என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor RN Ravi"

    • பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.
    • விழாவில் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    வடவள்ளி:

    கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று நடந்தது.

    விழாவுக்கு கவர்னரும், வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.

    இதில் முதன்மை விருந்தினராக, சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    இந்த விழாவில் மொத்தம் 4 ஆயிரத்து 434 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

    அதன்படி இளம் அறிவியல் பிரிவில் 1,263 பேரும், முதுநிலை பிரிவில் 225 பேர், முனைவர் படிப்பில் 48 பேர் என மொத்தம் 1,536 மாணவ, மாணவிகளும், உறுப்பு மற்றும் இணைக்கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் 2,877 பேரும், முதுநிலை பிரிவில் 13 பேரும், முனைவர் படிப்பில் 6 பேர் என மொத்தம் 2,898 பேர் என இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 434 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

    விழாவில் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், இணை வேந்தருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.

    • கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று காலை 6.50 மணிக்கு டெல்லி சென்றார். டெல்லியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இன்று டெல்லியில் தங்கி இருக்கும் அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    தமிழகத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 22-ந்தேதி தென்மாநில கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடத்த இருக்கிறார். இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவர் டெல்லியில் யாரையெல்லாம் சந்தித்து பேசுவார் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இன்று முழுவதும் டெல்லியில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மாலை சென்னை திரும்புகிறார்.

    • ஒவ்வொரு சவாலையும் அசைக்க முடியாத உறுதியுடனும் மீள்தன்மையுடனும் வென்றீர்கள்.
    • உறுதியும் துணிச்சலும் சேர்ந்தால் அவை எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றை சாதனையாக மாற்றும் என்பதை நிரூபிக்கிறது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அன்னை பூமிக்கு மீண்டும் வருக, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்! மிக கடுமையான விண்வெளி பரப்பில் மாதக்கணக்கில் நீங்கள் இருந்தது உங்களின் சகிப்புத்தன்மை, தகவமைப்பு மற்றும் மன உறுதியின் வரம்புகளை சோதித்துள்ளன.

    ஆனாலும் ஒவ்வொரு சவாலையும் அசைக்க முடியாத உறுதியுடனும் மீள்தன்மையுடனும் வென்றீர்கள். நீங்கள் அன்னை பூமிக்கு திரும்புவதென்பது தாயகத்துக்கு திரும்புவது என அழைப்பதை விட மேலதிகமானது; இது விடாமுயற்சியின் வரலாற்றுபூர்வ வெற்றியாகும், இது உறுதியும் துணிச்சலும் சேர்ந்தால் அவை எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றை சாதனையாக மாற்றும் என்பதை நிரூபிக்கிறது.

    நீங்கள் முன்னோக்கும் பயணம் புதிய எல்லைகளைத் திறந்து, எதிர்கால விண்வெளி ஆய்வாளர்களை பிரபஞ்சத்தின் எல்லையைக் கடந்து ஆய்வு மேற்கொள்ள ஊக்குவிக்கட்டும் என கூறியுள்ளார். 



    • கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    • கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

    கோவை:

    கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பாரதம் உருவானது. ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

    நவீன அறிவியல் தொழில்நுட்ப கல்வியோடு சேர்த்து பாரத பண்பாடுகளோடு கூடிய கல்வி முறை தேவைப்படுகிறது.

    தமிழகம் பல முனிவர்கள், யோகிகளை கொண்டிருந்த மண். யோகாவை உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளது. சிறந்த ஆளுமையால் இந்தியா வழி நடத்தப்பட்டு வருகிறது. யோகாவையும், இயற்கை மருத்துவத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சனாதன தர்மம் இந்த நாட்டின் அடையாளம்.

    பயங்கரவாதம் நாட்டின் பெரும் பிரச்சினையாக உள்ளது. பயங்கரவாத தாக்குதல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. பயங்கரவாதம் அனைத்திற்கும் எதிரானதாக உள்ளது.

    கோவையில் நடைபெற்ற கார் வெடிவிபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல். இது பயங்கரவாத தாக்குதல். இதில் அதிக அளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது. இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    கார் வெடிப்பு வழக்கில் தமிழக காவல்துறையின் நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனாலும் தமிழக அரசு கோவை சம்பவத்தை தாமதிக்காமல் உரிய நேரத்தில் என்.ஐ.ஏ. விசாரணைக்கு கொடுத்திருக்க வேண்டும்.

