என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எலிகள் தொல்லை"

    • அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி தற்போது அனைத்து வசதி களுடன் கூடிய மருத்துவ மனையாக உள்ளது.
    • மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இங்கு உள்ளனர்.இங்கே தினசரி 800-க்கு மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தி தற்போது அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவ மனையாக உள்ளது. இங்கு எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை மற்றும் பொதுநல வைத்தியம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது.

    மருத்துவத்திற்கு தனித்தனி டாக்டர்கள் இங்கு உள்ளனர்.இங்கே தினசரி 800-க்கு மேற்பட்ட நோயாளிகள், புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக திகழ்கிறது. குறிப்பாக மகப்பேறு பிரிவிற்கு கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் வந்து பரிசோதனை செய்தும், பிரசவம் பார்த்தும் செல்கின்றனர்.

    தற்போது கடந்த சில நாட்களாக மருத்துவ மனையில் தெரு நாய்கள் மற்றும் எலிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனை சுற்றி உள்ள பகுதிகளில் விற்கப்படும் பழங்கள் மற்றும் ஆஸ்பத்திரி வெளியே சாப்பிட்டு விட்டு சாக்கடையில் போடும் உணவு கழிவுகளுக்கு சாப்பிட எலிகள் வருகின்றனர். உணவு பற்றாக்குறை ஏற்படும்போது எலிகள் அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்து அங்கு வைத்திருக்கும் நோயாளிகளின் உணவுகளை பதம் பார்க்கின்றது.மேலும் அரசு மருத்துவமனை வளாகம் மரங்களால் சூழப்பட்டு இருப்பதால் தெருநாய்கள் அங்கு ஓய்வெடுக்கும் இடமாக மாறியுள்ளது நோயாளிகள் தெரிவித்தனர்.

    • நோயாளிகள் அதிர்ச்சி
    • வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது.

    இந்த ஆஸ்பத்திரிக்கு வாணியம்பாடி நகர மக்கள் மட்டுமின்றி கிராம புறங்களில் இருந்தும் நோயாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள், பச்சிளம் குழந்தைகள் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ஊசி போடும் அறை மற்றும் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகள் அனுமதிக்கபட்டுள்ள வார்டுகளில் எலிகள் சுற்றி திரிகிறது.

    மேலும் நோயாளிகளுக்கு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை தின்பது, கடிப்பது உள்ளிட்ட செயல்களால் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியையும், அறு வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் நாளுக்கு நாள் எலிகள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சைக்கு வந்த ஒருவர் இதை வீடியோவாக பதிவு செய்து அரசு ஆஸ்பத்திரியில் எலிகள் தொல்லை அதிகமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குழந்தைகள் வார்டில் நோயாளி ஒருவர் படுத்திருக்க அவருக்கு பின்னே எலிகள் ஓடி விளையாடுகிறது.
    • இந்த காட்சிகள் மருத்துவமனையின் சுகாதாரம் மற்றும் மேலாண்மை குறித்து கவலையை ஏற்படுத்தி உள்ளன.

    மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் நோயாளி வைத்திருக்கும் பொருட்கள் மீது எலிகள் துள்ளிக்குதித்து விளையாடும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் வார்டில் நோயாளி ஒருவர் படுத்திருக்க அவருக்கு பின்னே எலிகள் ஓடி ஓடி விளையாடுகிறது.

    இந்த காட்சிகள் மருத்துவமனையின் சுகாதாரம் மற்றும் மேலாண்மை குறித்து கவலையை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த வீடியோ பரவியதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் இந்த பிரச்சனையை தீர்க்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தது.

    இதுதொடர்பாக மருத்துவ அதிகாரி டாக்டர் பிரவீன் உய்கே கூறுகையில், நாங்கள் தொடர்ந்து பூச்சி கட்டுப்பாட்டை மேற்கொள்கிறோம், ஆனால் பிரச்சனை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக மூத்த மாவட்ட அதிகாரி குழந்தைகள் வார்டை நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்த அவர், உடனடியாக வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டார்.

    மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த எம்.எல்.ஏ. சம்பாதியா உய்கே, மருத்துவமனையின் அலட்சியமே இதற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். மேலும் இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரித்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மூத்த மாவட்ட அதிகாரிக்கு அவர் அறிவுறுத்தினார்.

    ×