search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா
    X

    டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா

    • தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
    • நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இதில் 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன.

    லீக் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அடுத்து நடைபெறும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், அதில் வெற்றி பெறும் இரு அணிகள் இறுதிப்போட்டிக்கும் முன்னேறும். இதுவரை 24 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளனர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    தென் ஆப்பிரிக்கா அணி இலங்கை வெறும் 77 ரன்களிலும், நெதர்லாந்தை 106 ரன்களிலும் சுருட்டியது. வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    இதேபோல், ஆஸ்திரேலியா அணி ஓமனை 39 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 36 ரன்கள் வித்தியாசத்திலும், நமீபியாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வென்றது.

    இதன்மூலம் பி பிரிவில் ஆஸ்திரேலியா அணி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    பி பிரிவில் இடம்பெற்ற நமீபியா மற்றும் ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.

    Next Story
    ×