    கோவையில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னால் பெரும் திட்டங்கள் இருந்துள்ளது.

    இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் பெருவளர்ச்சியை நோக்கமாக கொண்டு செல்கிறோம். ஆனால் பயங்கரவாத தாக்குதல் வளர்ச்சியை தடுக்கும் விதமாக உள்ளது.

    பயங்கரவாதத்தை உருவாக்கக் கூடிய இடமாக கோவை உள்ளது கவலையளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே பேசத் துணிந்து விட்டார் கவர்னர்.
    • அது அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதையாவது உணர்ந்துதான் பேசுகிறாரா?

    சென்னை:

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, தி.க. தலைவர் வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கவர்னராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல், நாள்தோறும் ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட கவர்னர் பதவியில் இருந்து கொண்டு, பழமைவாத நச்சரவங்களை நாட்டில் நடமாடவிடுவது அவருக்கும் அழகல்ல. அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல.

    இந்த வரிசையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே பேசத் துணிந்து விட்டார் கவர்னர். அது அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே எதிரானது என்பதையாவது உணர்ந்துதான் பேசுகிறாரா?

    இந்தியாவை மதச்சார்பற்ற நாடு எனச் சொல்கின்றனர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல என்று பேசி இருக்கிறார் கவர்னர்.

    ஐக்கிய நாடுகள் அவை அங்கீகரித்த நாடுகள் 195 என்றால், அதில் 30 நாடுகள் மட்டும்தான் மதச்சார்புள்ள நாடுகளாகச் சொல்கிறது. அதாவது குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு நாட்டுத் தலைவர்களாக ஆகமுடியும். 29-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பும், சார்பின்மையும் கொண்ட நாடுகள். மற்றபடி 120-க்கும் மேற்பட்ட நாடுகள் மதச்சார்பற்ற நாடுகள் தான்.

    'எந்த ஒரு நாடும் ஏதாவது மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும்' என்று கவர்னர் சொல்வது உலகம் அறியாப் பேச்சாகும்.

    அதேபோல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரைக்கு எதிராக கவர்னர் பேசுவதையும், கருத்து சொல்வதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்படுகிறார்.
    • ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்துகொண்டு பேசியதாவது:-

    வருகிற 4-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகை தருவதாக இருந்ததன் அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. அன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தரும் முதல்வருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    இதனை ஏற்றுக்கொண்ட பின்னர் திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் மரக்கூழ் ஆலை இரண்டாவது அலகினை திறந்து வைக்கிறார். பின்னர் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு பெரம்பலூர் புறப்பட்டு செல்கிறார்.

    அங்கு மாலையில் இந்தி திணிப்பை எதிர்த்து நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து 5-ந்தேதி முதல்-அமைச்சர் அரியலூர் மற்றும் பெரம்பலூரில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகவும் இருந்தது.

    அதன் அடிப்படையில் தனித்தனியாக நடைபெற இருந்த கூட்டம் இன்று 3 மாவட்டச் செயலாளர்கள் இணைந்து இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் நீண்ட தூரம் பயணிக்க கூடாது என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இருப்பினும் நாளைதான் அவரது வருகை தொடர்பான முடிவு தெரியவரும்.

    தமிழக ஆளுநர் எதிர்க்கட்சியை போல் செயல்படுகிறார். இந்த ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க.வினர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். சின்ன விஷயத்தையும் பா.ஜ.க.வினர் ஊதி பெரிதாக்குகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சவால் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

    தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியில் எந்த ஒரு குறையும் கூறமுடியாத அளவுக்கு நமது முதல்வர் ஆட்சியை நடத்தி வருகிறார்.

    இப்போது அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது. நான்தான், நீதான் என்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் அ.தி.மு.க.வின் இடத்தை பிடித்து விட வேண்டும், எதிர்க்கட்சியாக வந்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. அந்த நோக்கத்தில் அவர்கள் அ.தி.மு.க.வை ஒன்று சேரவிடாமல் பார்த்து கொள்வதோடு, தடுத்தும் வருகிறார்கள்.

    நான் வெளிப்படையாக வெட்கத்தை விட்டு கூறுகிறேன். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசு அதிகாரிகள் அனைவரும் மத்திய அரசை பார்த்து பயப்படுகிறார்கள்.

