search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஞ்சள் எச்சரிக்கை"

    • வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என அறிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    தமிழகம் மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் 10-ந் தேதி வரை கடுமையான வெப்ப நிலை இருக்கும் என தெரிவித்துள்ளது.

    கொல்லம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியசும், திருச்சூர், கண்ணூர் மாவட்டங்களில் 38 டிகிரி செல்சியசும் வெப்பநிலை இருக்கும் என அறிவித்துள்ளது.

    இதேபோல் ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 37 டிகிரி செல்சியசும், திருவனந்தபுரம், மலப்புரம் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக வருகிற 10-ந் தேதி வரை மலைப்பாங்கான பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் வெப்பமான நிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    ×