search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடாளுமன்றம்"

    • ஆகஸ்ட் 12 வரை நடைபெற இருந்த நாடாளுமன்ற கூட்டம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது
    • நாளை இந்திய பங்குச்சந்தையில் சரிவு ஏற்படலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்

    அதானி vs ஹிண்டன்பர்க் 

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பான தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

     

    அதானி - செபி தொடர்பு 

    இதற்கிடையே ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், செபியின் தலைவரான தலைவர் மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாகத் தெரிவித்துள்ளது. எனவே தான் அதானி குழுமத்துக்கு எதிராக எந்த பொது நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

     

    பயிரை மேயும் வேலி

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் மாநிலங்களவை எம்.பி வெளியிட்டுள்ள பதிவில், யார் பாதுகாக்க வேண்டுமோ அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்கிறார், நாடாளுமன்றம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் இப்போது தான் தெரிகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

     

    திறந்த புத்தகம் 

    இதற்கிடையில் இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று அதானி குழுமம் மறுத்துள்ளது. . ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை, உள்நோக்கம் கொண்டவை, அடிப்படை ஆதாரமற்றவை. எங்களுடைய வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படைத்தன்மை கொண்டவை. ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளில் அடிப்படை ஆதாரம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய நபர்களுடன் அதானி நிறுவனம் எனது ஒரு வணிக தொடர்பும் மேற்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. செபி தலைவர் மாதாபாய் புரி புச் மற்றும் அவரது கணவரும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர். தங்களது வணிக நடவடிக்கைகள் அனைத்தும் திறந்த புத்தகம் போல வெளிப்படையாக உள்ளன என்று தெரிவித்துள்ளனர். இந்த புதிய ஹிண்டன்பர்க் அறிக்கையால் நாளை இந்திய பங்குச்சந்தையில் சரிவு ஏற்படலாம் என்று முதலீட்டாளர்கள் அச்சத்தில் உள்ளனர்அதானி குழுமத்தில் செபி தலைவரின் பங்குகள் இருபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றச்சாட்டு

     

    • மாநிலங்களவை தலைவர் அதிகார தொனியில் பேசியதால் ஜெயா பச்சன் கடுங்கோபம்.
    • மாநிலங்களவை தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.

    இந்த கூட்டத்தொடரின்போது மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சில பாஜக எம்.பி.க்கள் ஜெய பச்சன் என்பதற்கு பதிலாக ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைத்தனர். இவ்வாறு தன்னை அழைப்பதற்கு ஜெயா பச்சனுக்கு உடன்பாடு இல்லை.

    தன்னை ஜெயா பச்சன் என்று அழைத்தால் போதும், ஜெயா அமிதாப் பச்சன் என்று அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், சொந்த சாதனைகள் படைக்காத பெண்களுக்குதான் கணவர் பெயரால் அங்கீகாரம் தேவை. அதனால் தன்னை அவ்வாறு அழைக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்.

    இருந்தபோதிலும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் உள்ளிட்டவர்கள் ஜெயா அமிதாப் பச்சன் என்றே அழைத்து வந்தனர். இன்றும் அதுபோல் அழைக்கப்பட்டதால் ஜெயா பச்சன் அதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால், ஜெக்தீப் தன்கர் எனக்கு அறிவுரை சொல்ல வேண்டாம் என்ற தொனியில் பதில் அளித்தார்.

    இதனால் ஜெகதீப் தன்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெய பச்சன் கடும் வாக்குவாதம் செய்தார். மாநிலங்களவை தலைவரிடம் இருந்து எனக்கு மன்னிப்பு தேவை என்றார். ஜெயா பச்சனுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவாக அமளியில் ஈடுபட்டனர். பின்னர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர்.

    வெளிநடப்பு செய்த ஜெயாபச்சன் கூறுகையில் "ஒவ்வொரு முறையும் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. தொல்லை கொடுப்பது போன்ற வார்தைகள். நீங்கள் பிரபலங்களாக (celebrity) இருக்கலாம். ஆனால் எனக்கு கவலை இல்லை போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களை கவலைப்பட வேண்டும் என நான் கேட்கவில்லை. நாடாளுமன்றத்தில் இப்போது பேசுவதுபோல் யாரும் பேசியதில்லை. இது பெண்களுக்கு மிகவும் அவமரியாதை" இவ்வாறு ஜெயா பச்சன் தெரிவித்தார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வக்பு வாரியத்தின் சுயாட்சியை பறிக்க விரும்புகிறது- ஒவைசி.
    • முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்க பாஜக முயற்சிக்கிறது- அகிலேஷ் யாதவ்.

    மத்திய அரசு வக்பு வாரியங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் (1995) திருத்தம் கொண்டு வர இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. அப்படி திருத்தம் கொண்டு வந்தால் இந்த சட்டத்திற்காக திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்ப்போம் என பல எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளது.

    நாடு முழுவதும் உள்ள வக்பு வாரியங்களுக்கு சொந்தமான சொத்துகள் மூலம் வருடத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சொத்து மதிப்புகளை வைத்து பார்க்கும்போது இந்த தொகை குறைவு எனக் கூறப்படுகிறது.

    அதிக பொறுப்பு மற்றும் வெளிப்படத்தன்மை, பெண்களுக்கு வாரியத்தில் இடத்தை உறுதி செய்வது உள்ளிட்ட திருத்தங்களை சட்ட திருத்த மசோதாவில் மத்திய அரசு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தில் இருந்து வரும் கோரிக்கைகளின் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது.

