search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பாவங்களை தீர்க்கும் தல விருட்சம் பலாச மரம்-கம்சராஜன் கதை வரலாறு
    X

    பாவங்களை தீர்க்கும் தல விருட்சம் பலாச மரம்-கம்சராஜன் கதை வரலாறு

    • அங்கு ஒரு மரத்தடியில் சத்தியசீலை என்ற பெண், தனது வேதிய கணவருடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.
    • அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய மன்னன் அவளிடம் தவறாக நடக்க முயன்றான்.

    திருகஞ்சனூர் கோவிலில் கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ அக்னீஸ்வர சுவாமி சன்னதிக்கு பின்புறம் வெளிச்சுற்றில் தழைத்து நிற்கிறது தல விருட்சமான பலாச மரம்.

    புரசமரம் என்னும் இந்த மரத்தில் கோடை காலத்தில் சிவப்பு நிற மலர்கள் பூத்துக் குலுங்கும்.

    இந்த மரம் 'எரிதழல்' என்று இலக்கியங்களிலும், காட்டுத்தீ பூ என்றும் குறிப் பிடப்படுகிறது.

    தினந்தோறும் 11 முறை ஒரு மண்டல காலத்திற்கு இந்த மரத்தைச் சுற்றி வந்து இறைவனை வழிபட்டால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    மதுராபுரியை ஆண்டு வந்த கம்சராஜன், பலஷேத் திரங்களை தரிசித்து விட்டு கேடரம் என்ற ஊருக்கு வந்தான்.

    அங்கு ஒரு மரத்தடியில் சத்தியசீலை என்ற பெண், தனது வேதிய கணவருடன் உறங்கிக் கொண்டிருந்தாள்.

    அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய மன்னன் அவளிடம் தவறாக நடக்க முயன்றான்.

    அப்போது வேதியர் கொடுத்த சாபத்தால், அவன் பால்வினை நோயால் பாதிக் கப்பட்டான்.

    எவ்வளவோ மருத்துவம் செய்தும், பல தீர்த்தங்களில் நீராடியும், பரிகாரங்கள் செய்தும் நோய் நீங்காமல் துன்பப்பட்டான்.

    பின்னர், தனது குலகுருவான சுக்ராச்சாரியாரின் உபதேசப்படி பலாசவனமான (கஞ்சனூர்) இத் தலத்தை அடைந்து காவிரியில் நீராடி காலையும், மாலையும் அக்னீஸ்வரரை வழிபட்டு பலாச மரத்தையும் மும்முறை வலம் வந்தான்.

    ஒரு மண்டலத்துக்குப் பின் அவனது நோய் குணமடைந்தது. பிரதிபலனாக இந்த ஆலயத்தைக் கட்டினான் என்பது வரலாறு.

    Next Story
    ×