என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி அருகே பள்ளிக்கு சென்ற 8 வயது சிறுவனுக்கு திடீர் உடல் நலக்குறைவு- ஆஸ்பத்திரியில் அனுமதி
- வயிற்று வலியால் அவதிப்பட்டவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்
- பொள்ளாச்சி தாலுகா போலீசார் பள்ளிக்கு சென்று தீவிர விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ராஜ வீதியை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மகன் நவீன் (வயது 8). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று காலை இவர் பள்ளிக்கு சென்றார். பள்ளியில் படிக்கும் 25 மாணவர்களுக்கு காலை உணவாக உப்புமா வழங்க ப்பட்டது. இதனை நவீன் சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவித்தார். உடனடியாக ஆசிரியர்கள் வயிற்று வலியால் அவதிப்பட்ட நவீனை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த தகவல் கிடைத்ததும் பொள்ளாச்சி தாலுகா போலீசார் ஆஸ்பத்திரிக்கு மற்றும் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தியையொட்டி நவீன், பொங்கல், சுண்டல் உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டார். அதனால் ஏற்பட்ட உடல் உபாதையால் அவருக்கு வயிற்று வலி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.