search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்ரபதி சிவாஜி"

    • நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதே சத்ரபதி சிவாஜி உலகிற்கு கூறிய செய்தி.
    • சத்ரபதி சிவாஜி மகராஜ், ஷாஹு மகராஜ் போன்றவர்கள் இல்லை என்றால், அரசியலமைப்புச் சட்டமும் இருந்திருக்காது.

    கோலாப்பூர்:

    பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இன்று மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைத்தார்.

    இந்த விழாவுக்கு முன்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    மக்களைப் பயமுறுத்தி, அரசியலமைப்பையும், நாட்டில் உள்ள அமைப்புகளையும் அழித்த பிறகு சத்ரபதி சிவாஜி முன் தலைகுனிந்து வணங்குவதில் எந்தப் பயனும் இல்லை என்று பா.ஜனதாவை விமர்சனம் செய்தார். மேலும் அவர் கூறும்போது, நாடு அனைவருக்கும் சொந்தமானது என்பதே சத்ரபதி சிவாஜி உலகிற்கு கூறிய செய்தி. சத்ரபதி சிவாஜி மகராஜ், ஷாஹு மகராஜ் போன்றவர்கள் இல்லை என்றால், அரசியலமைப்புச் சட்டமும் இருந்திருக்காது என்றார்.

    • சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன்.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

    "சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது வெறும் பெயரோ அரசரோ இல்லை. நமக்கு அவர் தெய்வம். இன்று, நான் அவரது காலடியில் தலை வணங்குகிறேன், என் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் மதிப்புகள் வேறுபட்டவை. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை."

    "சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், ஆனால் அவரை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க அவர்கள் தயாராக இல்லை. நான் இங்கு இறங்கியதும், சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன், இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."

    "கடந்த பத்து ஆண்டுகளில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். மகாராஷ்டிரா திறன் மூலம் கிடைக்கும் பலன்களை இந்த மாநிலமும், முழு நாடும் பெறுவதை உறுதிசெய்வதற்காகவே வத்வான் துறைமுகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது," என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது.
    • ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள்கூட தப்பவில்லை.

    மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார்.

    கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சத்ரபதி சிவாஜி சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது.

    சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளது

    அந்த பதிவில், "பாஜக ஆட்சியில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது. பிரதமர் மோடி திறந்துவைத்த சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்துள்ளது. ஊழலில் பெரிய மனிதர்களின் சிலைகள்கூட தப்பவில்லை" என்று பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், சிவாஜி சிலையை மோடி திறந்து வைத்தது மற்றும் சிலை உடைந்து விழுந்தது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ளது.

    • சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்தது.
    • தேசிய கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி சிலை திறந்து வைக்கப்பட்டது.

    மஹாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த நிலையில், 35 உயரமுள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை பலத்து காற்று வீசியதில் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது.

    கடந்த மூன்று நாட்களாக சிந்துதுர்க்கில் கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசி வரும் நிலையில், இன்று மதியம் 1 மணி அளவில் 35 அடி உயரமுள்ள சிலை முழுமையாக உடைந்து தலை, கை, கால்கள் என ஒவ்வொரு பாகமும் தரையில் வீழுந்தது.

     


    சத்ரபதி சிவாஜி சிலை சேதமுற்று கீழே விழுந்த நிலையில், கள சூழல் குறித்து ஆய்வு செய்வதற்காக காவல் துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சேதம் பற்றிய ஆய்வுகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.



    கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி தேசிய கடற்படை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜியின் சிலையை திறந்து வைத்தார். மேலும், அங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தார்.


    • சத்ரபதி சிவாஜி மகாராஜின் 394-வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • சிவாஜி சிலைக்கு இன்று காலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மகாராஷ்டிரா மாநில புகழ்பெற்ற போர் வீரரும் மாமன்னருமான சத்ரபதி சிவாஜி மகாராஜ் 1630-ம் ஆண்டு புனே மாவட்டம் ஜுன்னார் தாலுகாவில் உள்ள சிவனேரியில் பிறந்தார்.

    மறைந்த சத்ரபதி சிவாஜி மகாராஜின் 394-வது பிறந்த நாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செம்பூரில் உள்ள சிவாஜி சிலைக்கு இன்று காலையில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதைத் தொடர்ந்து சிவனேரி கோட்டைக்கு சென்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அஞ்சலி செலுத்தினார். அங்கு நடந்த தொட்டில் விழாவில் துணை முதல்வர்கள் அஜித் பவார், பட்னாவிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சிவாஜிக்கு மரியாதை செலுத்தினார்கள்.

    சிவாஜி மகாராஜின் பிறந்தநாளையொட்டி துணை முதல்வர் பட்னாவிஸ் 'எக்ஸ்' இணைய தளத்தில் "வெற்றிகரமான, புகழ்பெற்ற, சக்திவாய்ந்த, திறமையான, நல்லொழுக்கமுள்ள, அறிவுள்ள அரசன் வீர சிவாஜி. அவருக்கு இன்று புகழ் அஞ்சலி, மரியாதை செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

    ×