என் மலர்
நீங்கள் தேடியது "சுக்கர பகவான்"
- மூலவராக அக்னீஸ்வரரும், தாயாராக கற்பகாம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
- தல விருட்சமாக புரச மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரிக்கு வடக்கே கும்பகோணத்தில் இருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது.
தேவாரம், பெரிய புராணம் பாடல் பெற்ற ஸ்தலங்களில் இது 36வது ஸ்தலமாகும்.
இந்த கோவில் மதுரை ஆதீனத்திற்கு உட்பட்டதாக திகழ்கிறது.
இது நவக்கிரக ஸ்தலங்களில் சுக்கிரனுடைய ஸ்தலமாக போற்றப்படுகிறது.
மூலவராக அக்னீஸ்வரரும், தாயாராக கற்பகாம்பிகையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.
தல விருட்சமாக புரச மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தமும் உள்ளது.
இத்தலம் நம்மை நாளும் ஆளும் நவக்கிரகங்களில் ஒன்றான சுக்ரனுக்குரிய பரிகாரத் தலமாககும்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற திருக்கஞ்சனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள தல மூலவரான அக்னீஸ்வர சுவாமி கிழக்கு நோக்கிய சந்நிதியில் சுயம்பு மூர்த்தியாக உயர்ந்த பாணத்துடன் சுக்ர பகவானாக லிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார் என்பது ஐதீகம்.
பிரம்ம தேவருக்கு திருமணக்கோலம் காட்டி அருளியதால், இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் தனி சன்னதியில் அன்னை கற்பகாம்பாள் காட்சி அளிக்கிறார்.
- அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம்.
- கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம். மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம்.
சிவபெருமான் பராசர முனிவருக்கு முக்தி தாண்டவம் ஆடி நீங்கியருளியத் தலம்.
பிரம்மனுக்கு திருமண காட்சி தந்தத்தலம்.
அக்னிக்கு உண்டான சோகை நோயை தீர்த்த தலம், சந்திரனின் சாபம் நீங்கியத் தலமாகவும் உள்ளது.
அது மட்டுமின்றி கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீக்கிய தலம்.
கலிக்காமருக்கு திருமணம் நடந்தத் தலம்.
மானக்கஞ்சாரர் அவதரித்து வழிபட்டத் தலம்.
மேலும் பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்தர் அவதார தலம்.
வடக்கு நோக்கி ஓடும் காவிரிக் கரையில் அமைந்த தலம்
என பல புராண வரலாறுகளை தன்னகத்தே கொண்டது.
- நவக்கிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.
- பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார்.
நவக்கிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.
பார்க்கவன் காசி நகரம் சென்று சிவலிங்க பிரதிஷ்டை செய்து பன்னெடுங்காலம் கடுந்தவம் செய்தார்.
அதனால் மனம் மகிழ்ந்த ஈசன், பார்க்கவன் விரும்பியவாறே இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அமிர்த சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார்.
அசுரர்கள் இதனையறிந்து சுக்கிரனை தங்களது குல குருவாக கொண்டனர்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் ஏற்பட்ட போர்களில் இறந்த அசுரர்கள், சுக்கிராச் சாரியாரின் அமிர்த சஞ்சீவி மந்திரத்தால் உயிர்பெற்று எழுந்தனர்.
இந்நிலையில் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.
தேவர்கள் அனைவரும் சென்று சிவ பெருமானிடம் முறையிட்டனர்.
தான் கொடுத்த வர பலத்தை தவறான வழியில் பயன்படுத்தும் அசுர குருவாகிய சுக்கிரனை சிவபெருமான் விழுங்கி விட்டார்.
