search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயங்க் யாதவ்"

    • ஐ.பி.எல். தொடரில் 156.7 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஈர்த்தார்.
    • சர்வதேச போட்டியில் அறிமுகமாகி முதல் ஓவரை மெய்டனாக வீசினார்.

    இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் மயங்க் யாதவ் இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் 156.7 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் வியக்க வைத்தவர். காயம் காரணமாக தொடர்ந்து அவரால் ஐ.பி.எல். தொடரில் விளையாட முடியவில்லை.

    காயம் சரியான நிலையில், தற்போது 4 மாதம் கழித்து நேரடியாக வங்கதேசம் தொடரில் அறிமுகம் ஆனார். முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    இந்திய அணியில் அறிமுகம் ஆனது, தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கூறியது என்ன என்பது குறித்து அவர் விவரித்துள்ளார்.

    இது தொடர்பாக மயங்க் யாதவ் கூறியதாவது:-

    இந்திய அணியில் அறிமுகம் ஆனது தொடர்பாக நான் உண்மையிலேயே உற்சாகமாக இருந்தேன். ஆனால் சற்று பதட்டம் இருந்தது. காயத்திற்குப் பிறகு நான் திரும்பிய தொடர் இதுவாகும். நான் போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. பின்னர் நேரடியாக இந்திய அணியில் அறிமுகம் ஆனேன். இதனால் கொஞ்சம் பதட்டம் இருந்தது.

    காயத்தில் இருந்து மீண்டும் வருவதற்கான காலம் மிகவும் கடினமாக இருந்தது. கடந்த 4 மாதங்களில் ஏராளமான ஏற்றம் மற்றும் இறக்கம் இருந்தது. ஆனால், என்னைவிட, என்னோடு பணியாற்றியவர்களுக்கு கடினமான காலகமாக இருந்தது.

    இன்று (போட்டி நடைபெற்ற நேற்று) நான் என்னுடைய உடலில் கவனம் செலுத்தினேர். மேலும், வேகமாக பந்து வீசுவதை விட சரியான (துல்லியமான) லெந்தில் பந்து வீச தீர்மானித்தேன். என்னுடைய வேகம் குறித்து சிந்திக்கவில்லை. முடிந்த அளவு ரன் செல்வதை தடுத்து, சரியான லைன், லெந்தில் பந்து வீச முயற்சி செய்தேன்.

    தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தன்னிடம் கூடுதலாக எதையும் பற்றி சிந்திக்க வேண்டாம். உங்களுடைய அடிப்படையான விசயத்தில் உறுதியாக இருந்து அதை செய்யவும் என்றார். கடந்த காலத்தில் எனக்கு நேர்மறையான முடிவு தந்ததை செய்யவும் என்றார். வித்தியாசமான விசயத்தை யோசிக்க முயற்சிக்க வேண்டாம். இது சர்வதேச போட்டி என்று கூட நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றார். இதை பின்பற்றுவது மிகவும் முக்கியமானது.

    இவ்வாறு மயங்க் யாதவ் தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
    • வங்கதேச அணி 19.5 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2 - 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றதை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

    முதல் டி20 ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இப்போட்டியின் மூலம் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகினர்.

    இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த வங்கதேச அணி 19.5 ஓவர்கள் முடிவில் 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சாண்டோ 27 ரன்களும் மெஹதி ஹசன் 35 ரன்களும் அடித்தனர்.

    இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டும் மயங்க் யாதவ், ஹர்திக் பாண்டியா, வாஷிங்க்டன் சுந்தர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை மயங்க் யாதவ் கைப்பற்றியுள்ளார். வங்கதேச வீரர் மஹ்மதுல்லா விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.

    சர்வதேச போட்டியில் அறிமுகமான மயங்க் யாதவ் முதல் ஓவரை மெய்டனாக வீசி அசத்தினார். அஜித் அகர்கர் (2006), அர்ஷ்தீப் சிங்கிற்கு (2022) பிறகு சர்வதேச டி20 அறிமுகத்தில் முதல் ஓவரை மெய்டனாக வீசிய 3வது இந்திய பவுலராக மயங்க் யாதவ் மாறினார்

    • டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளார்கள்.

    வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2 - 0 (2) என்ற கணக்கில் இந்தியா வென்றதை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

    முதல் டி20 ஆட்டம் மத்தியபிரேச மாநிலம் குவாலியரில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியின் ஓபனிங் பேட்டர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளார்கள்.

    இப்போட்டியின் மூலம் நிதிஷ் குமார் ரெட்டி, மயங்க் யாதவ் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகின்றனர்.

    • வங்கதேசத்துக்கு எதிரான, T20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
    • 3 வருடங்களுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வு

    இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மட்டும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

    சென்னையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான, T20 போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (WK) , ரிங்கு சிங் ,ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ,நிதிஷ் குமார் ரெட்டி ,சிவம் துபே ,வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய் , அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

    சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், அக்சர் படேல் மற்றும் ரிஷப் பண்ட ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

    சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பர்-பேட்டராகவும் ஜிதேஷ் சர்மா பேக்கப் கீப்பராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    3 வருடங்களுக்கு பிறகு தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்திய டி20 அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி 150 கிமீ வேகத்தில் பந்து வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மயங்க் யாதவ் முதன்முறையாக இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.

    • லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.
    • ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம்.

    ஐ.பி.எல். 2024 தொடரில் லக்னோ அணிக்காக களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ். இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் தனது அபாரமான பந்துவீச்சு காரணமாக பிரபலமாகியுள்ளார்.

    இந்த நிலையில் காயம் காரணமாக மயங்க் யாதவ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் களமிறங்க மாட்டார் என்று லக்னோ அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருவார காலம் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் மயங்க் யாதவ் லக்னோ அணி விளையாட உள்ள அடுத்த போட்டியில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் லக்னோ அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். 

    • மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும்.
    • 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் சிறப்பாக பந்து வீசி ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்று அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவருடைய திறனை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியா தன்னுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டதாக அவரை பிரட் லீ, டேல் ஸ்டெயின் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்காக எதிரான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள 2024 - 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மயங்க் யாதவை எதிர்கொள்ள காத்திருப்பதாக ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும். அவரை எதிர்கொள்வதற்காக நான் காத்திருக்கிறேன். 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    நான் இதுவரை பார்த்ததில் மயங்க் யாதவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஏனெனில் அவர் நல்ல ஏரியாக்களில் பந்தை வீசுகிறார். அவரைப் போன்ற இளம் வீரர்கள் ஷார்ட் லைனில் நல்ல வேகத்தில் வீசுகின்றனர். எனவே அவர்கள் இன்னும் கொஞ்சம் தெளிந்தால் நீண்ட தூரம் பயணம் செல்ல முடியும்.

    மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளுக்கு எதிராக நீங்கள் உண்மையில் ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய அறிமுகப் போட்டியில் அசத்திய பின் அப்படியே பின்தங்கி விடுவார்கள். ஆனால் இவர் அங்கிருந்து மீண்டும் வந்து கிளன் மேக்ஸ்வெல் போன்ற சிறந்த டி20 பேட்ஸ்மேனை அவுட்டாக்கினார்.

    மேலும் கேமரூன் கிரீன், ரஜத் படிதார் போன்ற வேகத்தை திறம்பட எதிர்கொள்ளும் வீரர்களையும் அவர் அவுட்டாக்கினார்.

    இவ்வாறு ஸ்மித் கூறினார்.

    • மயங்க் யாதவ் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளரான அவர் 155.8 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார்.

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணி வீரர் மயங்க் யாதவ் மற்றும் விராட் கோலி மோதுவதை பார்க்க ஆவலாக உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.

    மயங்க் யாதவ் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான அவர் 155.8 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார். பந்து வீச்சில் அசத்தி வரும் மயங்க் அகர்வாலும் பேட்டிங்கில் கிங்காக இருக்கும் விராட் கோலியும் மோதுவதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக இருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

    ×