search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூப்பர் 8"

    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
    • ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 8 மற்றும் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 20 ரன்களை அடித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.

    அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களை அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்தது.

    182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 47 ரன்களில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில், 28 பந்துகளில் 53 ரன்களை எடுத்து சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இதன்மூலம், சூர்யகுமார் யாதவ் விராட் கோலியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    விராட் கோலி இதுவரை 113 இன்னிங்ஸில் 15 முறை ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார்.

    இதனை சமன் செய்யும் வகையில், சூர்யகுமார் யாதவ் 61 இன்னிங்ஸில் 15 முறை ஆட்டநாயகன் விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.

    • முதலில் ஆடிய இந்தியா 181 ரன்களைக் குவித்தது.
    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை எடுத்தார்.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 181 ரன்களை எடுத்தது. பொறுப்புடன் ஆடி அரை சதமடித்த சூர்யகுமார் யாதவ் 53 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா 32 ரன்கள் எடுத்தார்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 47 ரன் வித்தியாசத்தில் வென்றது. அசமதுல்லா ஒமர்சாய் 26 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், ஜடேஜா, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் 10 விக்கெட்டுகளையும் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

    அதன்படி, சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும், டி20 உலகக் கோப்பை வரலாற்றிலும் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்த முதல் ஆசிய அணி என்ற அரிதான சாதனையை இந்தியா படைத்துள்ளது.

    கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் கேட்ச்களாக எடுத்திருந்த சாதனையை இந்தியா தற்போது சமன்செய்துள்ளது.

    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
    • பசல்ஹாக் பரூக்கி, ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 8 மற்றும் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 20 ரன்களை அடித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.

    அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களை அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் பசல்ஹாக் பரூக்கி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நவீன் உல் ஹக் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் ஹசரதுல்லா சசாய் மற்றும் இப்ராகிம் சத்ரான் 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குல்பதின் நயிப் 17 ரன்களை சேர்த்தார்.

    அசமதுல்லா ஒமர்சாய் 26 ரன்களை சேர்த்தார். நஜிபுல்லா சத்ரான் 19 ரன்களை சேர்க்க அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 47 ரன்களில் வெற்றி பெற்றது.

    இந்திய சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • நிக்கோலஸ் பூரன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • பில் சால்ட் 87 ரன்களை விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

    இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 குவித்தது.

    பிறகு 20 ஓவர்களில் 181 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • இரண்டு அணிகளும் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்துள்ளது.
    • வேகப்பந்து வீச்சு மூலம் முதலில் நெருக்கடி கொடுப்போம் என அமெரிக்கா கேப்டன் நம்பிக்கை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அமெரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    டாஸ் வென்ற அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் "ஆடுகளம் சிறப்பானதாக இருக்கிறது. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் முதலில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புகிறோம். கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சை அணியில் இணைத்துள்ளோம்" என்றார்.

    அமெரிக்கா அணி:-

    1. ஷயன் ஜஹாங்கீர், 2. ஸ்டீவன் டெய்லர், 3. ஆண்ட்ரிஸ் கவுஸ், 4. ஆரோன் ஜோன்ஸ், 5. நிதிஷ் குமார், 6. கோரி ஆண்டர்சன், 7. ஹர்மீத் சிங், 8. ஜாஸ்தீப் சிங், 9. நோஸ்துஸ் கெஞ்சிகே, 10. அலி கான், 11. சவுரப் நெட்ராவால்கர்.

    தென்ஆப்பிரிக்கா அணி:-

    1. டி காக், 2. ரீசா ஹென்ரிட்க்ஸ், 3. மார்கிராம், 4. ஹென்ரிச் கிளாசன், 5, டேவிட் மில்லர், 6. ஸ்டப்ஸ், 7. மார்கோ யான்சன், 8. கேஷவ் மகாராஜ், 9. ரபாடா, 10. நோர்ஜே, 11. ஷம்சி.

    • அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன.
    • சூப்பர் 8 சுற்றுக்கான விறுவிறுப்பு எகிற துவங்கியுள்ளது.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவுகளிலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் வெளியேறி அதிர்ச்சி அளித்தன.

    இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான விறுவிறுப்பு எகிற துவங்கியுள்ளது. லீக் சுற்றின் முடிவில், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள் எவை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

    லீக் சுற்று போட்டிகளை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் மொத்தம் 12 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டி ஜூன் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்று போட்டிகளின் விவரம் பின்வருமாறு..

    ஜூன் 20 காலை இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்

    ஜூன் 20 இரவு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா

    ஜூன் 21 காலை ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம்

    ஜூன் 21 இரவு இங்கிலாந்து VS தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 22 காலை அமெரிக்கா VS வெஸ்ட் இண்டீஸ்

    ஜூன் 22 இரவு இந்தியா VS வங்காளதேசம்

    ஜூன் 23 காலை ஆப்கானிஸ்தான் VS ஆஸ்திரேலியா

    ஜூன் 23 இரவு அமெரிக்கா VS இங்கிலாந்து

    ஜூன் 24 காலை வெஸ்ட் இண்டீஸ் VS தென் ஆப்பிரிக்கா

    ஜூன் 24 இரவு ஆஸ்திரேலியா VS இந்தியா

    ஜூன் 25 காலை ஆப்கானிஸ்தான் VS வங்காளதேசம்

    சூப்பர் 8 சுற்று முடிவில் அரையிறுதி சுற்றுக்கு நான்கு அணிகள் முன்னேறும். அரையிறுதி சுற்றின் இரண்டு போட்டிகளும் ஜூன் 27 ஆம் தேதியே நடைபெறுகிறது. முதல் போட்டி காலையிலும், இரண்டாவது போட்டி இரவிலும் நடைபெறுகிறது.

    அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் இரு அணிகள் ஜூன் 29 ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. 

    • முன்னணி அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறின.
    • ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏராளமான டுவிஸ்ட் சம்பவங்களுடன் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வருகின்றன. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னணி அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறின.

    இந்த தொடரில் இங்கிலாந்து அணி க்ரூப் பி-இல் இடம்பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து அணி விளையாட வேண்டிய முதல் போட்டியே மழை காரணமாக கைவிடப்பட்டது. அதன் பிறகு விளையாடிய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.

    இதைத் தொடர்ந்து ஓமன் மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தனது நெட் ரன் ரேட்டை அதிகப்படுத்தியது. இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.

    இதில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறும் சூழல் உருவானது. எனினும், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

    இதன் காரணமாக நெட் ரன் ரேட் அடிப்படையில், க்ரூப் பி-இல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

    • ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
    • பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.

    லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 32 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

     

    ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

    பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரிலிருந்து வெளியேறின.

    சி பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நியூசிலாந்து, உகாண்டா, பப்புவா நியூ கினியா அணிகள் வெளியேறின.

    டி பிரிவில் தென் ஆப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. இலங்கை மற்றும் நேபாளம் அணிகள் வெளியேறின.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 149 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது

    டிரினிடாட்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்துவருகிறது.

    வெஸ்ட் இண்டீசில் இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரூதர்போர்ட் 39 பந்தில் 68 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 40 ரன்னும், பின் ஆலன் 26 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றது. ஆட்ட நாயகனாக ரூதர்போர்டு தேர்வு செய்யப்பட்டார்.

    • தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
    • நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.

    லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 24 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

     தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை வெறும் 77 ரன்களிலும், நெதர்லாந்தை 106 ரன்களிலும் சுருட்டியது. வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இதேபோல், ஆஸ்திரேலியா அணி ஓமனை 39 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வென்றது.

    இதன்மூலம் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    பி பிரிவில் இடம்பெற்ற நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

    ×