு முந்தைய ராணுவப் பயிற்சி என கூறி, வட கொரியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
எனவே அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இந்த ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன. வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதியில் ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டு ராணுவத் தலைவர் தெரிவித்தார்.
தென் கொரியா - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம் நடந்து வருகிறது. இந்த பயிற்சி நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த வாரம் ஒரு பயிற்சியின் போது, வட கொரிய எல்லையில் உள்ள போச்சான் பகுதியில் இரண்டு தென் கொரிய KF-16 போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசின.

இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சியும், கடலில் வடகொரியாவின் ஏவுகணை வீச்சும் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.