என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல் நலக்குறைவு"

    • வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக செயலாளாற்றினார்.
    • சோமசுந்தரம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் முன்னாள் எம்.எல்.ஏ. சித்தமல்லி ந.சோமசுந்தரம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

    இவர் 1971-ல் நடைபெற்ற தேர்தலில் அப்போது இருந்த வலங்கைமான் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    மேலும் தி.மு.க. மாவட்ட அவை தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவருக்கு சோம.நடேசமணி, சோம.செந்தமிழ்செல்வன் என்ற இரண்டு மகன்களும் மற்றும் ராணி சேகர் என்ற மகளும் உள்ளனர்.

    இதில் சோம.செந்தமிழ்செல்வன் நீடாமங்கலம் பெருந்தலை வராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வயிற்று வலியால் அவதிப்பட்டவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
    • பொள்ளாச்சி தாலுகா போலீசார் பள்ளிக்கு சென்று தீவிர விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ராஜ வீதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகன் நவீன் (வயது 8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று காலை இவர் பள்ளிக்கு சென்றார். பள்ளியில் படிக்கும் 25 மாணவர்களுக்கு காலை உணவாக உப்புமா வழங்க ப்பட்டது. இதனை நவீன் சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தார். உடனடியாக ஆசிரியர்கள் வயிற்று வலியால் அவதிப்பட்ட நவீனை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் ஆஸ்பத்திரிக்கு மற்றும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி நவீன், பொங்கல், சுண்டல் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டார். அதனால் ஏற்பட்ட உடல் உபாதையால் அவருக்கு வயிற்று வலி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    • தேவகவுடா வீட்டில் இருந்தபடியே அரசியல் பணிகளை கவனித்து வருகிறார்.
    • தேவகவுடாவுக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்து உள்ளது.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா (வயது 91) பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் இருந்தபடியே அரசியல் பணிகளை கவனித்து வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நேற்று பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அழைத்துச் சென்று பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அவருக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    தேவகவுடாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார்.
    • வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார்.

    திருநள்ளாறு:

    புதுச்சேரி பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து நெடுங்காடு சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, வேட்பாளர் நமச்சிவாயம் ஆகியோருடன் அந்த தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான சந்திரபிரியங்கா திறந்த வாகனத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது வாகனத்தில் இருந்தபடி வாக்காளர்களுக்கும், தொண்டர்களுக்கும் பறக்கும் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்தினார். பதிலுக்கு அவர்களும் முத்தங்களை பறக்கவிட அதை அவர் 'கேட்ச்' பிடித்து மகிழ்ந்தார். இது பிரசாரத்தில் கலகலப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நேற்று நெடுங்காடு தொகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று சந்திரபிரியங்கா வாக்கு சேகரித்தார். அப்போது கடும் வெயில் காரணமாக அவருக்கு திடீரென சோர்வு ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வாக்கு சேகரிப்பதை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு சென்றார். அங்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் ஆதரவாளர்கள் அவரை காரில் அழைத்துச் சென்று காரைக்காலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    வெயில் தாக்கத்தால் சந்திரபிரியங்காவுக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு உள்ளது என்றும், அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    • கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலின் அசுவ பூஜைக்காக குதிரை வளர்க்கப்படுகிறது. ராஜா என்ற பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக இங்கிருந்த குதிரைக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் இந்த குதிரை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. கடந்த 4 வருடங்களாக தில்லை நடராஜரின் இறைபணியில் ஈடுபட்ட குதிரை ராஜாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில், மருத்துவ சான்று பெற்று பக்தர்களும் தீட்சிதர்களும் மலர் அஞ்சலி செலுத்தி சடங்குகள் செய்து மயானத்தில் அடக்கம் செய்தனர். இத்தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

    • இடைத்தேர்தல் வெற்றி முகத்தை தொடர்ந்து முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து.
    • மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல துரைமுருகன் அறிவாலயம் வந்தார்.

    தமிழக அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றி முகத்தை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல துரைமுருகன் அறிவாலயம் வந்திருந்தார்.

    அப்போது, துரைமுருகனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. துரைமுருகனுக்கு ரத்த சர்க்கரை அளவு குறைபாடு ஏற்பட்டதால் அவர் மயங்கிய நிலையில், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.
    • கவியூர் பொன்னம்மாவின் மறைவு மலையாள திரையுலகிற்கு பெரும் இழப்பாகும் என்று முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    மலையாளத் திரையுலகின் பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா (80) காலமானார்.

    மலையாள நடிகர்களான மோகன்லால், நசீர் மற்றும் மம்மூட்டி உள்ளிட்ட நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துள்ளவர் கவியூர் பொன்னம்மா. இவர், 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு முறை கேரள அரசின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

    இவர் உடல்நலக் குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார்.

    அவரது மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். கவியூர் பொன்னம்மா மறைவிற்கு கேரள திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×