    தற்போது தி.மு.க. எந்த அளவிற்கு பலமாக உள்ளதோ வருங்காலத்தில் இதோடு இன்னும் பலமாக இருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றி 40-க்கு 40 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். திருச்சி என்ன நினைக்கிறதோ, அதுதான் தமிழ்நாட்டில் நடக்கும். திருச்சி சரியாக இருந்தால் தமிழ்நாடு சரியாக இருக்கும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களை தவிர மீதமுள்ள அனைத்து இடங்களிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றிபெறும் என்று சொன்னேன். அதேபோல் மூன்று இடங்களை தவிர டெல்டாவில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வெற்றிபெற்றது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் உள்ளாட்சி அமைப்பின் பிரநிதிகள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மாபெரும் வெற்றியை தலைவருக்கு தேடித்தர வேண்டும்.

    கட்சியில் இருக்கும் நிர்வாகிகளுக்கு சில சில சங்கடங்கள் நிலை வருகிறது. அவற்றை சரிசெய்யும் வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக மனு ஒன்றை தயார் செய்து வருகிறார்கள்.
    • மனுவில் கையெழுத்திட அறிவாலயத்துக்கு வருமாறு தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

    கவர்னர் ரவியின் பேச்சுகளுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோவை கார் வெடிப்பு குறித்தும் கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

    ஏற்கனவே தமிழக அரசு அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதையடுத்து கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதற்காக மனு ஒன்றை தயார் செய்து வருகிறார்கள். அந்த மனுவில் கையெழுத்திட அறிவாலயத்துக்கு வருமாறு தி.மு.க. பொருளாளரும், தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்துள்ளார்.

    அந்த அழைப்பில் அவர் கூறி இருப்பதாவது:-

    கவர்னரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு கொடுக்கப்பட உள்ளது. தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து கொண்டுள்ள அரசியல் கட்சிகள் அந்த மனுவில் கையெழுத்திட அழைக்கிறோம்.

    3-ந்தேதிக்கு முன்பு அறிவாலயத்துக்கு வந்து அந்த மனுவை படித்து பார்த்து கையெழுத்திட கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

    • கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
    • ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் அறிவாலயம் சென்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சமீபத்தில் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

    இதன் அடுத்த கட்டமாக ஜனாதிபதியிடம் முறையிடவும் தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    இதற்காக தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

    அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளிக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    தி.மு.க. மற்றும் தி.மு.க.வுடன் ஒருமித்த கருத்து கொண்ட அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் அனைவரும் தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து ஜனாதிபதியிடம் கொடுக்க உள்ள கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதைத் தொடர்ந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆகியோர் அறிவாலயம் சென்று அந்த கடிதத்தில் கையெழுத்திட்டனர்.

    தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தொ.மு.ச. தொழிற்சங்கம் சண்முகம் எம்.பி., ஜெகத்ரட்சகன், காங்கிரஸ் எம்.பி.க்கள் விஷ்ணு பிரசாத், ஜெயக்குமார், உள்ளிட்ட எம்.பி.க்கள் நேற்று கையெழுத்திட்டனர்.

    தமிழச்சி தங்கபாண்டியன், பார்த்தீபன், கல்யாண சுந்தரம், ராமலிங்கம் உள்ளிட்ட எம்.பி.க்கள் இன்று காலையில் அறிவாலயம் சென்று கையெழுத்திட்டனர்.

    தி.மு.க. எம்.பி.க்களும் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் அந்த கடிதத்தில் தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்.

    எனவே விரைவில் ஜனாதிபதியை சந்தித்து இந்த கடிதத்தை எம்.பி.க்கள் வழங்க உள்ளனர்.

    • மேற்கு வங்க அரசை எதிர்த்த, ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவரானார்.
    • அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தது.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சிகளில் ஆற்றும் உரையின்போது புதிய கல்விக் கொள்கை, இந்துமதம், சனாதனம், திருக்குறள் ஆகியவை குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்துகளை ஆளுநர் வெளியிடுவதாக அண்மையில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுக எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளதாவது: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை தூண்டி விட்டு பாஜக சிந்தனைகளை தூண்டுவதற்கு அவர்கள் (மத்திய அரசு) முயற்சி செய்து வருகிறார்கள்.

