search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகிழக்கு பருமழை"

    • தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது.

    திருவாரூர்:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் நேற்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    திருவாரூர் பகுதியில் நேற்று வெயிலின் தாக்கம் இன்றி இருண்ட நிலை நிலவியது. அவ்வப்போது தூறல் மழை பெய்து வந்தது. நேற்று மாலை முதல் அங்கு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் திருவாரூரில் பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    • மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

    இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றின் மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

    அடை மழை காரணமாக மதுரை நகரில் உள்ள ஆத்திக்குளம் கண்மாயில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. கரை பலவீனமாக இருந்தால் சிறிது நேரத்தில் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதேபோல் புளியங்குளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

    இதனால் செல்லூர், அய்யர் பங்களா, ஆத்திக்குளம், நரிமேடு உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இதைதொடர்ந்து, மதுரை செல்லூர் பகுதியில் நிரந்தரமாக வெள்ள பாதிப்பை தடுக்க, உபரி நீர் கால்வாய் அமைக்கும் பணிகள் 2 நாட்களாக இரவு, பகலாக நடத்தட்டு வந்தது.

    இந்நிலையில், கால்வாயில் நேற்று இரவில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    செல்லூர் கண்மாயில் இருந்து வைகை ஆற்றுக்கு செல்லும் இந்த கால்வாய் மூலம், பந்தல்குடி கால்வாயில் செல்லும் அதிகளவு தண்ணீரை குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கண்மாயை சுற்றிய பகுதிகளில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

    • மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • தலைமைச் செயலாளர், பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக வணிக வரித்துறை அமைச்சர் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி வைத்தேன்.


    மேலும், மதுரை மாவட்ட கலெக்டரையும் தொடர்பு கொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன்.

    குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும் பொறியாளர்களும் பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


    மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.


    தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • மலை ரெயில் போக்குவரத்து 2 நாட்கள் ரத்து.
    • 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சதளவில் நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன.

    மேட்டுப்பாளையம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக பலத்த மழை கொட்டி வருகிறது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது. இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே மலைரெயில் தண்டவாளத்தில் மண் சரிவு மற்றும் பாறை, மண் ஆகியவை விழுந்து தண்டவாளங்கள் சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று குன்னூர் இடையே உள்ள மரப்பாலம், பர்லியாறு, கே.என்.ஆர், ஹில்குரோவ், அடர்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால் மலைரெயில் பாதையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சதளவில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன.

    அதில் இருந்து தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல தண்டவாளத்தில் விழுந்து அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேட்டுப்பாளையம் ரெயில்வே பணிமனை ஊழியர்கள் மழை பெய்து கொண்டே இருந்ததால் தண்டவாளத்தில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளனவா என ஆய்வு செய்ய சென்றனர்.

    அப்போது தான் இந்த நீர்வீழ்ச்சிகள் உருவாகி இருந்ததை கண்டனர். மேலும் சில இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக அவர்கள் ரெயில்வே அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மலைரெயில் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்-பர்லியாறு இடையே முதல் கொண்டை ஊசி வளைவின் அருகே பழமை வாய்ந்த ராட்சத மரம் ஒன்று சாலையின் நடுவே முறிந்து விழுந்தது.

    இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து வந்த வாகனங்களும், குன்னூரில் இருந்து வந்த வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    இதுகுறித்து தகவலறிந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், போலீசார் சாலையில் விழுந்து கிடந்த ராட்சத மரத்தை 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி அகற்றினர்.

    இதனால் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் வண்டிச்சோலை, பெள்ளட்டி மட்டம், பாய்ஸ் கம்பெனி, வண்டிச்சோலை, மூன்று ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது.

    குன்னூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குமார் மற்றும் தாசில்தார் கனி சுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில் மரங்கள் அகற்றப்பட்டது.

    இன்று அதிகாலை குன்னூர் அருகே உள்ள பிளாக்பிரிட்ஜ்-சப்ளை டிப்போ சாலையில் 3 மரங்கள் அடுத்தடுத்து மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால்

    மின்சாரத்துறையினர் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
    • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழை விட்டுவிட்டு பெய்து வருவததால், சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதற்கிடையில், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


    இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை நிலவரம், மீட்பு நிவாரண நடவடிக்கைகள் குறித்தும், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் இருப்பு விவரங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.