பலகாலம் சிவனின் வயிற்றில் இருந்து, பின்பு அமரர்களின் வேண்டுகோளின்படி சுக்கில வழியாக வெளியே வரச் செய்ததனால் சுக்கிரன் என்றும்,
தூய வெண்மையாக வந்ததனால் வெள்ளி என்றும் பெயர் ஏற்பட்டது. அதனால் யாவராலும் வணங்கப்படும் கிரக பதவி கிட்டியது.
- கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார்.
- தேவர்களுக்கு திருமால் மோகினி உருவம் கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தந்தருளினார்.
நவக்கிரக தலங்களில் 8 தலங்களில் அந்தந்த கிரக தேவதைகள் தனித்தனியாக எழுந்தருளி உள்ளார்கள்.
ஆனால் கஞ்சனூரில் மட்டும் சிவபெருமானே லிங்க வடிவில் சுக்கிரனாக காட்சி தருகிறார்.
அதன் விளக்கம் அறிவோமா?
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் அருந்த எண்ணிய தேவர்கள் மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும் கொண்டு பாற் கடலைக் கடையத் தொடங்கினர்.
அப்போது இறுக்கம் தாங்காமல் வாசுகியானது தன்னை அறியாமல் விஷத்தை உமிழ்ந்தது.
பாம்பின் கொடிய விஷத்தின் உஷ்ணத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவர்கள் பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களை இழுக்க சொல்லி, வால் பாகத்தை தாங்கள் பிடித்துக் கொண்டு கடையத் துவங்கினர்.
நீண்ட முயற்சிக்கு பின் அமுதம் வெளியே வந்தது .
இதனை கண்டு மனம் மகிழ்ந்த தேவர்களுக்கு திருமால் மோகினி உருவம் கொண்டு அசுரர்களை ஏமாற்றி அமுதத்தைத் தேவர்களுக்கு தந்தருளினார்.
இதனால் கோபமுற்ற அசுர குரு சுக்ராச்சார்யர் தேவர்களை நோக்கி "வேதங்களையும், தர்ம சாஸ்திரங்களையும் உணர்ந்த நீங்கள் உழைப்பில் பங்கு கொண்ட அசுரர்களுக்கு அதன் பலனில் பங்களிக்காமல் துரோகம் செய்துவிட்டீர்கள்!
அமுதம் உண்டதால் இறவாத்தன்மை பெற்ற நீங்கள் மனைவி, மக்கள், நாடு, நகரம் அனைத்தும் இழந்து தேவலோகத்தை விட்டு பூலோகம் சென்று அல்லல்படுவீர்களாக" என சாபமிட்டார்.
- வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.
- தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.
சுக்ரபகவானின் சாபத்தால் துயரமுற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் சென்று சுக்ர சாபத்திலிருந்து விடுபட விண்ணப்பம் செய்தனர்.
வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.
தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.
அதற்கு சுக்ராச்சார்யர், இதற்கு ஒரு பரிகாரம் இருப்பதாகவும், காவிரி நதியின் வடகரையில் தங்கள் தந்தையார் பராசர முனிவரால் பூஜிக்கப்பட்ட பலாசவனம் என்னும் கம்ஸ புர க்ஷேத்திரத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருக்கும் கற்பகாம்பிகா சமேத ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமியை வழிபாடு செய்துவர சுக்ர சாபத்திலிருந்து விமோசனம் பெறலாம் என்று கூறினார்.
தேவர்களும் அவ்வாறே (இன்றைய கஞ்சனூர்) கம்சபுரத்தை அடைந்து சிவத்தை நோக்கி தவத்தைச் மேற்கொண்டு வழிபட்டு வந்ததால் பரம கருணா மூர்த்தியான சர்வேஸ்வரன் தம்பதி சமேதராக சுக்கிரனின் ராசிகளான ரிஷப ராசியில் சூரியனும் துலா ராசியில் சந்திரனும் இருக்கும் வைகாசி விசாக பெருநாளில் காட்சி தந்து சாப விமோசனம் அளித்தார்.