    கேரளா, தமிழ்நாட்டில், மேற்கு வங்கத்தில் அதுதான் நடக்கிறது. அண்மையில் சென்னை வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதைத்தான் தெரிவித்தார். மேற்கு வங்க அரசை எதிர்த்ததால், அந்த மாநில ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று விட்டார்.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் கூட தமிழக அரசை எதிர்த்தால் உயர் பதவி பெறலாம் என்று எண்ணத்தில் கூட இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கலாம். எது எப்படி இருந்தாலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவது கண்டிக்கத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில் கவர்னர்கள் பேசுகின்றனர். இது மாநில உரிமைகளை மீறுவதாகும்.
    • தற்போது தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    சென்னை:

    சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. பங்கேற்றார்.

    அப்போது நிருபர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது:-

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். எங்களுக்கு அனுமதி தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில் கவர்னர்கள் பேசுகின்றனர். இது மாநில உரிமைகளை மீறுவதாகும்.

    தற்போது தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நேரத்தில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் சந்தித்து கொண்டது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விவேகானந்தர் தேசியத்தின் பார்வையில் படுவதற்கு முன்பு, அவரது கன்னியாகுமரி வருகை அமைந்துள்ளது.
    • இந்த சமூகத்திற்கு அமைதியை கொண்டு வரவேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள சபா மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜ சாம்ராஜ்ய மகோத்சவம் நிகழ்ச்சி இன்று தொடங்கியது. மேல்கோட்டை ஸ்ரீயது கிரி யதிராஜமடம் 41-வது பட்டம் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீயதுகிரியதி ராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-

    கன்னியாகுமரி ஒரு புண்ணிய பூமியாகும். பாரத மாதாவின் பாதங்கள் படிந்துள்ள பகுதியாகவும், அருளாசி நிறைந்த பகுதியாகவும் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி உள்ளது. விவேகானந்தர் தேசியத்தின் பார்வையில் படுவதற்கு முன்பு, அவரது கன்னியாகுமரி வருகை அமைந்துள்ளது.

    அதன்பிறகு அவர், அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய உரை, இந்தியாவின் தர்மம் மற்றும் அறத்தை உலகுக்கு சொல்லும் வித மாக அமைந்தது. எனது கல்லூரி நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த இருபெரும் மகான்களில் ஒருவர், ஸ்ரீராமானுஜர். மற்றொருவர் சுவாமி விவேகானந்தர். தற்போது அவர்களது அருள் நிறைந்த விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் ராமானுஜர் விழாவில் கலந்து கொண்டதை பெருமையாக உணர்கிறேன்.

    இந்த சமூகத்திற்கு அமைதியை கொண்டு வரவேண்டும் என்று ராமானுஜர் விரும்பினார். அவரது பணிகள், இந்தியாவில் ஒரு இன அருள் புரட்சியை உருவாக்கி உள்ளது. மதத்தின் திறவு கோல்களாக ராமானுஜரும், விவேகானந்தரும் இருந்தார்கள்.

    உலகத்தின் கடைசி வரை உள்ள மக்களும், இவர்களது அரும்பணியை உணர்ந்து கொண்டார்கள். விவேகானந்தர், தன்னை புதிய மனிதர் என்று அறிந்த அதே இடத்தில் இந்த நிகழ்வில் பங்கேற்கக்கூடிய வாய்ப்பை எனக்கு நல்கிய அத்தனை மகான்களையும் அவர்களது பாதங்களையும் வணங்கி மரியாதை செலுத்துகிறேன்.

    இறை நம்பிக்கை மட்டுமே தெய்வீக குடும்ப சூழலை உருவாக்கும். இந்த உரிமைகளை பாரதம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த பாரத திருநாட்டில், தீவிரவாத சமூகத்தை உருவாக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அவர்களால் வெற்றி பெற முடியாது.

    கன்னியாகுமரியில் நாளை திறக்கப்பட இருக்கும் ஸ்ரீராமானுஜர் சிலையானது, தென்கோடிக்கு அருள்பா லிக்கும் அடையாளமாக திகழும் என்று நம்புகிறேன். கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் இதுவரை, கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்த்து ரசித்து செல்கின்றனர்.அதேபோல் ஸ்ரீராமானுஜர் சிலையும் சுற்றுலா பயணிகள் தரிசித்து செல்லும் இடமாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    மாலை 6 மணிக்கு சுவாமி ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் பகவத் ராமானுஜர் நாட்டிய நாடக நிகழ்ச்சி நடக்கிறது. 2-வது நாளான நாளை (25-ந்தேதி) காலையில் ராமானுஜர் மாநாடு நடக்கிறது.