    மேலும் கட்டுப்பாட்டு மையத்திற்கு வரும் புகார்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    • வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • இன்று புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது.

    இதனையொட்டி வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • காற்றின் வேகமானது 35 கி.மீ - 65 கி.மீ வரை வீசக்கூடும்.
    • மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பாக நாகை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மிக அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நாகை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3500-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    மீன்வளத் துறையினரின் உத்தரவின் பெயரில் ஏற்கனவே கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரைத் திரும்பி வருகின்றனர்.

    காற்றின் வேகமானது 35 கி.மீ - 65 கி.மீ வரை வீசக்கூடும். மேலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • நாளை மறுநாள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், சில இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

    தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதிகாலை 5.30 மணிக்கு உருவானது. இது இரண்டு நாட்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதி மற்றும் புதுச்சேரி நோக்கி நகரும்.

    தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதுதவிர தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (புதன்கிழமை) அல்லது நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் இன்று அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    அந்த வகையில், 15 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    • மழை தொடர்பான புகார், மீட்பு பணிகளுக்கு 1913 (150 இணைப்புகள்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
    • மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி அடுத்த 48 மணிநேரத்தில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மறுநாள் (அக். 16-ம் தேதி) அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதன்படி சென்னையில் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.

    மழை தொடர்பான புகார், மீட்பு பணிகளுக்கு 1913 (150 இணைப்புகள்) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    கட்டுப்பாட்டு அறையை 044-25619204, 2561 9206, 25619207 ஆகிய எண்களையும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.

    chennaicorporation.gov.in இணையதளம் வாயிலாகவும், நம்ம சென்னை செயலி வாயிலாகவும், மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் மழை தொடர்பான புகார்களுக்கு மாவட்ட வாரியாக:-

    காஞ்சிபுரம் மாவட்டம்:

    ஆட்சியர் அலுவலகம் உதவி எண்: 044-27237107

    வாட்ஸ்அப் : 8056221077

    செங்கல்பட்டு மாவட்டம்:

    பேரிடர் கட்டுப்பாட்டு மையம் உதவி எண்: 1077

    மாவட்ட ஆட்சியர்அலுவலகம் உதவி எண்: 044-27427412, 044-27427414.

    வாட்ஸ்அப் : 9944272345

    நாகப்பட்டினம் மாவட்டம்:

    கட்டுப்பாட்டு அறை எண் : 04365-1077

    கட்டணமில்லா தொலைபேசி எண் : 1800-233-4233

    விழுப்புரம் மாவட்டம்:

    கட்டுப்பாட்டு அறை எண் : 04146 223265

    தஞ்சாவூர் மாவட்டம்:

    கட்டுப்பாட்டு அறை எண் : 04362-2301213

    வாட்ஸ்அப் : 93450 88997

    அரியலூர் மாவட்டம்:

    கட்டுப்பாட்டு அறை எண் : 04329 228709

    வாட்ஸ்அப் : 9384056231

    திருவள்ளூர் மாவட்டம்

    கட்டுப்பாட்டு அறை எண் : 044-27664177, 044-27666746

    வாட்ஸ்அப் : 9444317862

    தாம்பரம் மாநகராட்சி :

    உதவி எண்கள் : 18004254355, 18004251600

    வாட்ஸ்அப் : 8438353355

    கன்னியாகுமரி மாவட்டம்:

    உதவி எண்கள் : 1077 , 04652 231077

    வாட்ஸ்அப் : 9384056205.

    • தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு விடுமுறை.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

    • வடகிழக்கு பருவமழை நாளை முதல் தொடங்கவுள்ளது.
    • சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    வடகிழக்கு பருவமழை நாளை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

    இதற்கிடையே, வடகிழக்கு பருவமழையையொட்டி நாளை சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவலால் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் மோதியது.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வடகிழக்கு பருவமழையைப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கிறோம்.

    சமூக வலைத்தளங்களில் விஷமிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம். அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


    • கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.
    • அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்கக்கடலில் நாளை உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பருவமழை தொடங்க காரணமாக அமைய உள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பருவமழை தொடங்கிய நிலையில், இந்தாண்டு முன்கூட்டியே தொடங்குகிறது.

    இதன் எதிரொலியால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது.

    அரக்கோணத்தில் 300 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன் நேரடி தொடர்பில் தேசிய பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் உள்ளனர்.

    ×