ஆகையால் தான் கஞ்சனூரில் மட்டும் சுக்கிர பகவான் இருக்க வேண்டிய இடத்தில் எம்பெருமான் அக்னீஸ்வரராக எழுந்தருள்கிறார் என்கிறது தல வரலாறு.
வியாச முனிவர் தேவர்களை தம்முடன் சுக்ராச்சார்யர் இருக்குமிடத்திற்கு அழைத்து சென்றார்.
தேவர்களின் பிழையை பொறுத்து சாப விமோசனம் அளிக்குமாறு சுக்ர பகவானிடம் வேண்டினார்.
- அங்கு ஒரு மரத்தடியில் சத்தியசீலை என்ற பெண், தனது வேதிய கணவருடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.
- அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய மன்னன் அவளிடம் தவறாக நடக்க முயன்றான்.
திருகஞ்சனூர் கோவிலில் கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி சன்னதிக்கு பின்புறம் வெளிச்சுற்றில் தழைத்து நிற்கிறது தல விருட்சமான பலாச மரம்.
புரசமரம் என்னும் இந்த மரத்தில் கோடை காலத்தில் சிவப்பு நிற மலர்கள் பூத்துக் குலுங்கும்.
இந்த மரம் 'எரிதழல்' என்று இலக்கியங்களிலும், காட்டுத்தீ பூ என்றும் குறிப் பிடப்படுகிறது.
தினந்தோறும் 11 முறை ஒரு மண்டல காலத்திற்கு இந்த மரத்தைச் சுற்றி வந்து இறைவனை வழிபட்டால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மதுராபுரியை ஆண்டு வந்த கம்சராஜன், பலஷேத் திரங்களை தரிசித்து விட்டு கேடரம் என்ற ஊருக்கு வந்தான்.
அங்கு ஒரு மரத்தடியில் சத்தியசீலை என்ற பெண், தனது வேதிய கணவருடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய மன்னன் அவளிடம் தவறாக நடக்க முயன்றான்.
அப்போது வேதியர் கொடுத்த சாபத்தால், அவன் பால்வினை நோயால் பாதிக் கப்பட்டான்.
எவ்வளவோ மருத்துவம் செய்தும், பல தீர்த்தங்களில் நீராடியும், பரிகாரங்கள் செய்தும் நோய் நீங்காமல் துன்பப்பட்டான்.
பின்னர், தனது குலகுருவான சுக்ராச்சாரியாரின் உபதேசப்படி பலாசவனமான (கஞ்சனூர்) இத் தலத்தை அடைந்து காவிரியில் நீராடி காலையும், மாலையும் அக்னீஸ்வரரை வழிபட்டு பலாச மரத்தையும் மும்முறை வலம் வந்தான்.
ஒரு மண்டலத்துக்குப் பின் அவனது நோய் குணமடைந்தது. பிரதிபலனாக இந்த ஆலயத்தைக் கட்டினான் என்பது வரலாறு.
- மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.
- எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர்.
விஷ்ணு பகவானின் வாமன அவதார காவியத்தில் மகாபலியை காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.
நவக்கிர கங்களில் சுக்கிரன் ஆறாவது கிரகம் ஆவார்.
இவர் பிரம்ம தேவரின் மானஸ புத்திரராகிய பிருகு முனிவருக்கும், பிலோமிசைக்கும் மகனாக பிறந்தார்.
ஆதலால் இவருக்கு பார்க்கவன் என்ற பெயரும் 'கவி' என்ற மற்றொரு பெயரும் உண்டு.
சுக்கிரன் மிகச்சிறந்த சிவபக்தர் ஆவார்.
சிவபெருமான் அருளால் இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் 'அமிர்த சஞ்சீவி' மந்திரத்தை கற்றவர்.
இவர் வெள்ளை நிறம் கொண்டவர். வெண் தாமரையுடன் கருட வாகனத்தில் வீற்றிருப்பார்.