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் "மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வரும் சட்ட திருத்த மசோதாவை நாங்கள் எதிர்ப்போம். முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்க பாஜக முயற்சிக்கிறது. இந்துக்கள், முஸ்லிம்கள் என பிரிக்கும் வேலையை மட்டுமே பாஜக செய்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    அரசின் இந்த நடவடிக்கை தவறான நோக்கம் கொண்டது என ஐயுஎம்எல்-ன் இ.டி. முகமது பாஷீர் தெரிவித்துள்ளார். மேலும் "இது தொடர்பாக சட்டம் கொண்டு வரப்பட்டால் நாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம். எதிர்க்கும் மனநிலை கொண்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்றார்.

    சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி எம்.பி. பிரியங்கா சதுர்வேதி "பாஜக தலைமையிலான அரசு பட்ஜெட் மீதான விவாதத்தில் இருந்து தப்பிக்க விரும்புகிறது, எனவே அவர்கள் வக்ஃப் பிரச்சனையை கொண்டு வந்துள்ளனர். பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரை நான் இது குறித்து கருத்து தெரிவிக்கமாட்டேன்" என்றார்

    சிபிஐ (எம்) எம்.பி. அம்ரா ராம் "வக்பு வாரியங்களை வலிமைப்படுத்துவதற்குப் பதிலாக பிரித்தாளும் அரசியலை பாஜக நம்புகிறது. அதில் தலையிட முயற்சி செய்து வருகிறார்கள்" என்றார்.

    "தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வக்பு வாரியத்தின் சுயாட்சியை பறிக்க விரும்புகிறது" என ஒவைசி அசாதுதீன் விமர்சித்துள்ளார்.

    • நாட்டில் கல்வியை பாதுகாக்க வேண்டும். முகலாயர்களின் பெயர்களை மட்டும் நீக்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது.
    • முஸ்லிம், தலித், ஏழை, மாணவ, மாணவியருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி அரசு ஆட்சி செய்கிறது.

    நாடாளுமன்ற மக்களவையில் கல்வி துறைக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பீகார் மாநில கிஷன்கஞ்ச் தொகுதி காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத் பேசும்போது கூறியதாவது:-

    நாட்டில் கல்வியை பாதுகாக்க வேண்டும். முகலாயர்களின் பெயர்களை மட்டும் நீக்குவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. முகலாயர்கள் இங்கே 300 வருடங்களாக இருந்தனர். வெறும் பெயரை மட்டுமே நீக்குவதால் அவர்கள் நீக்கப்பட்டதாகிவிடாது.

    முஸ்லிம்கள் மற்றவர்களை விட புத்திசாலிகள். மற்றவர்களை போல் நமக்கு அவர்கள் பங்களிக்க முடியும். நீங்கள் பாகுபாடு பார்க்கக்கூடாது என வேண்டுகோள் வைக்கிறேன்.

    முஸ்லிம், தலித், ஏழை, மாணவ, மாணவியருக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி அரசு ஆட்சி செய்கிறது. நாட்டில் முஸ்லிம்கள் இல்லை என்றால், பாஜக கணக்கை (நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்) தொடங்கியிருக்காது. மைனாரிட்டிகளுக்கான திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும். உதவித்தொகை திட்டம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும்.

    பட்ஜெட்டில் காங்கிரஸ் ஆட்சியில் ஜிடிபி-யில் 3.36 சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது 2.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு முகமது ஜாவத் தெரிவித்தார்.

    • இந்த சர்வாதிகார செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும்- மம்தா
    • கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் ராகுல் காந்தி சபாநாயகரிடம் வேண்டுகோள் வைத்தார்.

    பாராளுமன்ற வளாகத்தில் நுழையும்போதும், வெளியேறும்போதும் எம்.பி.க்களை மீடியாக்கள் கேமரா மூலம் படம் பிடிப்பதுடன் பேட்டி எடுப்பதும் உண்டு. இந்த நிலையில் எம்.பி.க்களிடம் பேட்டி எடுக்கக் கூடாது என மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    இது எதேச்சதிகார செயல் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். அத்துடன். இந்த சர்வாதிகார செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக ராகுல் காந்தி மக்களவையில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

    அப்போது நாடாளுமன்ற விதிகள் பற்றி ராகுல் காந்திக்கு நினைவூட்டிய ஓம் பிர்லா, இதுபோன்ற பிரச்சனைகளை தன்னுடன் நேரில் விவாதிக்க வேண்டும் என்றும், அவையில் எழுப்பக்கூடாது என்றும் கூறினார்.

    இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தப் போராட்டத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன் மீடியா நபர்களை சந்தித்து கூறினார்.

    லோக்சபா சபாநாயகர் பத்திரிகையாளர்கள் குழுவை சந்தித்து, அவர்களின் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்றும், அவர்களின் கடமைகளை நிறைவேற்ற சிறந்த வசதிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

    • பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம்
    • இப்போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியையும் பீகார் மாநிலத்திற்கு ரூ.26,000 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

    ஆந்திரா, பீகார் மாநிலங்களை தவிர தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர் கூட இந்த பட்ஜெட்டில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை விமர்சித்தன.

    இதனையடுத்து மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    இதில், மத்திய பட்ஜெட் பாரபட்சமாக போடப்பட்டுள்ளது என்பதைக் கண்டித்து பாராளுமன்றத்தில் நாளை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தது.

    இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாரபட்சமான பட்ஜெட் என்ற பதாகையுடன் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

    ×