என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க.ஸ்டாலின்"

    • இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.
    • பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை.

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவம் இதுவாகும்.

    ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 17.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது வேதனை அளிக்கிறது.

    பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

    எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

    • www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' செல்லும் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கியது.
    • TrekTamilnadu மலையேற்ற முகாம் திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

    தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், வனங்களில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து 'டிரெக்கிங்' எனப்படும் மலையேற்ற நடைபயண திட்டத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு தொடங்கியது.

    நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது காட்டு தீ போன்ற அபாயங்கள் ஏற்படும் என்பதால், இந்த மலையேற்ற நடைபயணத்துக்கு வருகிற ஏப்ரல் 15-ந்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், Trek TamilNadu இணையதளம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "TrekTamilNadu என்பது சாகசத்தை விட மேலானது. 3 மாதங்களில், 4,792 மலையேற்றப் பயணிகள் சாகச பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ரூ. 63.43 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. அதில், ரூ. 49.51 லட்சம் பயணிகளை அழைத்து சென்ற பழங்குடி இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது. சுற்றுலா பழங்குடி மக்களுக்கு பயனுள்ளதாக மாறியுள்ளது.

    காட்டுத்தீ சீசன் முடிந்தவுடன் ஏப்ரல் மாதத்தில் பாதைகள் மீண்டும் திறக்கப்படும். மலையேறுபவர்களை இயற்கை எழிலுடன் வரவேற்க தமிழ்நாடு தயாராக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார். 

    • சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்
    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், சென்னையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்த்தில், "மாநில சுயாட்சி மற்றும் தொகுதி எல்லை நிர்ணயம் தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடிதம் எனக்குக் கிடைத்தது.

    மார்ச் 22 அன்று நான் வேறு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால், அனைத்து கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கலந்துகொள்வார். கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். 

    • தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர்.
    • DELIMITATION கிடையாது, தென்மாநிலங்களுக்கான LIMITATION என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.

    தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக வரும் 22ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு அமைச்சர் கே.என்.நேரு, திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் அழைப்பு விடுத்தனர்.

    இதன்பின்பு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரேவந்த் ரெட்டி, "தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன், இது தொடர்பாக எனது கட்சி தலைமையிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்" என்று தெரிவித்தார்.

    மேலும் பேசிய அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடைபெறும் சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்தார். மத்திய அரசின் நடவடிக்கை, DELIMITATION கிடையாது, தென்மாநிலங்களுக்கான LIMITATION. இதை நாங்கள் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நாங்கள் வடஇந்தியாவை விட அதிக வரி கொடுக்கிறோம். நாங்கள் அதிக தொழில்முனைவோர்களை உருவாக்கியுள்ளோம்.

    பாஜக வளர தென்னிந்தியா அனுமதிக்காததால் தென்னிந்தியாவை பாஜக அரசு பழிவாங்குகிறது. கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா ஏன் கர்நாடகா கூட பாஜகவை தோற்கடித்துள்ளனர். அவர்களுக்கு ஆந்திராவில் கூட இல்லை. இதற்கு பெயர் தான் பழிவாங்கும் அரசியல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • 2023ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை.
    • இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் கல்வித் தரத்தை குறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. கல்வியை தவிர எந்த ஆயுதமும் தங்கள் கையில் இல்லை, கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.

    2023ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். நவோதயா பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஒரு வருடத்திற்கு ரூ.86,000 செலவு செய்கிறது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 96, குஜராத் மாநிலத்தில் 34 நவோதயா பள்ளிகள் உள்ளது. தமிழ்நாட்டின் கடன் ரூ.9.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதுபானம் மூலம் வருமானம் வருகிறது.

    மது விற்பனை இல்லாத குஜராத் மாநிலத்தில் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போடுகின்றனர். தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம்.
    • இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.

    மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    கல்வியில் இருந்து மக்களை நீக்கும் இனைத்து வேலைகளையும் தேசிய கல்விக் கொள்கை செய்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்விக் கொள்கை அல்ல, காவிக் கொள்கை.

    இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை. குலக்கல்வி திட்டத்தை கொண்டு வர தேசிய கல்விக் கொள்கை மூலம் முயற்சி- அதனால் தான் எதிர்க்கிறோம்.

    ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு மத்திய அரசு பாடம் எடுக்க வேண்டாம். இந்தியை வளர்ப்பதற்காக கொண்டு வந்தது தான் தேசிய கல்விக் கொள்கை.

    ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு 7 ஆண்டுகளாக கட்டாமல் இருப்பது தான் நாகரிகமா ? தமிழ்நாட்டில் பேரிடர் நடந்து 2 ஆண்டுகள் கடந்தும், நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது தான் நாகரிகமா ?

    இந்தியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நிதி தர மாட்டேன் என கூறுவதை விடவும் அராஜகம் இருந்து விட முடியுமா ?

    திமுக எம்பிக்களின் போர்க்குணத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது.
    • தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது.

    மத்திய பாஜக அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

    மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் தமிழக முழுவதும் திமுக பொதுக்கூட்டம் நடைபெறுகின்றனர்.

    அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் வளைந்த முதுகோடு அடகு வைத்த ஆட்சி தமிழகத்தில் நடந்தது.

    திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது.

    கொள்ளைப்புறம் வழியாக வலதுசாரி சிந்தனைகளை தமிழ்நாட்டில் புகுத்த பாஜக முயற்சிக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கான குரலாக திமுக எப்போதும் ஒலிக்கும்.

    பிரதமர் மோடி சர்வாதிகார எண்ணத்தோடு செயல்படுகிறார். மாநில அரசுகள் டெல்லிக்கு காவடி தூக்கும் நிலைமையை மாற்றி, அதிகார பகிர்வுக்கு வழிவகுப்பேன் என பிரதமர் மோடி சொன்னார்.

    வரி விதிப்பில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. கூட்டாட்சி தத்துவத்தை ஆதரிப்பதாக சொன்ன நீங்கள், அப்படி செய்ததாக ஒரு சாட்சியை காட்ட முடியுமா ?

    மாற்றுக்கட்சி ஆளும் மாநிலங்களை பழிவாங்க மாட்டேன் என சொல்லிவிட்டு, பழிவாங்கும் அரசியலை மட்டுமே செய்கிறீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய அரசு.
    • பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றன.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - இந்தித் திணிப்பு என்று தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்! கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று மாலை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகின்றன…

    திருவள்ளூரில் உங்களைச் சந்திக்கிறேன்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை சந்தித்த தமிழக குழு, சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தது.

    இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சரை தி.மு.க. குழுவினர் நேரில் சந்தித்தனர்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை அமைச்சர் பொன்முடி, எம்.பி. அப்துல்லா உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்குமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

    இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    அப்போது தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

    தொகுதி மறுவரையறை தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கும் தி.மு.க. குழு அழைப்பு விடுத்தது.

    • ஜெகன் மோகனை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 5-ந் தேதி தலைமை செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்வேறு மாநில முதல்-மந்திரிகளுக்கும், கட்சி தலைவர்களுக்கும் முறையாக அழைப்பு விடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

    ஒவ்வொரு மாநிலத்துக்கும் தலா ஒரு அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழு சென்று இந்த கருத்தை விளக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

    அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி அமைக்கப்படவுள்ள கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    கேரளாவுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி, ஒடிசா மாநிலத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் செல்கின்றனர்.

    இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை தமிழக குழு சந்தித்தது.

    ஜெகன் மோகனை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

    தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் பல்லா சீனிவாசராவுடனும் ஜெகன் மோகனை சந்தித்து பேசிய தி.மு.க. குழு, சென்னையில் வரும் 22-ந்தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க. குழு அழைப்பு விடுத்துள்ளது.

    • தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.

    சென்னை:

    தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மத்திய அரசின் செயல்களை மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்" என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் மார்ச் 12-ந்தேதி மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.

    திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். 

    • இல.கோபாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.
    • தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்

    சென்னை:

    மணிப்பூர் மாநில ஆளுநரும், மேற்கு வங்காள மாநிலத்தின் பொறுப்பு ஆளுநருமான இல.கணேசனின் சகோதரர் இல.கோபாலனின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர். பிறந்தநாள் காணும் இல.கோபாலனுக்கு முதல்வர் ஸ்டாலின் மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி வாழ்த்தினார்.

    இதேபோல், நடிகர் ரஜினிகாந்த், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள், ஜி.கே.வாசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

    ×