முதலை வாகனமும் உண்டு. இவர் அசுரர்களுக்கெல்லாம் குரு என்பதால் சுக்கிராச்சாரியார் என அழைக்கப்பட்டார்.
ரிஷப, துலா ராசிக்கு அதிபதியான இவர் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்திற்கு உரியவர்.
சுக்கிர திசை 20 ஆண்டுகள் நடக்கும். ஒரு ராசியில் சஞ்சரிக்க இவருக்கு ஒரு மாத காலம் ஆகும்.
சுக்கிரனுக்கு நண்பர்கள் புதனும் சனியும். எதிரி சூரியனும் சந்திரனும்.
சமமானவர்கள் செவ்வாயும் குருவும்.
மகாபலியைக் காப்பாற்ற தன் கண்ணையே இழந்தவர் சுக்ராச்சாரியார்.
எந்தக் கஷ்டம் வந்தாலும் தன்னை நம்பி வந்தவரைக் காப்பாற்ற வேண்டுமென்ற குணம் கொண்டவர்.
ஒரு முறை சுக்கிராச்சாரி யாரால் விஷ்ணுவுக்கு சுக்ர தோஷம் ஏற்பட்டது.
இத் தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இங்குள்ள சிவனை வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார் என்கிறது புராணம்.
- அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர்.
- வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது.
முன்னொரு காலத்தில் கஞ்சனூரில் சுக்கிரன் ஸ்தலத்தில் வைணவரான வாசுதேவருக்கு ஓர் குழந்தை பிறந்தது.
அவர் நாராயணனே தனக்கு குழந்தையாக பிறந்ததாக கருதி குழந்தைக்கு சுதர்சனர் என பெயரிட்டனர்.
வைணவக் குடும்பத்தில் பிறந்தாலும் அக்குழந்தை சிவபக்தியில் சிறந்து விளங்கியது.
சிறு வயதிலேயே சிவனின் மேல் ஈடுபாடு கொண்டு சிவ பக்தர்களோடே இருந்தது.
வீட்டில் தாய் இட்ட நாமத்தையும் சூரனத்தையும் அழித்து விபூதி ருத்ராட்சம் அணிவதையே விரும்பியது.
எப்போதும் சிவன் கோவிலிலேயே இருந்தது. விளையாடும் இடமே சிவன் கோவில் என தினமும் கோவிலிலேயே விளையாடியது.
சுதர்சனிடம் அவரது தந்தை எவ்வளவோ எடுத்து கூறியும் விபூதியும் ருத்ராட்சமுமே பிடித்ததாய் இருந்தது.
- நாமத்தையும் சூரனத்தையும் இட வேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை.
- மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை.
பூணூல் கல்யாணம் செய்வித்து நாம் வணங்க வேண்டிய தெய்வம் ஸ்ரீமகா விஷ்ணு.
நாமத்தையும் சூரனத்தையும் இட வேண்டும் என கறாராக சுதர்சனனின் தந்தை சொல்லியும் கேட்கவில்லை.
மாலை நேரத்தில் வீடு திரும்பிய மகனை தூணில் கட்டி வைத்து அடித்தார், பயன் இல்லை.
மாறாக சிவன் கோவிலுக்கே போனார்.
தன் பேச்சை கேட்காத வரை இனி வீட்டில் இடமில்லை, உணவளிக்க கூடாதென்று சொல்லி வீட்டை விட்டு குழந்தையான சுதர்சனரை வெளியே அனுப்புகிறார்.
நேராக அக்னீஸ்வரர் ஆலயம் சென்று, அக்னீஸ்வரரையும், கற்பகாம்பிகையையும் வலம் வந்து துதித்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு எதிரே தியானத்தில் அமர்ந்தான் சுதர்சன்.
- குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான்.
- சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான்.
சிவபெருமானை துதித்தான். தன் மீது கருணை காட்டி அருள்புரிய வேண்டினான்.
இறுதியில் சோர்ந்து விழுந்து விட்டான். பார்வதி தேவியுடன் ரிஷபாரூடராய் சிவபெருமான் காட்சியளித்தார்
சிவபெருமான் சுதர்சனரிடம் "அப்பா, உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்று சொன்னார்.
குழந்தையும் பகவானுடைய திருவடிகளை விட்டு பிரியாத வரம் கேட்டான்.
சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருளினார் பெருமான்.
அவனுக்கு எல்லா கலைகளும் வருமாறு வரமருளினார்.
பின்னர் அவனை கருணையினால் நோக்கி, நீ உனது உடல் பொருள், ஆவி மூன்றையும் ஹரனாகிய எனக்குத் தத்தம் செய்து விட்டபடியால் உனக்கு ஹரதத்தன் என்ற தீட்சா நாமம் தந்தோம்.
உனக்கு எல்லாக் கலைகளையும் யாமே உபதேசிப்போம் என்று அருளினார்.
- வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார்.
- தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார்.
தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, குழந்தைக்குத் தனது மலர்க்கையால் விபூதியிட்டு, ருத்ராட்ச மாலையணிவித்து பஞ்சாட்சர உபதேசம் செய்து, ஸ்படிக லிங்கம் கொடுத்து (ஹரதத்தர் பூஜித்த சிவ லிங்கம் தனியாக கஞ்சனூரிலே பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது) சிவ பூஜா வித்யையும் தாமே உபதேசித்தார்.
வீட்டிற்கு நள்ளிரவில் சுதர்சன் திரும்பினார்.
தன் தாயிடம் நடந்ததை சொன்னார். அவரது தந்தை வீட்டுக்குள் விடமுடியாது என்றார்.
தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் முற்றியது, பொழுதும் விடிந்தது.
அந்த ஊரில் இருந்த வைணவர்கள் ஒன்று கூடி, இதனை நாங்கள் ஏற்கமாட்டோம்.
இவ்வூரிலுள்ள வரத ராஜப்பெருமாள் கோவிலில் அக்னி வளர்த்து அதற்கு மேல் பழுக்கக் காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்தபடி இவன், சிவனே பரம்பொருள் என்று நிரூபிக்க வேண்டும்.
முடியாது போனால் தீக்கு இரையாக வேண்டும் என்றார்கள்.
- இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோவிலிலும் உள்ளது.
- பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.
ஹரதத்தரும் அக்னீசுவரரை வழிபட்டு பெருமாள் கோவிலுக்குச் சென்று தீக்குழியின் மீது அமைக்கப்பட்ட காய்ச்சிய முக்காலியில் அமர்ந்து, வேத புராணங்கள் சிவனே பரம்பொருள் என்று கூறியுள்ளபடியால் இந்த முக்காலி அடியேனுக்குக் குளிரட்டும் என்று கூறி, சிவ பரத்துவ சுலோகங்களையும், இருபத்திரண்டு நிரூபணங்கள் அடங்கிய பஞ்ச ரத்ன சுலோகங்களையும் கூறி அருளியவுடன் முக்காலி குளிர்ந்தது.
தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். அனைவரும் ஹரதத்தரிடம் தம்மை மன்னிக்க வேண்டினர்.
ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் உள்ளது.
இம்மூர்த்தியே சுதர்சனரை ஆட்கொண்டு சுதர்சனருக்கு ஹரதத்தர் என்ற பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர்.
இக்காட்சியைச் சித்தரிக்கும் உருவம் இவ்வூர்ப் பெருமாள் கோவிலிலும் உள்ளது.
பெருமாள் கோவிலிலும் அக்னீஸ்வரர் கற்பகாம்பாள் எழுந்தருளியுள்ளனர்.
நவக்கிரகங்களில் முக்கிய சுபகிரகமாக விளங்கும் சுக்கிரன், பார்க்கவன் என்று அழைக்கப்படுகிறார்.