    இதையொட்டி காலை 7.30 மணிக்கு ப்ரதிஷ்டாபனஹோமம், ராமானுஜநூற்றந்தாதி பாராயணம் போன்றவை நடக்கிறது. பின்னர் காலை 9 மணிக்கு பூர்ணாஹூதி, யும்10மணிக்கு ஜீயர்சுவாமிகளால்ராமானுஜாசார்யாரு க்கு புஷ்பாஞ்சலி யும் 10.30 மணிக்கு ஜீயர் சுவாமிகளின் அருளுரையும் 11.15 மணிக்கு ஜீயர் சுவாமி களை கவுரவிக்கும்நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் 12மணிக்கு விவேகானந்தா கேந்திராவில் நிறுவப்பட்டு உள்ள ராமானுஜர் சிலை திறப்பு விழா நடக்கிறது.

    இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து யதுகிரி யதிராஜ நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகளின் அருள் உரையும் பிரசாத விநியோகமும் நடக்கிறது.

    • 25ஏக்கர் பரப்பில் அமைய உள்ள கல்வி நிறுவனத்தில் சிபிஎஸ்சி, ஐபி மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் வழங்க உள்ளது.
    • எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

    பொன்னேரி:

    கும்மிடிப்பூண்டி அருகே ஏடூரில் உள்ள டாக்டர் செரியன் மெடிவில்லா வளாகத்தில் டாக்டர் கே.எம்.செரியன் எஜுகேஷனல் சொசைட்டி மற்றும் டாக்டர் கே.எம்.செரியன் ஹார்ட் பவுன்டேஷன் சார்பில் அமைக்கப்பட உள்ள தி ஸ்டடி குளோபல் கல்வி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    இதன் நிறுவன தலைவர் டாக்டர் கே.எம்.செரியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அடிக்கல் நாட்டினார். பின்னர் மருத்துவ குணம் வாய்ந்த மரக்கன்றுகளை நட்டார்.

    தொடர்ந்து விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஏடூரில் உள்ள பிராண்டியர் மெடிவில்லே எனப்படும் மருத்துவ கிராம் நாட்டின் முதல் உயிரியல் பூங்காவாக உள்ளது. இப்படிப்பட்ட ஆராய்ச்சி அமைப்போடு ஒரு கல்வி நிறுவனம் செயல்படும் போது, மற்ற கல்வி நிறுவனங்களில் பெற முடியாத ஆராய்ச்சி அறிவுடன் கூடிய தொழில்நுட்ப கல்வியை மாணவர்கள் பெற முடியும். மேலும் நமது பாரத பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையான ஆத்ம நிர்பர் பாரதத்தை உருவாக்க இந்த கல்வி நிறுவனம் மாணவர்களை ஆராய்ச்சியாளர்களாகவும், வல்லுனர்களாகவும் உருவாக்கும். இந்த கல்வி நிறுவனம் நாட்டின் அடையாளமாக மாறும் என்றார்.

    25ஏக்கர் பரப்பில் அமைய உள்ள இந்த கல்வி நிறுவனத்தில் சிபிஎஸ்சி, ஐபி மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தில் வழங்க உள்ளது. இங்கு எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இங்கு செயற்கை நுண்ணறிவு, டிஷ்யூ என்ஜினியரிங், ரோபோடிக்ஸ், டிரோன் தொழில்நுட்பம், ஸ்டெம் செல்கள் குறித்தும் கற்றுத்தரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நிகழ்வில் மொரீசியஸ் நாட்டின் கல்வி மற்றும் கலை கலாச்சார துறை அமைச்சரும், யுனெஸ்கோவில் ஆலோசகராகவும் உள்ள ஆறுமுகம் பரசுராமன், நிறுவன துணை தலைவர்கள் டாக்டர் சந்தியா செரியன், சஞ்சய் செரியன் ஆகியோருடன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், உதவி ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், வட்டாட்சியர் கண்ணன், ஊராட்சி தலைவர்கள் எளாவூர் வள்ளி முருகேசன், ஏடூர் ரேவதி பங்கேற்றனர்.

    ×