என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் சேவைகள்"
- ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.
- காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
லண்டன்:
உலகம் முழுவதிலும் உள்ள பொது போக்குவரத்தில் ரெயில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. போக்குவரத்து நெரிசல் இல்லாதது, குறைந்த செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரெயிலில் பயணம் செய்வதையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இங்கிலாந்து முழுவதும் ஜி.எஸ்.எம்.ஆர். எனப்படும் ரேடியோ அமைப்பில் கோளாறு ஏற்பட்டது. இது ஓட்டுனர்களுக்கும், ஆபரேட்டர்களுக்கும் இடையே பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பு அமைப்பு ஆகும்.
இதில் கோளாறு ஏற்பட்டதால் ரெயிலை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பல வழித்தடத்தில் ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல ரெயில்கள் தாமதமாக சென்று சேர்ந்தன. குறிப்பாக தலைநகர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் செல்லும் எலிசபெத் வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் நிறுத்தப்பட்டன.
இதனையடுத்து ரெயில் புறப்படும் நேரம் போன்ற விவரங்களை செயலியில் சரிபார்த்துக்கொண்டு வரும்படி பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர். பரபரப்பாக இயங்கும் காலை நேரத்தில் இந்த ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
பின்னர் தொழில்நுட்ப குழுவினர் அங்கு விரைந்து ரேடியோ அமைப்பில் ஏற்படும் கோளாறை சரிசெய்தனர். அதன்பிறகே ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின.
- முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
- சூலூர் ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
கோவை,
கோவை சூலூர் ரெயில் நிலைய தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந் தேதி) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் நாளை 2 சிறப்பு மெமு ரெயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சூலூர் ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாளை (25-ந் தேதி) காலை 9.05 மணிக்கு புறப்பட இருந்த கோவை- சேலம் வண்டி எண் 06802, முன்பதிவு செய்யப்டாத மெமு சிறப்பு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட இருந்த சேலம்- கோவை ரெயில் எண் 06803 முன்பதிவு செய்யப்படாத மெமு சிறப்பு ரெயில் முழுமையாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி-ராமேஸ்வரம் மற்றும் மதுரை-ராமேஸ்வரம் இடையே இயங்கக்கூடிய பயணிகள் ரெயில்கள் இன்று முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை புறப்படவேண்டிய சேது எக்ஸ்பிரஸ் ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி புறப்பட வேண்டிய விரைவு ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரரை இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரெயில் ராமேஸ்வரம் மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஒக்காவிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு ரெயில் மதுரை வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
16ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட வேண்டிய ராமேஸ்வரம்-ஒக்கா விரைவு ரெயில் ராமேஸ்வரம்-மானாமதுரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி மற்றும் மன்னார்குடி ஆகிய மார்க்கத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் உழவன் ரெயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் இருந்து திருச்சி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழகத்தில் விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் சூரிய ஒளி மின்நிலையத்தை அமைத்துள்ளது.
இந்த 300 மெகாவாட் சூரிய ஒளிமின் நிலையத்தை மத்திய மந்திரி பியூஷ் கோயல் நெய்வேலியில் நடந்த விழாவில் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
இதை தொடர்ந்து, என்.எல்.சி. இந்தியா நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை, அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் ஆய்வுத்துறையுடன் இணைந்து மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி பணிக்கான ஒப்பந்தம் மத்திய மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் கையெழுத்தானது.
அதன்பின்னர் மத்திய மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியதாவது:-
என்.எல்.சி. நிலக்கரி நிறுவனத்தில் இருந்து வடமாநிலத்துக்கு ரெயில் மூலம் நிலக்கரி எடுத்து செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம்-கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக ரெயில் சேவைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இயக்கப்படும் அந்த் தோதியா ரெயில் கடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல வேண்டும் என என்.எல்.சி.நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த ரெயில் கடலூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் வேலை கேட்கிறார்கள். வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு தொகை என்.எல்.சி.நிர்வாகம் வழங்கி வருகிறது. இதனால் வேலை அவர்களுக்கு உறுதியானது அல்ல. என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சார்பில் போதிய ஊதியம் வழங்கவில்லை என கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சராசரி ஊதியத்தை விட அதிகமாக வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews