என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்ஸோ"

    • சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன.
    • இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும்

    மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் உள்ள லான்வா டிடி பிளாக் நிவாரண முகாமுக்குள் 9 வயது சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை 6:30 மணியளவில் காணாமல் போனாள். நேற்று நள்ளிரவு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.

    சிறுமி காணாமல் போனதும், அவளது பெற்றோரும், முகாமில் வசிப்பவர்களும் தீவிர தேடுதலைத் தொடங்கினர். தொடர்ந்து நிவாரண முகாமின் வளாகத்திற்குள் காயங்களுடன் கிடந்த சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் கழுத்து மற்றும் உடலின் பிற பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் சிறுமி பாலியல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போக்ஸோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    2023 முதல் மணிப்பூரில் இரண்டு சமூகளுக்கிடையே நடந்து வரும் கலவரத்தில் 250 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த வருட இறுதியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கலவரம் தீவிரமடைந்தது.  கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

    சிறுமியின் மரணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் பைரன் சிங், இந்த முட்டாள்தனமான செயல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு மிகப்பெரிய குற்றமாகும், மேலும் குற்றவாளிகள் தாமதமின்றி நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நான் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

    • மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
    • பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்

    ராஜஸ்தானில் போக்ஸோ வழக்கில் போலீஸ் கஸ்டடியில் இருந்த நபர் தனது பிறப்பு உறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 35 வயதான அப்துல் வாசித் என்னும் மாற்றுத் திறனாளி நபரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு, தான் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் இருந்த அப்துல் வாசித், காவல் நிலைய கழிவறைக்குச் சென்று தனது பையில் வைத்திருத்த கூர்மையான பொருளை வைத்து தனது பிறப்பு உறுப்பை அறுத்துத் துண்டித்துக் கொண்டுள்ளார்.

    போலீஸ் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் அவர் உயிர்பிழைத்தார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளான பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து அந்த தரவுகளின் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • இந்த பாலியல் உறவினால் அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது
    • நீதிபதியின் இந்த முடிவு தவறான உதாரணமாக அமையும் என்ற கருத்துக்கள் எழத்தொடங்கியுள்ளன.

    சமீப காலமாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கி வரும் தீர்ப்புகள் கவனம் பெற்று வருகிறது. குழந்தை ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கி அது  சர்ச்சையான பின்னர்  தீர்ப்பை உடனே திரும்பப்பெற்ற நிலையில் தற்போது போக்ஸோ வழக்கு ஒன்றில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.

    தனது 16 வயது மகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய் ஒருவர் கடநத 2023 ஆம் ஆண்டு நபர் ஒருவரின் புகார் அளித்திருந்தார். இந்த பாலியல் உறவினால் அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் தாயின் புகாரை அடுத்து அந்த நபர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்ட நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது 18 வயதை எட்டிய நிலையில் பாலியல் வன்கொடுமை  அந்த நபரே பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். எனவே இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகப்பிரசன்னா, பாதிக்கப்பட்ட பெண்ணின் நலத்தையும் அவளது குழந்தையின் நலத்தையும் கருத்தில் கொண்டு அந்த நபர் மீதான போக்ஸோ வழக்கை முடித்து வைத்துள்ளார். தற்போது சிறையில் உள்ள நபர் விவரில் விடுவிக்கப்பட உள்ளார். நீதிபதியின் இந்த முடிவு தவறான உதாரணமாக அமையும் என்ற கருத்துக்கள் எழத்தொடங்கியுள்ளன.

     

    • சேதன் என்ற 24 வயது இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.
    • சிறுமிக்கு 18 வயதுக்கு பூர்த்தியான பின்பு அப்பெண்ணை சேதன் திருமணம் செய்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு சேதன் என்ற 24 வயது இளைஞர் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.

    சிறுமியை காணவில்லை அவரது அப்பா கொடுத்த பேரில் வழக்கு பதிந்த காவல்துறை ஒரு மாதத்திற்கு பிறகு சிறுமியை மீட்டு, சேதனை கைது செய்தது.

    பின்னர் ஜாமினில் வெளியே வந்த சேதன் சிறுமிக்கு 18 வயது பூர்த்தியான பின்பு 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு குழந்தை உள்ளது.

    இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு பூந்தி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட சேதனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 80,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக அவருக்கு 4 லட்சம் ரூபாயை குற்றவாளி கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறுமியின் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டில் புகுந்து அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • குழி வெட்டி சிறுமியின் சடலத்தை கிடத்திய பின்னர் இறந்த உடலுடன் நண்பன் நீல்காந்த் பாலியல் உறவு வைத்துள்ளான்.

    இறந்தவரின் உடலுடன் பாலியல் உறவு கொள்வது சட்டப்படி குற்றமாகாது என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சடலத்துடன் உடலுறவு கொள்ளும் தன்மைக்கு நெக்ரோபிலியா என்பது அறிவியல் பெயர்.

    கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தின் கரியாபந்து மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் காணாமல் போனதாக காவல் நிலையத்துக்கு வந்த புகாரை அடுத்து நடந்த தேடுதலில் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

    பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும் கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்துடனும் உடலுறவு வைத்துக்கொள்ளப்பட்டது தெரியவந்தது.

    சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த நீல்சந்த். சிறுமியின் பெற்றோர் இல்லாத சமயத்தில் வீட்டில் புகுந்து அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    சிறுமி கத்த முயன்றதால் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு தனது நண்பன் நீல்காந்த் உதவியுடன் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உடலை புதைத்துள்ளான். குழி வெட்டி சிறுமியின் சடலத்தை கிடத்திய பின்னர் இறந்த உடலுடன் நண்பன் நீல்காந்த் பாலியல் உறவு வைத்துள்ளான். விசாரணையின்போது இந்த உண்மைகள் அனைத்தும் வெளிவந்துள்ளன.

    இந்நிலையில் இதுதொடர்பாக சத்தீஸ்கர் நீதிமன்றம் நீலச்சந்த்க்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டபோதிலும் சடலத்துடன் உடலுறவு வைத்த நண்பன் நீல்காந்த் -ஐ போக்ஸோ குற்றத்தில் இருந்து விடுவித்தது.

    இதை எதிர்த்து கொல்லப்பட்ட சிறுமியின் தாய் சார்பில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நெக்ரோபிலியா என்பது அரசியலமைப்பின் 21வது பிரிவை மீறுவதாகவும், இது கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது என்றும், மரணத்திற்குப் பிறகு ஒருவரின் உடல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதற்கும் உரிமை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

     

    தொடர்ந்து பேசிய நீதிபதிகள், உயிருள்ள மனிதனுக்கு மட்டுமல்ல... இறந்த உடலுக்கும் கண்ணியமும் நியாயமாக அணுகுமுறை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

    ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (போக்சோ சட்டம்) பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருக்கும்போது மட்டுமே பொருந்தும் என்று கூறி மனுவை நிராகரித்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டெல்லியில் இருந்து அவளது தந்தை மட்டும் மாமா மீண்டும் வீட்டுக்கே அழைத்து வந்தனர்.
    • தாத்தா தன்னை வயலுக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொள்வார்

    தனது தாத்தா, தந்தை மற்றும் மாமா தன்னை ஒரு வருடமாக பலமுறை பலாத்காரம் செய்ததாக 14 வயது கர்ப்பிணி சிறுமி வாக்குமூலம் அளித்ததன் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் அவுராயா மாவட்டத்தில் உள்ள பிதுனா கோட்வாலி பகுதியில் வசித்துவரும் சிறுமி தனது அத்தையுடன் கடந்த வியாழக்கிழமை அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

    சுமார் 10 வருடங்கள் முன்னர் பெற்றோர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சிறுமி தாயுடன் டெல்லிக்கு சென்றாள். ஆனால் 4 வருடங்கள் முன்பு அவளை டெல்லியில் இருந்து அவளது தந்தை மற்றும் மாமா மீண்டும் வீட்டுக்கே அழைத்து வந்தனர். சிறுமியின் தாய் கடந்த வருடம் உயிரிழந்துள்ளார்.

    இதனிடையே, கடந்த ஒரு வருடமாக, தந்தை, மாமா மற்றும் தாத்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று சிறுமி போலீசிடம் கூறினாள்.

    தனது தாத்தா தன்னை வயலுக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொள்வார் என்றும், தனது மாமா தனது அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைவார் என்றும், தந்தை தன்னை கட்டி வைப்பார், எதிர்ப்பு தெரிவித்தால் கொன்றுவிடுவதாக மிரட்டுவார்கள் என்றும் சிறுமி போலீசிடம் கூறினாள்.

    இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பமாக இருந்தபோது, அதை அவள் அத்தைக்கு தெரிவித்தாள், ஆனால் அத்தை அப்போது சிறுமிக்கு உதவவில்லை.

    இதனிடையே கடந்த டிசம்பர் 22 அன்று, தந்தை, மாமா மற்றும் தாத்தா தன்னை கொல்ல சதி செய்ததாகவும் அதனால் சிறுமி அத்தை வீட்டுக்கு தப்பிச் சென்று பின் காவல் நிலையத்துக்கு இருவரும் வந்துள்ளனர் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

    சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அன்றைய இரவே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலோக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.  

    சைல்டு லைன் [குழந்தைகள் ஹெல்ப்லைன்] இந்தியா - 1098; பெண்கள் ஹெல்ப்லைன் - 181; வன்முறைக்கு எதிரான புகார்களுக்கு தேசிய பெண்கள் ஆணைய ஹெல்ப்லைன் - 7827170170

    • விசாரணை நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
    • விசாரணை நீதிமன்றம் எவ்வாறு ஒரு முடிவுக்கு வந்ததது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    உடல் ரீதியான தொடுதலால் மட்டுமே அதை பாலியல் உறவு என்று எடுத்துக்கொள்ள முடியாது என போஸ்கொ வழக்கிலிருந்து உயர்நீதிமன்றம் ஒருவரை விடுவித்துள்ளது.

    போக்ஸோ வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டநபர் ஒருவர் அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    2017 ஆம் ஆண்டு மார்ச்சில், 14 வயது பெண்ணின் தாயார், தனது மகளை நபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டதாகக் குற்றம் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவருடன் ஃபரிதாபாத்தில் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டார்.

    சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த நபர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். அனால் சிறுமி போலீசிடமும், நீதிமன்றத்திலும் அளித்த வாக்குமூலத்தில், தானாக முன்வந்து குற்றம் சாட்டப்பட்டவருடன் [22 வயது] சென்றதாகவும், அவரை தனது காதலன் என்றும் காவல்துறையிடம் விவரித்தார். மேலும் அவர்கள் ஒரு வாடகை அறையில் ஒன்றாக தங்கியதாகவும் கூறினார்

    மேலும் குற்றம் சாட்டப்பட்டவருடன் நான் தங்கியிருந்த போது, அவர் என் மீது எந்தவிதமான உடல் ரீதியான தாக்குதலையும் செய்யவில்லை, என்னுடன் தவறான செயல்களில் ஈடுபடவில்லை என்றும் உடல் ரீதியான தொடுதல்[physical relations] இருந்தது என்று மட்டுமே தெரிவித்தார். ஆனாலும் விசாரணை நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்நிலையில் அவரது மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் அமித் சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    உடல் ரீதியாக தொகுதல் [physical relations] மற்றும் பாலியல் செயல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வு ஆகிய மூன்றுக்கும் சாட்சிகள் மூலம் வித்தியாசம் அறிந்து அதன் பின்தான் முடிவுக்கு வர வேண்டும் என்றும், சிறுமியுடன் உடல் ரீதியான தொடுதலே பாலியல் உறவு என விசாரணை நீதிமன்றம் எவ்வாறு ஒரு முடிவுக்கு வந்ததது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    பாதிக்கப்பட்டவர் 18 வயதுக்கு கீழ் உள்ளவர் என்பதலேயே அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வன்புணர்வு போக்ஸோ வழக்கில் சேரும். ஆனால் உடல் ரீதியான தொடுதலை மட்டுமே பாலியல் வன்புணர்வுக்கான போக்ஸோ வழக்காக கருத முடியாது.

    முந்தைய விசாரணையில் சிறுமி, உடல் - ரீதியான தொடுதல் [physical relations] என்று குறிப்பிட்டுருந்தாலும், வன்புணர்வு என்ற அர்த்தத்தில் தான் அவர் குறிப்பிட்டாரா என்று தெளிவுபடுத்தப்படவில்லை எனவே சந்தேகத்தை மனுதாரருக்கு சாதகமாக்கி மனுதாரரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 

    ×